Q373:1 இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

Q373:1

இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்

JESUS--Re Giving Up Life Rights

“கேள்வி – (1911)-1- யோர்தானிலும், பெந்தெகொஸ்தே நாளிலும் இயேசுவினால் எப்படித் தம்முடைய ஜீவிக்கும் உரிமைகளை, இருமுறை கொடுக்க இயலும்?

பதில் – பெந்தெகொஸ்தே நாளில் அவர் ஜீவ-உரிமைகள் எதையும் கொடுக்கவில்லை. அவர் யோர்தானில் தமது ஜீவ-உரிமைகளைக் கொடுத்து வைத்துவிட்டார்/ஒப்புக்கொடுத்திட்டார். பிதாவின் சித்தத்தைச் செய்யத்தக்கதாக அவர் தமது ஜீவ-உரிமைகளைக் கொடுத்து வைத்துவிடும் காரியத்தினைக் கல்வாரியில் நிறைவேற்றி முடித்தார். அவர் அங்குத் தம்மைக் கொடுத்து வைத்துவிடும் காரியத்தினை நிறைவேற்றி முடித்தார்; ஆனால் இப்படியாக அவர் தம்மைக் கொடுத்து வைத்துக்கொண்டிருக்கும் காரியமானது, புண்ணியத்தினைப் பயன்படுத்திடும் காரியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட காரியமாகும். இந்த ஒரு காரியமே சில மனங்கள் கிரகித்துக்கொள்வதற்கு மிகவும் சிரமமான காரியமாய்த் தென்படுகிறது. ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய மனதிற்கு இது எளிமையாய்ப் புரிந்துகொள்ளப்படுகின்ற காரியமாய் இருக்கின்றது; ஆனால் நமது கர்த்தர் அர்ப்பணிப்பின்போது தம்முடைய ஜீவனைக் கொடுத்து வைக்க ஒப்புக்கொடுத்ததற்கும், அதைக் கல்வாரியில் உண்மையாகவே நிறைவேற்றி முடித்ததற்கும் மற்றும் புண்ணியத்தினை “”மகா பரிசுத்த ஸ்தலத்தில்” அவர் பயன்படுத்துவதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தினைக் காண்பது என்பது சில மனங்களுக்கு மிகவும் சிரமமான காரியமாய் இருக்கின்றது. இது விஷயத்தில் உங்களுக்கு உதவிச் செய்யத்தக்கதாக நான் ஒரு பூமிக்கடுத்த உதாரணத்தைப் பயன்படுத்த இருக்கின்றேன்; இதோ அது என்னவெனில்: உங்களிடத்தில் சொத்து ஒன்று இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் அதைப் பத்தாயிரம் டாலருக்கு நீங்கள் விற்றுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். “”பத்தாயிரம் டாலருக்கென்று எனக்கொரு விசேஷித்த நோக்கம் அல்லது தேவை இருக்கின்றது மற்றும் அந்தச் சொத்தை விற்றுவிடுகின்றேன்” என்று நீங்கள் சொல்லுகின்றீர்கள். முதலாவதாக நீங்கள் (sale-deed) கிரயப்பத்திரம் கொடுப்பதாக முகவரிடம்/காரியஸ்தனிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்வீர்கள். இக்காரியமானது யோர்தானில் நமது கர்த்தரினால் பண்ணப்பட்ட உடன்படிக்கை காரியத்திற்கு ஒத்திருக்கின்றது. கொஞ்சம் காலம் கழித்து, அதாவது ஒரு மாதம் கழித்து, நீங்கள் கிரயப்பத்திரத்தில் கையெழுத்திடுவீர்கள் – அச்சொத்தின் மீதான உங்கள் விருப்பம் யாவற்றையும் விட்டுவிட்டு, பத்தாயிரம் டாலரைப் பெற்றுக்கொண்டு, அதை வங்கியில் வைப்புத் தொகையாகப் போட்டுவிடுவீர்கள் (deposit). வங்கியில் அந்தப் பணம்தான், அந்தச் சொத்தை விற்றதன் பலனாகக் காணப்படுகின்றது. அந்தப்பணம் (வங்கியில் இருப்பினும்) அது இன்னமும் உங்களுடையதுதான்; சொத்தை விற்றுக்கிடைக்கும் பலனைக்கொண்டு ஏதோ ஒரு காரியத்தைச் செய்யும்படியாக, அச்சொத்தை நீங்கள் விற்றிருக்கின்றீர்கள்; மற்றும் அந்தப்பலன், வங்கியில் காணப்படும் பத்தாயிரம் டாலராகும். சில குறிப்பிட்ட காரணத்திற்குப் பயன்படுத்தும்படி அந்தப்பணத்தை எடுக்கத்தக்கதாக, வங்கிக்கு நீங்கள் காசோலைக் கொடுத்திடலாம் அல்லது வேண்டுகோள் விடுத்திடலாம்.

இந்த நான்கு கட்ட காரியங்களானது, நமது கர்த்தருடைய நான்கு செயல்களுக்கு ஒத்திருக்கின்றது. காரியக்காரனிடத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது போன்று நமது கர்த்தர் முதலாவதாகத் தம்முடைய அர்ப்பணிப்பை ஏறெடுத்தார்.

கிரயப்பத்திரத்தில் கையெழுத்திடப்பட்டு, கிரயத்தினை நிறைவேற்றுவது போன்று நமது கர்த்தர் இரண்டாவதாகக் கல்வாரியில் காரியத்தினை நிறைவேற்றி முடித்தார்.
பணமானது வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் கணக்கில் வந்தடைவது போன்று, மூன்றாவதாக நமது கர்த்தர் தம்மைப் பிதாவின் கரங்களில் கையளித்துவிட்டார் – “”உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்”” என்றார்

வங்கியில் காணப்படும் பணத்தை நீங்கள் வைப்புத்தொகையாக வைத்திருப்பது (deposit) அல்லது பயன்படுத்துவதுபோன்று, நான்காவதாக நமது கர்த்தர் பிதாவின் கரங்களில் காணப்பட்ட அந்தப் புண்ணியத்தினைக் கிரயமாக (deposit) வைத்திருந்தார் அல்லது அதைப்பயன்படுத்துவார். அது உங்கள் கணக்கில் காணப்படும். உங்களால் மாத்திரமே காசோலையைக் கொடுக்க முடியும். இதுபோலவே நமது கர்த்தருடைய புண்ணியமும் பிதாவின் கரங்களில் தம்முடைய சொந்த கணக்கிலேயே காணப்பட்டது மற்றும் அவராலும் காசோலைக்கொத்த காரியத்தைச் செய்யலாம் மற்றும் அந்தப் புண்ணியத்தைச் சாற்றிடலாம் மற்றும் அப்போஸ்தலன் கூறியுள்ளது போன்று அவர் அப்புண்ணியத்தினை நமக்குச் சாற்றியுள்ளார். மேலும் அது நமக்குச் சாற்றப்பட்டுள்ளதற்கு ஆதாரம், பெந்தெகொஸ்தே நாளின்போது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் சில அங்கத்தினர்கள் மீது ஆசீர்வாதம் கடந்துவந்ததில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது.