R4826 (page 158)
“””நீதியுள்ளவைகளெவைகளோ.”” இங்கு நமக்கு மற்றுமொரு வரையறைகூடக் காணப்படுகின்றது. சரியாய் / நியாயமாய்க் காணப்படுபவைகளே, நீதியுள்ளவைகளாக இருக்கின்றன. நீதி மற்றும் நியாயம் என்பது ஒரே பொருளையுடைய வார்த்தைகளாகும். நீதியுள்ளவைகளும், அன்புள்ளவைகளும் ஒன்றாகவே இருக்கின்றது என்று பெரும்பாலும் எண்ணப்படுகின்றது; உதாரணத்திற்குப் பொன்னான பிரமாணமாகும்; “”மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்றாயோ, அதையே நீ மற்றவர்களுக்குச் செய்.”” இது அன்பிற்கான பிரமாணமல்ல, மாறாக நீதிக்கான சட்டமாக இருக்கின்றது. மற்றவர்கள் நமக்கு எதைச் செய்துவிடக்கூடாது என்று எண்ணுகின்றோமோ, அதை மற்றவர்களுக்குச் செய்திடுவதற்கு நமக்கும் உரிமையில்லை. பொன்னான பிரமாணத்தை நாம் கைக்கொள்ளுகையில் நாம் மாபெரும் அன்பின் பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களாய் இராமல், மாறாக சரியான/நீதியான திசையில் நாம் ஓர் அடியெடுத்து வைத்தவர்களாய் இருக்கின்றோம். யாரும் நீதியாய்க் காணப்படுவதற்கு முன்னதாக, அன்பைக் குறித்துச் சிந்திக்க வேண்டாம். அன்பு என்பது நீதியைக்காட்டிலும் கொஞ்சம் அதிகமானதாகும். அன்பானது நீதியைக்காட்டிலும் கொஞ்சம் மேலானதாய் இருக்கின்றது. நீதிக்கும் அதிகமாய் எதிர்பார்த்திடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. நீதிக்கும் அதிகமாய் நாம் பெற்றுக்கொள்ளும் எதுவும் அன்பாகும், தயவாகும்.
அப்போஸ்தலரால் பரிந்துரைக்கப்பட்டவைகளை நாம் சிந்திக்கும் விஷயத்தில், நாம் முதலாவதாக நம்முடைய போக்கைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். நீதியானதும், நியாயமானதுமான இந்த விஷயங்களைக் குறித்துத்தான் நாம் எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றோமா என்று நாம் ஆராய்ந்து கவனிக்க வேண்டும். இவ்விஷயத்தில் நாம் ஒருபோதும் தவறான அபிப்பிராயங்கள் கொண்டிருக்கக் கூடாது. நீதியே நம்முடைய ஜீவியங்களுக்கான, நடத்தைகளுக்கான பிரமாணமாக காணப்பட வேண்டும். இவைகளைக் (நீதியானவைகளைக்) குறித்துச் சிந்திக்கையில், நாம் மற்றவர்களுடைய நடத்தைத் தொடர்புடைய விஷயத்தில் சிந்திப்பதற்கு இயல்பாகவே நடத்தப்பட்டுவிடுவோம். உதாரணமாக பல்வேறு காரியங்களினால் ஏற்படும் தாக்கங்களைக்குறித்து நாம் சிந்தித்துவிடக்கூடும். நமக்கோ அல்லது வேறெங்கோ நடைப்பெற்ற அநீதிகளின் மீது நமது மனதின் கவனத்தை நாம் செலுத்திவிடக்கூடும்; ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்ற அநீதியின் மீதோ, தொழிலில் ஏற்பட்ட அநீதியின் மீதோ நமது மனதின் கவனத்தை நாம் செலுத்திவிடக்கூடும். இப்படியாகக் கவனம் செலுத்தி, சிந்திப்போமானால், அநேகம் குப்பைகளைக் குவித்துக்கொள்பவர்களாய் இருப்போம். இப்படியான காரியங்கள் மீது நம்முடைய எண்ணங்கள் செல்லக் கூடாது. நாம் நல்லவைகளையும், மேலானவைகளையும், சந்தோஷமானவைகளையும் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்; இந்தத் தற்கால ஜீவியத்திற்கான நற்காரியங்களை மாத்திரமல்லாமல், வரவிருக்கும் ஜீவியத்திற்கான ஆசீர்வாதமான காரியங்களைக்குறித்தும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் இப்படியாக நம்முடைய மனங்களானது, எப்போதும் நீதியானவைகளுக்கு இசைவாகக் காணப்பட வேண்டும்.”