R5621 – நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

R5621 (page 35)

நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்

IMPUTATION AND APPLICATION OF OUR LORD'S HUMAN LIFE-RIGHTS

“””எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார்” எனும் வார்த்தைகள் குறிப்பதென்ன என்பதைப் புரிந்துகொள்வதில் தேவனுடைய ஜனங்களில் அநேகருக்குச் சிரமம் இருப்பதாகத் தெரிகின்றது. ஆதாமுக்கும், அவரது சந்ததிக்குமான மீட்கும்பொருளெனத் தமது மனுஷீக ஜீவனை நமது கர்த்தர் இயேசு கொடுத்துவிட்டாரென்றால், “”குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன், நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்” என்று நாம் வாசிக்கிறபடி, அவரது கிருபையினை ஏற்றுக்கொள்பவர்களை நீதிமானாக்குகையில் மனுஷீக ஜீவனுக்கான உரிமைகளைக் கொடுக்கத்தக்கதாக, எப்படி அவர் இப்பொழுது அவ்வுரிமைகள் எதையேனும் பெற்றவராய் இருக்கமுடியும்? என்று கேள்வி கேட்கின்றனர் (யோவான் 3:36).

இந்தக் கேள்விக்கான பதிலைப் புரிந்துகொள்வதற்கு, மீட்கும்பொருள் கொடுக்கப்படுகிற காரியத்திற்குப் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவதாக நமது கர்த்தரால் அவரது முப்பதாம் வயதின்போது தண்ணீர் ஞானஸ்நானத்தினால் அடையாளப்படுத்திக் காண்பிக்கப்பட்ட அவரது அர்ப்பணமானது, தேவனுக்கு அவரது ஜீவனை அவர் ஒப்புக்கொடுப்பதை, கையளிப்பதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. அவர் ஒப்புக்கொடுத்த ஜீவனானது, பூரண மனுஷீக ஜீவனாக இருந்தது மற்றும் இதற்கான முழு உரிமையையும் உடையவராய் அவர் இருந்தார். அவர் “”பரிசுத்தரும் குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமாய்”” இருந்தார் என்று பரிசுத்த பவுல் அடிகளார் நமக்குத் தெரிவிக்கின்றார் (எபிரெயர் 7:26). நமது கர்த்தர் நேரடியான விதத்தில் அதாவது ஒரு மனித தகப்பனிடமிருந்து தமது ஜீவனைப் பெறும் நேரடியான விதத்தில் ஆதாமின் சந்ததியினரிலுள்ள ஓர் அங்கத்தினனல்ல; ஆகையால் அவரது ஜீவனானது, மீதமுள்ள உலகத்தாருக்கு இருப்பது போன்று ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட ஜீவனாக இருக்கவில்லை. இதற்குமேல் எதுவும் அவசியப்படாது. ஆதாமின் ஜீவனுக்கும், பூரணத்திற்கும் முழுக்க சமமானதை, கர்த்தர் ஒப்புக்கொடுத்துவிட்டார். ஆனால் அவர் தம்முடைய ஜீவனை ஆதாமின் கரங்களில் ஒப்புக்கொடுக்கவில்லை; அதை வேறு யாருக்கும் கொடுத்திடாமல், அவர் அதைப் பிதாவின் கரங்களில் மாத்திரமே கொடுத்திட்டார்.

நம்முடைய மீட்பர், அவரது மூன்றரை வருட ஊழியங்களின்போது, தம்முடைய ஜீவனைக் கொடுத்துக்கொண்டு வந்தார். அந்த வேலையைக் கல்வாரியில் “”முடிந்தது”” என்று கூறி நிறைவேற்றி முடித்தார். அவர் அங்கு மரணத்திற்குள்ளான தம்முடைய ஸ்நானத்தினை நிறைவேற்றி முடித்தார்; அவர் முடிவுபரியந்தம் தம்முடைய சுயத்தை ஒப்புக்கொடுத்துக்கொண்டு வந்தார். ஆனாலும் அந்த மனுஷீக ஜீவனை ஆதாமிற்கும், அவரது சந்ததியாருக்கும் அவர் இன்னமும் பயன்படுத்திடவில்லை. அவர் அதைப் பிதாவினுடைய கரங்களின் வசத்தில் கொடுத்து மாத்திரம் வைத்துள்ளார். அது பறிக்கொடுக்கப்படாத ஜீவனாகும்; அது எங்கும் அடமானம் வைக்கப்படாத ஜீவனாகும்; அது பறிமுதல்செய்யப்படாத ஜீவனாகும். அவர் பிதாவினுடைய திட்டத்திற்கு இசைவாக, தம்முடைய ஜீவனை ஒப்படைக்க மாத்திரமே செய்தார் (லூக்கா 23:46).

இரண்டு தளங்களில் ஜீவனுக்கான உரிமைகள்

பிதா அவரை மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பின போது, அவர் இயேசுவை ஓர் ஆவிக்குரிய ஜீவியாக்கினார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் (1 பேதுரு 3:18). அவரிடமிருந்து அவரது பூமிக்குரிய ஜீவன் எடுக்கப்பட அவர் அனுமதித்ததில் காட்டின அவரது கீழ்ப்படிதலுக்கான வெகுமானமாக அவர் புதிய சுபாவத்தில் உயிர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய ஜீவனைப் பெற்றுக்கொண்டார். ஆனால் அவர் பூமிக்குரிய ஜீவனுக்கான தம்முடைய உரிமையினை இழந்துபோய்விடவில்லை/பறிக்கொடுத்திடவில்லை; ஆகையால் ஒரு புதுச்சிருஷ்டியான அவர், பூரண மனுஷீக ஜீவனுக்கான இந்த உரிமையினைத் தொடர்ந்து உடையவராய்க் காணப்பட்டார். பூரண ஜீவனுக்குரிய அனைத்தும் அவருக்கு உரியதாய் இருந்தது. தம்முடைய ஜீவனை எடுத்துப்போடுவதற்கு அவர் யூதர்களை அனுமதித்தார், ஆனாலும் ஒருபோதும் ஜீவனுக்கான தமது உரிமையினை அவர் துறந்திடவுமில்லை, இழந்துபோய்விடவுமில்லை. ஆகையால் அவர் பிதாவினால் ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்பட்டபோது, அவர் ஆவிக்குரிய சுபாவத்திற்கான உரிமையினை மாத்திரமல்லாமல், பூமிக்குரிய சுபாவத்திற்கான உரிமையையும்கூட உடையவராய் இருந்தார்; ஆனால் இந்தப் பூமிக்குரிய சுபாவத்தினைத் தமக்கென்று அவர் பயன்படுத்தப்போகிறதில்லை; ஏனெனில் திவ்விய சுபாவத்தையுடைய யார் ஒருவரும் பூமிக்குரிய சுபாவத்தினைப் பயன்படுத்துவதுமில்லை, அதற்காக விருப்பம் கொள்வதுமில்லை. ஆதாமுக்கும், அவரது சந்ததியாருக்கும் இலவசமாய் மனுஷீக ஜீவனைக் கொடுப்பதற்கான, அருளுவதற்கான உரிமையே அவரது உரிமையாய் இருந்தது மற்றும் இந்த நோக்கத்தினை அவர் உலகத்திற்கு வந்தபோது, மனதில் கொண்டவராய் இருந்தார்.

ஆகையால் கர்த்தராகிய இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து, நாற்பது நாட்கள் கழித்து, உன்னதத்திற்கு ஏறிப்போனபோது, அவர் பெற்றிருந்த உரிமைகள் அனைத்தையும் உடையவராகவே இருந்தார். மனுஷீக ஜீவனுக்கான உரிமையினை ஒருபோதும் அவர் பறிக்கொடுக்காததால், அந்த உரிமை அவரிடத்தில் இருந்தது; தம்முடைய கீழ்ப்படிதலுக்கு வெகுமானமாகக் கிடைத்த திவ்விய சுபாவத்தையும்கூட ஒரு மேலான உரிமையையும்கூட, ஒரு மேலான சுபாவத்தையும்கூட அவர் உடையவராய் இருந்தார். ஆனால் அவர் உன்னதத்திற்கு ஏறினபோது, அவர் தம்முடைய பலியின் புண்ணியத்தினை மனுக்குலத்தின் உலகத்திற்காகப் பயன்படுத்திடவில்லை; ஒருவேளை பயன்படுத்தியிருந்தால் ஒட்டுமொத்த உலகமானது பொல்லாங்கனுக்குள் இப்பொழுது வீழ்ந்து கிடக்காது (1 யோவான் 5:19). ஒருவேளை நம்முடைய மீட்பர் பரத்திற்கேறினபோது, தம்முடைய புண்ணியத்தினைப் பயன்படுத்தியிருப்பாரானால், அது உலகத்தினுடைய பாவங்களை நிவர்த்திச் செய்திருந்திருக்கும்; ஆனால் அவர் இதைச் செய்யவில்லை. சபை மாத்திரமே உலகத்தின் மீதுள்ள ஆக்கினைத் தீர்ப்பினின்று தப்பித்துள்ளது என்று வேதவாக்கியங்களானது நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது (ரோமர் 8:1). இன்னமும் உலகமானது பொல்லாங்கனுக்குள் கிடக்கின்றது. இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளவர்களே, இந்த ஆக்கினையினின்று தப்பித்துக்கொண்ட ஒரே ஜனங்களாகக் காணப்படுகின்றனர். வேறு யாருமல்ல, அர்ப்பணிக்கப்பட்ட வகுப்பார் மாத்திரம் கிறிஸ்துவிடமிருந்து புண்ணியத்தினையும், நீதிமானாக்கப்படுதலையும் பெற்றுக்கொண்டவர்களாய் இருக்கின்றனர்.

சபைக்குத் திரும்பக்கொடுத்தலின் காரியங்கள் சாற்றப்படுகின்றது

அப்படியானால் எப்படி நமது கர்த்தர் சபைக்கு அப்புண்ணியத்தினைப் பயன்படுத்திடுவார்? நேரடியாக இல்லை என்று நாம் பதிலளிக்கின்றோம். ஒருவேளை அவர் தமது புண்ணியத்தினை நேரடியாய்ச் செயல்படுத்திடுவாரானால், அது சபைக்கு மனுஷீக ஜீவனை, மனுஷீக பூரணத்தைக் கொடுத்துவிடும். தேவன் சபைக்குச் சில மேலானவைகளை வைத்திருக்கின்றார் – அதாவது இயேசு அடைந்திட்டதான அதே திவ்விய சுபாவத்தினைச் சபை அடைய வேண்டும் என்று தேவன் திட்டம் பண்ணியுள்ளார். இதனை சபை இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலம் அடைந்திடும். இது குறிப்பது என்னவெனில் பிதாவின் சித்தத்திற்குக் கர்த்தர் தம்முடைய மனுஷீக ஜீவனைப் பலிசெலுத்தி, தம்முடைய பூமிக்குரிய உரிமைகளைக் கொடுத்தது போன்று, அவரோடுகூடப் பங்கடைய வேண்டுமெனில், அவரது மணவாட்டி வகுப்பாரில் அங்கத்தினர்களாகும் அனைவரும்கூட இப்படியாகவே செய்திட வேண்டும். அவரோடுகூட நாம் பாடுபட்டால் மாத்திரமே, அவரோடுகூட நாம் ஆளுகை செய்ய முடியும் (2 தீமோத்தேயு 2:11,12) என்பதேயாகும்.
“”ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24). பின்னர் “”நான் எங்கே இருக்கிறேனோ, [R5621 : page 36] அங்கே என் சீஷனும் இருப்பான்”” (யோவான் 12:26). இப்படியாக யாரெல்லாம் இந்தச் சுவிசேஷ யுகத்தில் செய்வார்களோ, அவர்கள் அதே திவ்விய சுபாவத்தையும், அதே மகிமையையும், அதே அழியாமையையும் அடைவார்கள் ஆனால் வித்தியாசம் என்னவெனில் நமது கர்த்தர் எப்போதுமே அவர்கள் அனைவருக்கும் தலையாக இருப்பார்; தம்முடைய சரீரமாகிய சபையின் மீது பிரதானமானவராய் இருப்பார் மற்றும் அவர்கள் எப்போதும் அவரது அங்கத்தினர்களென, மகிமையில் காணப்படும் சபையாக இருப்பார்கள்.

இயேசு பரிசுத்தமானவராகவும், மாசில்லாதவராகவும் காணப்படுவது அவசியமாய் இருந்ததானால், சபை சீரழிந்த மனித சுபாவத்தில் காணப்படுகையில், சபை எப்படிப் பிதாவுக்கு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவர்களாகிட முடியும்? என்ற அடுத்த கேள்வி எழும்புகின்றது. இயேசுவின் சீஷர்களாகும் இந்த வகுப்பாருடைய குறைவுகளையும், பூரணமின்மைகளையும் மூடப்படத்தக்கதாக, அவர் தம்முடைய பலியின் புண்ணியத்தினை இவர்களுக்குத் தரிப்பிக்கின்றார்/சாற்றுகின்றார் என்று வேதாகமம் பதிலளிக்கின்றதாய் இருக்கின்றது. Give/கொடுப்பதற்கும், impute/சாற்றுவதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தினை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் எதிர்க்காலத்தில் தம்முடைய புண்ணியத்தினை உலகத்திற்குக் கொடுத்திடுவார். ஆனால் இப்பொழுதோ அவர் அதைச் சபைக்குச் சாற்றுகின்றார்.

சாற்றப்படுதல் என்று சொல்லுகையில், ஒருவேளை சபையானது பூமிக்குரிய சுபாவத்திலேயே, உலகத்தாரைப்போன்று இருந்துவிட்டால், அவர்களும் போகப்போக உலகத்தைப் போன்று, சீர்க்கெட்ட நிலைமையினின்று மனித பூரணத்திற்கு வந்திடுவதற்கான உரிமையினை உடையவர்களாய் இருப்பார்கள். இயேசு தம்முடைய மரணத்தின் வாயிலாக சபைக்கும், மீதமுள்ள ஆதாமின் சந்ததிக்கும் அந்த உரிமைகள் யாவற்றையும் கொடுத்திடும் சிலாக்கியத்தினைப் பெற்றுக்கொண்டவரானார். ஆனால் இந்த வகுப்பார், அதாவது சபை மனித பூரணத்திற்கான அந்த உரிமைகள் அனைத்தையும் துறந்துவிடுகின்றனர். நாம் நம்மையே தேவனுக்கு அர்ப்பணிக்கையில், பூமியின் மற்றும் பூமிக்குரிய காரியங்களின் சுதந்தரவாளிகளாகுவதற்கான நம்முடைய உரிமைகளை நாம் துறந்துவிட்டோம்; அதாவது அவற்றைக் கையளித்துவிடும் விதத்தில் மாத்திரமே நாம் துறந்துவிடுகின்றோம். விசுவாசத்தில், இயேசு ஏற்றகாலத்தில் மனுக்குலத்தின் ஒட்டுமொத்த உலகத்திற்கும் உரியதான திரும்பக்கொடுத்தலின் அதே ஆசீர்வாதங்களை நமக்கும் கொடுத்திருந்திருப்பார் என்று நாம் நம்புகின்றோம். விசுவாசத்தினாலே அந்த ஆசீர்வாதங்களை நாம் ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தினாலே அவற்றைக் கையளித்தும் விடுகின்றோம். சபை செய்ய வேண்டிய மீதிக் காரியம், அவர்கள் தங்கள் பூமிக்குரிய ஜீவியங்களைக் கையளிப்பதேயாகும். சிலருக்கு மிகுதியான பெலன் காணப்படலாம் மற்றும் சிலருக்குக் கொஞ்சம் பெலன் காணப்படலாம்; சிலருக்குத் தாலந்துகள் அதிகமாய்க் காணப்படலாம் மற்றும் சிலருக்குக் கொஞ்சமாகக் காணப்படலாம்; சிலருக்கு ஜீவியக் காலம் அதிகமாய் இருக்கலாம் மற்றும் சிலருக்குக் கொஞ்சமாக இருக்கலாம்; எப்படியிருப்பினும், ஒவ்வொருவரும் பெற்றிருக்கும் எக்காரியமும் கையளிக்கப்பட வேண்டும், ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்.

ஆகையால் அர்ப்பணிப்பின்போது, சபை வகுப்பார் தங்களது பூமிக்குரிய சுபாவத்தினை மனமுவந்து கையளித்து விடுபவர்களாகக் காணப்படுகின்றனர். தற்காலத்தில் தங்களுக்குரியதான பூமிக்குரிய உரிமைகள் அனைத்தையும் மற்றும் ஒருவேளை அவர்கள் உலகத்தோடு தொடர்ந்து காணப்பட்டிருந்தார்களானால், அவர்களுக்கு உரியதாய் இருந்திருக்கும் அந்த உரிமைகளையும்கூடச் சேர்த்து அவர்கள் கையளித்துவிடுகின்றனர். இயேசு தற்காலத்தில் சபைக்கு மீட்கும்பொருள் – பலியில் எதையும் கொடுக்கிறதில்லை, மாறாக அவர்கள் ஒருவேளை உலகத்தில் ஒரு சாராராய் இருந்திருந்தார்களானால், அவர்கள் பெற்றிருக்க வாய்ப்புள்ளதை, அவர்களுக்குச் சாற்ற மாத்திரமே செய்கின்றார்.

இயேசு மரித்தபோது, அவர் ஆதாமிற்காக ஒரு மீட்கும்பொருளினை (pay) விலையாகச் செலுத்தித் தீர்க்கவில்லை. இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டபோதும் அவர் மீட்கும்பொருளினை (paid) விலையாகச் செலுத்தித் தீர்க்கவில்லை; மேலும் அவர் பிதாவினிடத்திற்கு ஏறிச்சென்ற போதும்கூட அவர் உலகத்திற்காக மீட்கும்பொருளை (pay) விலையாகச் செலுத்தித் தீர்க்கவில்லை. அவர் தம்முடைய பலியின் புண்ணியத்தினைப் பிதாவின் கரங்களில் (laid) கொடுத்து வைத்தார். இந்தப் புண்ணியத்தினைச் சுவிசேஷ யுகம் முழுவதிலும் சபைக்கு மாத்திரமே அவர் சாற்றிக்கொண்டிருந்திருக்கின்றார்; ஆனால் இப்பொழுதோ சபைக்குச் சாற்றும் காரியத்தினை அவர் முடிக்கவிருக்கின்றார் மற்றும் திரும்பக்கொடுத்தலை உலகத்திற்குக் கொடுத்திடும் வேலை துவங்க இருக்கின்றது; மற்றும் அது துவங்குவதற்கு முன்னதாக, சபைக்குச் சாற்றப்பட்ட (கடனாகக் கொடுக்கப்பட்ட) புண்ணியமானது, மனிதனுக்கான திரும்பக்கொடுத்தலுக்கு அடிப்படையாகத் திவ்விய நீதிக்கு நிஜமாய் (paid over) விலையாகச் செலுத்தித் தீர்க்கப்பட வேண்டும்.

சுவிசேஷ யுகத்தின் வேலை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

யூத பாவநிவாரண நாளில் பிரதான ஆசாரியனால் முதலாவதாக காளை கொல்லப்படுகின்றது. அந்தக் காளை பூரண மனுஷனாகிய நமது கர்த்தர் இயேசுவையும், ஆசாரியன் புதுச்சிருஷ்டியாகிய நமது கர்த்தர் இயேசுவையும் குறிக்கிறது. இப்படியாக இவர் நிழலில் மனுஷீக சுபாவத்தின் அர்ப்பணத்தை அடையாளப்படுத்திக் காண்பிக்கின்றார்; மேலும் பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிற ஆசாரியனால் மாம்ச சரீரத்தில் காணப்படும் புதுச்சிருஷ்டியின் நிலைமையும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

நமது கர்த்தர் தமது மூன்றரை வருட ஊழியக்காலத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் இந்த நிலைமையில்தான் இருந்தார். அந்தக் காலத்தில் பொன் தூபபீடம் மற்றும் (தேவனுடைய சத்திய வெளிச்சத்தினைக் குறிக்கும்) பொன் குத்துவிளக்கின் வெளிச்சம் என்ற சிலாக்கியங்களையும் மற்றும் (ஆவிக்குரிய உணவாகிய) சமூகத்து அப்பத்தின் ஆசீர்வாதங்களையும் அவர் பெற்றிருந்தார். மூன்றரை வருடகால முடிவில், தம்மைப் பலியாகக் கொடுக்கிற வேலையை நிறைவேற்றி, உண்மையான தூபத்தை எரித்து, இரண்டாவது திரையைக் கடந்து சென்றார்.

மூன்றாம் நாளில் நமது கர்த்தர் இரண்டாம் திரைக்கு அப்பால் – ஆவிக்குரிய தளத்தில் புதுச்சிருஷ்டியாக முற்றிலும் பூரணராக மனிதன் என்ற வார்த்தைக்கே சம்பந்தம் இல்லாதவராக எழுந்திருந்தார். அவரால் காற்றுபோன்று வந்துபோய் இருக்க முடியும். பல்வேறு தோற்றங்களில் தோன்றி, இங்கேயும் அங்கேயும் காற்றைப்போலப் போய்வந்து, தாம் இனி ஒரு மனிதனல்ல என்பதை தம் சீஷர்கள் நம்பச் செய்திட்டார். பிறகு அவர் உன்னதத்திற்கு ஏறும்போது மகாபெரிய பிரதான ஆசாரியனாக இரத்தத்துடன் சென்றார். இரத்தமானது பலியின் ஜீவனைக் குறிப்பிடுகின்றது. தேவனுடைய சந்நிதானத்திலே அவர் தோன்றி கிருபாசனத்தில் இரத்தத்தைத் தெளித்தார். கிருபாசனத்தில் இரத்தத்தைத் தெளித்தது, ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு பாவநிவர்த்தி செய்வதற்காகும். இந்தப் பாவநிவர்த்தி செய்யப்பட்டது ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் மாத்திரமே, உலகத்தாருக்கல்ல என்று நாம் காண்கின்றோம் (லேவியராகமம் 16:6)

பிரதான ஆசாரியன் ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் பாவநிவர்த்தி செய்த பிறகு பிரகாரத்திற்குச் சென்று வேறு வேலையில் ஈடுபட்டார். நமது கர்த்தர் பரமேறினதற்கும், பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி இறங்கியதற்கும் இடைப்பட்ட பத்து நாட்களில் அவர் நிஜமான ஆசாரியர்களுக்கும், [R5622 : page 36] லேவியர்களுக்கும் இரத்தத்தைப் பிரயோகித்தார். தம் புண்ணியத்தைச் சபைக்குப் பிரயோகித்தார். நாம் இதை அறிவோம்; பாவத்திற்கான இப்பரிகாரத்தினால் இதைத் தொடர்ந்து பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட காரியமானது, அவர்களுக்கு தெய்வீகக் கிருபை கடந்து வந்துள்ளதை ரூபகாரப்படுத்திற்று (எபிரெயர் 9:24).

நிழலில் ஆசாரியன் காளையின் பலியை ஏறெடுத்த பிறகு, கர்த்தரின் ஆட்டை கொல்லுகிற வேலையைத் தொடர்கின்றார். காளையைக்காட்டிலும் ஆடு வலுக்குறைந்தது. காளை நமது கர்த்தருக்கு அடையாளமாயிருக்கின்றது. கர்த்தருடைய ஆடு, அவரது சரீரமாகிய சபையின் உண்மையுள்ள அங்கங்களை அடையாளப்படுத்துகின்றது. சபையின் பலியை ஏறெடுப்பதே சுவிசேஷ யுகத்தின் வேலையாக இருக்கின்றது. இவர்கள் தங்களைப் பலியாக ஏறெடுத்திட இயலாது; ஏனெனில் இவர்கள் சுபாவத்தின்படி ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட ஆதாமின் சந்ததியினராக இருப்பதினால் ஆசாரியராய்ச் செயல்படுவதற்குத் தகுதியற்றவர்களாயிருந்து, மகாபெரிய பிரதான ஆசாரியன் தம்முடைய புண்ணியத்தை இவர்களுக்குச் சாற்றிடும்வரை இவர்களால் ஆசாரியராகிட முடியாது. ஆகையால் காளையின் பலியை ஏறெடுத்ததுபோலவே, மகா பிரதான ஆசாரியன் ஆட்டின் பலியையும் ஏறெடுத்தார்.

அதன்பிறகு அதன் முடிவைப் பார்க்கிறோம். நிழலில் ஆட்டின் இரத்தம் மகாபரிசுத்த ஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தெளிக்கப்படுகிறது; மற்றும் இது ஆசாரியருக்காகவோ லேவியருக்காகவோ அல்ல, ஜனங்களுக்காகத் தெளிக்கப்படுகிறது. காளையின் இரத்தம் ஆசாரியருக்காகவும், லேவியருக்காகவும் தெளிக்கப்படுகிறது; ஆட்டின் இரத்தம் ஜனங்களுக்காக தெளிக்கப்படுகிறது (லேவியராகமம் 16:6,15). இந்த இரண்டு பலிகளும் சுவிசேஷ யுகத்தின் சகல பலிகளையும் அடையாளப்படுத்துகின்றது. கர்த்தராகிய இயேசுவின் பலி மேன்மையானது, இதற்கு அடுத்தபடியானது சபையின் பலியாகும்.

மீட்கும்பொருள் வழங்கப்படுவதில் சபை பங்குவகிப்பதில்லை

முழு உலகத்தின் பாவத்திற்கும், நிஜமான காளையினுடைய பலியின் புண்ணியமானது போதுமானதாகும். ஆனால் சபையும் பலியில் பங்குபெற அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய ஏற்பாடாக இருந்தது. பலியில் பங்குபெறும் சிலாக்கியத்தைப் பெறுகிறவர்கள் மாத்திரமே மகிமையிலும் பங்குபெறும் சிலாக்கியத்தைப் பெறுவார்கள். தேவ நீதி திருப்தியடைவதற்கு சபையின் எந்தவொரு அங்கமும் மரிக்கவேண்டிய அவசியமில்லை; ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மகிமையில் பங்குபெற அது அவசியமாக இருந்தது. நமது கர்த்தரின் பலி நமது பாவங்களுக்காகவும், நமது பலி நாம் அவரது மகிமையில் பங்குபெறுவதற்காகவும் அவசியமாயிருந்தது. அவர் பலியானார்; அது நமது பலியல்ல. அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுவதுபோல நமது சரீரங்களை நாம் அர்ப்பணிக்க மாத்திரமே செய்கிறோம் (ரோமர் 12:1). தேவன் நமது பலியைக் கிறிஸ்து மூலமாக ஏற்றுக்கொள்வதில்லை; நேசக் குமாரனுக்குள் மாத்திரமே நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் (எபேசியர் 1:3-6) எனவே நமது ஆண்டவர் நம்மை ஏற்றுக்கொண்டதினிமித்தமாகவே [R5622 : page 37] நாம் அவரது பலியிலும், மகிமையிலும் பங்குபெறும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.

ஆகையால் நமது கர்த்தரிடம் இன்னமும் கொடுக்கப்படாத/பயன்படுத்தப்படாத நிலையிலுள்ள மனுஷீக ஜீவன் ஒன்று காணப்படுகின்றது. அவர் சபைக்கு மனுஷீக ஜீவனைக் கொடுக்கிறதில்லை. அவர் தாம் பெற்றிருக்கும் மனுஷீக ஜீவனுக்கான உரிமையின் ஒரு பாகத்தைக்கூடப் பங்குபோடுவதில்லை. கர்த்தருக்குப் பூமிக்குரிய சரீரம் அவசியமில்லை; அவரது சபைக்கும் பூமிக்குரிய சரீரங்கள் அவசியப்படுவதில்லை. பூமிக்குரிய உரிமைகளைக்கொண்டு இயேசுவுக்கு என்ன பயன் இருக்கிறது அல்லது நாம் அவற்றைக்கொண்டு என்ன செய்யப்போகின்றோம்? மறுபடியுமாக மனிதர்களாகிடுவதற்கு நாம் ஒருபோதும் நோக்கம்கொண்டிருக்கிறதில்லை; கர்த்தரும் மறுபடியுமாக மனிதனாகிட நோக்கம் கொண்டிருக்கவில்லை. நம்மை ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதான பலிகளாக்கிடும் நோக்கத்திற்காக மாத்திரமே கிறிஸ்துவின் புண்ணியமானது நமக்குச் சாற்றப்படுகிறது; மேலும் சபையின் கடைசி அங்கத்தினன் மகிமையடைகையில், அந்தப் புண்ணியமானது மீண்டுமாகத் திரும்பிவிடுகின்றது. அப்போது மனுக்குலத்தின் உலகத்திற்கெனப் பயன்படுத்தத்தக்கதாகக் கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியம் முழுமையாய் ஆயத்தமாய்க் காணப்படும்; ஏனெனில் சபை அப்போது திவ்விய சுபாவமுடையவர்களாகி இருப்பதினால், அவர்கள் அதற்குமேல் ஆதாமின் சந்ததியராய் இருப்பதில்லை (2 பேதுரு 1:4).

அந்த வேலை, அதாவது இயேசுவின் புண்ணியத்தினை உலகத்தின் சார்பாய்ப் பயன்படுத்துவது என்பது, ஆயிரவருட யுகத்திற்குரியதாகும்; அப்போது மீட்பரின் இராஜ்யமானது, மனிதனுக்கான திரும்பக்கொடுத்தலை மெய்யான ஆசீர்வாதமாக்கிடும். ஆகையால் கிறிஸ்துவின் புண்ணியமானது உலகத்திற்காகத் திரும்பினவுடனே, அவர் தாம் விலைக்கொடுத்து வாங்கின தமது இந்தச் சொத்தின்மீதான பொறுப்பினை உடனே எடுத்துக்கொள்வார். அவர் தமது மகா வல்லமையையும், ஆளுகையையும் திரும்பக் கையில் எடுத்துக்கொள்வார். பின்னர்த் தம்முடைய பலியின் புண்ணியத்தினை அவர் யாருக்குப் பயன்படுத்தவிருக்கின்றாரோ அந்த மீட்கப்பட்டவர்கள் அனைவருக்கும், நீண்ட காலமாய் வாக்களிக்கப்பட்டுள்ளதான திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களைக் கொடுத்திடுவதற்கு அவர் ஆயத்தமாய்க் காணப்படுவார்.

தீர்க்கத்தரிசியாகிய தாவீது மூலம், யேகோவா தேவன் தம்முடைய குமாரனை நோக்கி: “”என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை (புறஜாதிகளை, ஜாதிகளை, ஜனங்களை) உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்”” என்று கூறியிருக்கின்றார் (சங்கீதம் 2:8). இது சமீபித்துள்ளது என்று நாம் நம்புகின்றோம். கர்த்தர் உலகத்திலிருந்து சம்பத்து வகுப்பாராகிய சபையைச் சீக்கிரம் எடுத்துக்கொள்ளவிருக்கின்றார். பிற்பாடு அவர் ஆதாமின் சந்ததிக்கு மனுஷீக சீர்ப்பொருந்துதலை அருளுவதும், ஒட்டுமொத்த உலகை, அவர்களது பூமியை ஏதேன் தோட்டத்தினுடைய சீருக்குக் கொண்டுவருவதும்தான் அவர் அருளப்போகும் ஆசீர்வாதங்களாய் இருக்கின்றன. இந்த வேலையினை அவர் தம்முடைய சரீரத்தோடு, தம்முடைய மணவாட்டியோடுகூடச் சேர்ந்து செய்வார்.

இந்த வேதவாக்கிய கண்ணோட்டத்தின்படி, இயேசு கொடுத்திடும் மீட்கும்பொருள் விலைக்கிரயமானது படிப்படியாய் நடைபெறும் காரியமாயிருக்கின்றது மற்றும் அது இன்னும் நிறைவடையவில்லை. அவர் மனிதனான போது, அதைக் கொடுக்கத் துவங்கினார்; அவர் தமது மூன்றரை வருட பூமிக்குரிய ஊழியத்தின்போது, அதைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டு வந்தார்; அவர் கொடுப்பதைக் கல்வாரியில் வைத்து நிறைவேற்றி முடித்தார். அதுமுதற்கொண்டு தாம் உரிமைப்பெற்றிருக்கிறவற்றை, சபைக்காக சாற்றுவதன் மூலம் பயன்படுத்திக்கொண்டு வருகின்றார். தமது பலியினுடைய இந்தப் புண்ணியம் அனைத்தையுமே, ஒட்டுமொத்த உலகத்தின் பாவத்தை நிவிர்த்திச் செய்யத்தக்கதாகப் பெற்றிருப்பார் ஒரு நபர்கூடத் தவிர்க்கப்படுவதில்லை. தம்முடைய மரணத்தின் வாயிலாக அவர் பெற்றுக்கொண்டவைகளை, ஆயிர வருடங்களின்போது மனுக்குலத்திற்குக் கொடுத்திடுவார் மற்றும் புதிய உடன்படிக்கையினை முத்திரிப்பதன் மூலம், அதை அவர்களுக்குச் செயல்படுத்துவார். சபை நிறைவடைந்தவுடனே, சபை திரைக்கு அப்பால் கடந்துபோனவுடனே, புதிய உடன்படிக்கையானது முத்திரிக்கப்படும்.

ஆவிக்குரிய சுபாவமும், பூமிக்குரிய சுபாவமும் ஒன்றல்ல

கிறிஸ்தவ ஜனங்களின் கண்ணோட்டங்களானது மிகவும் குழப்பமானவைகளாகக் காணப்படுகின்றன. உலகத்திற்கு வருவதற்கு முன்னதாக இயேசு ஓர் ஆவியின் ஜீவியாக இருந்தார் என்றும், மனிதனானபோது அவர் சுபாவ வகையான மாற்றத்தினை அடைந்தார் என்றும் இவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் அவர் மனிதனாகிவிட்டப்படியால், அவர் சதாகாலமும் மனிதனாகவே – “”தேவ தூதரிலும் சற்று சிறியவனான”” மனிதனாகவே காணப்பட வேண்டும் என்று வேதவாக்கியங்களுக்கு முரணாகவும், தவறுதலாகவும், முன்னுக்குப்பின் முரணாக எண்ணிக்கொள்கின்றவர்களாய் இவர்கள் காணப்படுகின்றனர். லோகோஸ் நித்தய காலத்திற்கென்று… “”மாம்சமாக்கப்படாமல்””… “”தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்ளாமல்””…மாறாக “”ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்க்கத்தக்கதாக”” மாத்திரமே “”மாம்சமாக்கப்பட்டார்”” என்று நாம் நினைவில்கொள்ள வேண்டும் (எபிரெயர் 2:9).

சுபாவங்களில் வித்தியாசங்கள் காணப்படுகின்றதென வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றது. பரிசுத்த பவுல் அடிகளார் சுட்டிக்காட்டுவதுபோன்று, மனிதனுடைய மாம்சம் வேறே, விலங்குகளுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. இதுபோலவே, அதாவது பூமிக்குரிய தளத்தில் விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் மனிதர்கள் இருப்பதுபோல ஆவிக்குரிய தளத்திலும் தேவதூதர்கள், கேரூபின்கள், சேராபின்கள் காணப்படுகின்றனர் (1 கொரிந்தியர் 15:39-41; திருவிவிலியம்). பிதாவோடு தமக்கிருந்த மகிமையை விட்டுவந்ததாக நமது கர்த்தர் தெளிவாய்க் கூறியுள்ளார். அவர் தமது சீஷர்களை நோக்கி: “”மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?”” (யோவான் 6:62) என்று கூறியுள்ளார்.

“”தாம் முன்னிருந்த இடத்திற்கு” எனும் வார்த்தைகளானது அவர் முன்பு பெற்றிருந்த சுபாவத்தில், நிலைமையில் ஒரு மாற்றத்தினைச் சுட்டிக்காட்டுகின்றது. இயேசு இதற்கு முன்னதாக அநேகந்தரம் உலகத்திற்கு வந்திருக்கின்றார், ஆனால் அவர் அப்போதெல்லாம் மாம்சமானவராக்கப்படவில்லை. அநேகமாக இயேசுதான் ஏதேன் தோட்டத்தில் தேவனுடைய பிரதிநிதியாக ஆதாமிடம் பேசியிருந்திருக்க வேண்டும். நிச்சயமாகவே அவர்தான் பிதாவின் பிரதிநிதியென மோசேக்கு நியாயப்பிரமாணத்தினைக் கொடுத்தவராவார். கர்த்தரும், இரண்டு தூதர்களும் சோதோமுக்குச் செல்கையில், அவர்கள் காரியத்தைக்குறித்து ஆபிரகாமிடம் கூற வந்தபோது, இயேசுதான் ஆபிரகாமோடு பேசினவராவார். முதலில் வந்தவர்கள் ஆபிரகாமுக்கு மனிதர்களாகத் தோற்றமளித்தனர், மனிதர்கள் போன்று புசித்தனர், மனிதர்கள் போன்று பேசினார்கள்; ஆனால் பிற்பாடே அவர்கள் தூதர்கள் என்று அறிந்துகொண்டார். நமது கர்த்தர் மாம்சமானவராக்கப்பட்டபோது, இது அவர் பூமியில் காணப்பட்ட முதலாம் தருணமாய் இருக்கவில்லை. அவர் முந்தின தருணங்களில் வந்தபோதெல்லாம், பிதாவின் பிரதிநிதியென மனிதர்களோடு தொடர்புகொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களின்போது, மாம்ச சரீரத்தை எடுத்து மாத்திரம் கொள்கிற ஓர் ஆவிக்குரிய ஜீவியாக இருந்தார்.

மனித சரீரம் எடுக்கும் இதே வல்லமையானது மற்றத் தூதர்களினாலும் பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். உதாரணத்திற்கு நமது கர்த்தர் பரமேறின போது தேவதூதர்கள்: “”கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்” (அப்போஸ்தலர் 1:11). விழுந்துபோன தூதர்களுக்கும் மனித சரீரம் எடுத்துக்கொள்ளும் வல்லமை முன்பு இருந்தது என்பதையும் நாம் நினைவுகூருகின்றோம். இவர்கள் உடல் வேட்கையின் காரணங்களுக்கு மனிதர்களாகக் காணப்படுவதற்கும், பூமிக்குரிய தளத்தில், பூமிக்குரிய நிலைமையில் காணப்படுவதற்கும் விரும்பினார்கள் என்று வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இப்படியாக இவர்கள் தங்கள் வாசஸ்தலத்தை விட்டு, மனிதர்களாக ஜீவித்து, புதிய சந்ததி ஒன்றினைக் கொண்டுவர நாடினார்கள்.

மிகவும் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள ஒரு காரியம்

ஒருவேளை இயேசு தம்முடைய முதலாம் வருகையின்போது மனிதனாகத் தோற்றம் மாத்திரம் எடுத்துக்கொண்டு, மாம்சம் எனும் திரைக்குப் பின்னாக உண்மையில் ஓர் ஆவியின் ஜீவியாகத்தான் இருந்து வந்திருப்பாரானால் – “”incarnate”” – அவரால் மீட்பராய் இருந்திருக்கவே முடியாது. இயேசு மனிதனாகக் காணப்பட்டார் “”அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்”” என்றுதான் வேதவாக்கியங்கள் சொல்லுகின்றதே ஒழிய, அவர் மனிதனாகக் காணப்படுவது போன்று நடித்துக்கொண்டார் என்பதாகச் சொல்லுகிறதில்லை (யோவான் 1:14). மனிதனுக்கான மீட்பராகுவதற்கு, அவர் ஒரு மனிதனாகுவது அவசியமாயிருந்தது; அவர் மனிதன் போன்று நடிப்பவராக இருக்கமுடியாது. அவர் உண்மையிலேயே ஒரு மனிதனாகிட வேண்டும்; இல்லையேல் அவரால் ஆதாமிற்கான மீட்கும்பொருள் விலைக்கிரயமாகிட முடியாது; ஏனெனில் திவ்விய நியாயப்பிரமாணமானது “”ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்பட வேண்டும்” என்று முன்வைக்கின்றதாய் இருக்கின்றது (உபாகமம் 19:21).

மீட்கும்பொருள் (கிரேக்கில் – antilutron) எனும் வார்த்தையானது சரிநிகர் சமான விலையினைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஆகையால் இயேசு உண்மையிலேயே பரலோக மகிமையினை விட்டுவந்தார் – விட்டுவந்தது போல் அவர் நடிக்கவில்லை. ஐசுவரியவானாய் இருந்த அவர், நம் பொருட்டுத் தரித்திரரானார்; ஆகையால் அவர் உண்மையிலேயே மனிதனாகத்தான் காணப்பட்டார். அவர் தம்மை யோர்தானில் அர்ப்பணித்தபோது, அவர் பூரணமான மனிதனாகக் காணப்பட்டார் – ஆதாமிற்கான ஒரே சரிநிகர் சமான விலையாகக் காணப்பட்டார். மரிப்பதற்காய் “”நீர் ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்”” என்று நமது கர்த்தர் பிதாவை நோக்கிக் கூறினதாக வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன (எபிரெயர் 10:5). இந்தச் சரீரமானது ஒரு நோக்கத்திற்காக – அதாவது மரிப்பதற்காகத் தேவனால் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது; பரிசுத்த தேவதூதர்கள் முன்னிலையில் நித்திய காலமும் சிறுமைப்படுத்தப்பட்ட நிலையில் கர்த்தர் இயேசுவை வைப்பதற்கு என்று ஆயத்தம்பண்ணப்பட்ட சரீரம் என்று அநேகர் எண்ணிக்கொண்டிருப்பதுபோன்று இல்லை என்றுமுள்ள காரியங்களை நம்மில் அநேகர் கவனிக்கத் தவறிவிட்டோம்.

நமது கர்த்தர் (தாம் வாசம்பண்ணும்) தம்முடைய சூழ்நிலைகளுக்கு இசைவற்ற ஒரு சரீரத்திலும் மற்றும் ஒரு சுபாவத்திலும் மற்றும் இந்த ஒவ்வாத சுபாவத்தின் அசௌகரியங்களுடனும் பரலோகத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறதில்லை. அவர் ஏற்கெனவே பலியின் வேலையினை நிறைவேற்றிவிட்டார் [R5623 : page 38] மற்றும் அவரது பலியினுடைய புண்ணியமானது, தேவனுடைய கரங்களில் காணப்படுகின்றது. பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாக ஏறெடுக்கப்பட்டுள்ளதான பலியானது, தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது மற்றும் நீதியினுடைய புஸ்தகத்தில் நமது மீட்பருடைய கணக்கில், பூரண மனிதனாக அவர் பெற்றிருந்த பூமிக்குரிய ஜீவனுக்கான அந்த உரிமைகள் காணப்படுகின்றது.

ஆதியில் தகப்பனாகிய ஆதாமிற்கு மனுஷீக ஜீவனையும், மனுஷீக ஜீவ-உரிமைகளையும் தேவன் கொடுத்தபோது, அவர் உடனே பூமியின் மகா இராஜனானார். அதுபோலவே இயேசு மாம்ச மனுஷனான போது, அவர் இயல்பாகவே அதன் அதிகாரியானார். அவருக்கு மாத்திரமே பூமி உரியதாயிருந்தது; மேலும் பூரண மனிதனுக்குப் பூமியின்மீதும், அதன் நிறைவின் மீதும் உரிமையுண்டு. இந்த உரிமைகளைத் தமக்கென்று வைத்துக்கொண்டு, மகா பூமிக்குரிய அதிகாரியாகிடுவதற்குப் பதிலாக, இயேசு அந்தப் பூமிக்குரிய உரிமைகள் யாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, கீழ்ப்படிதலுக்கான பலனைப் பெற்றுக்கொண்டார் – பலிக்கான பலனையல்ல, கீழ்ப்படிதலுக்கான பலனைப் பெற்றுக்கொண்டார். அவர் இன்னமும் அந்த மனுஷீக ஜீவனுக்கான உரிமைகளை உடையவராய் இருக்கின்றார் மற்றும் தேவனுடன் இசைவிற்கு வந்து, கீழ்ப்படிதலின் உடன்படிக்கைக்குள் பிரவேசித்தல் எனும் நிபந்தனைகளின் கீழ் மனுக்குலத்தின் உலகிற்கு அந்த உரிமைகளைக் கொடுக்க இருக்கின்றார். ஏதேனில் தொலைந்துபோனதும், கல்வாரியில் மீட்கப்பட்டதுமான யாவற்றையும் திரும்பப்பெறுவதற்கு மனுக்குலத்தின் உலகத்தினைத் தம்முடைய இரத்தத்தின் வாயிலாக இயேசு தகுதியாக்கிடுவார்.

நமது கர்த்தர் அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு காட்சியளித்துத் தோன்றினது என்பது, அவரும் சரி, தேவதூதர்களும் சரி பல நூற்றாண்டுகள் முன்னதாகக் காட்சியளித்துத் தோன்றினது போன்றதேயாகும் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் அவர் கொடுத்திட்ட காட்சிகளானது, அவர் இன்னமும் மனிதனாக இருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காண்பிக்காது. அவர் மனிதனாகக் காணப்பட்டபோது, அவர் கதவு பூட்டப்பட்டிருக்கும் அறைக்குள்ளாக இப்படிப் போனதில்லை; ஓர் ஆவியின் ஜீவியாக இருக்கையில், அவரால் கதவு பூட்டப்பட்டிருக்கும் அறைக்குள் சென்றிட முடியும். ஓர் ஆவியின் ஜீவியாக அவரால் உருவம் எடுத்துத் தோன்றமுடியும், பின்னர் அவர்கள் பார்வையினின்று அவரால் மறைந்து போய்விட முடியும். இப்படி உருவம் எடுப்பதும், மறைந்து போய்விடுவதும் சரீரத்தின் விஷயத்தில் மாத்திரமல்லாமல், வஸ்திரங்களின் விஷயத்திலும்கூடச் செய்யப்பட முடியும். ஒருமுறை அவர் வழிபோக்கராகத் தோன்றினார் மற்றும் ஒருமுறை தோட்டக்காரராகத் தோன்றினார்; ஒருமுறை கதவுகள் பூட்டப்பட்டிருக்கும் நிலையில், மேல்வீட்டறையில் தம்முடைய வழக்கமான உருவத்தில் உள்ளே தோன்றினார். இந்தப் பல்வேறு சந்தர்ப்பங்களில், அவர் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் ஏற்றபடி வெவ்வேறு வஸ்திரங்களில் காட்சியளித்துத் தோன்றினார். ஒருவகை வஸ்திரத்தை உருவாக்குவதும், இன்னொரு வகை வஸ்திரத்தை உருவாக்குவதும் மற்றும் வெவ்வேறு உருவத்தில் சரீரத்தை உண்டுபண்ணுவதும் அவருக்குச் சுலபமான காரியமாகும். எங்கிருந்து இது விஷயத்தில் அநேகம் கிறிஸ்தவ ஜனங்களுக்குத் தவறான கருத்துக்கள் தோன்றினது என்று சொல்வது கடினம். தப்பறைகளைச் சுட்டிக்காண்பிக்கும்போது நாம் மிகவும் இரக்கத்தோடும், அனுதாபத்தோடும் காணப்பட வேண்டும் மற்றும் நாமும் ஒரு காலத்தில் அத்தப்பறைகளில் காணப்பட்டிருந்தோம் என்பதையும், மற்றவர்களைப் போன்று நாமும் அத்தப்பறைகளைத் தீவிரமாய்ப் பற்றிக்கொண்டு காணப்பட்டிருந்தோம் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

நமது கர்த்தர் இனிமேலும் மனிதனல்ல

நமது கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் கொலையுண்டு, ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார் மற்றும் அதுமுதல் அவர் ஓர் ஆவியின் ஜீவியாகவே இருக்கின்றார். இந்த ஆவியின் ஜீவியையே தமஸ்குவுக்குப் போகிற வழியில் தர்சு பட்டணத்துச் சவுல் கண்டார். தான் கண்டது மகிமையான ஒளியாக இருந்ததென அவர் நமக்குத் தெரிவிக்கின்றார். இயேசுவின் மாம்சம் ஒன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கவில்லை. இயேசுவின் மெய்யான நிலைமையின் ஒரு கணத்தோற்றத்தினைக் கண்டதாக அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார்; “”எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்”” (1 கொரிந்தியர் 15:8; திருவிவிலியம்); அதாவது இங்குச் சபையின் உயிர்த்தெழுதலின் பிறப்பிற்குரிய காலத்திற்கு முன்னதாகப் பிறத்தல் என்ற விதத்தில் அப்போஸ்தலன் கூறியுள்ளார். நாம் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளோம் மற்றும் பிறப்பு முதலாம் உயிர்த்தெழுதலில் காணப்படும். “