Q444:1
“கேள்வி – (1911-Z4922)-1- தம் வசத்தில் ஒருவேளை பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமைகளைக் கிறிஸ்து பெற்றிருக்கவில்லையெனில், அவரால் உலகத்திற்கான நித்திய பிதாவாக முடியுமா?
பதில் – ஒருவேளை நமது கர்த்தராகிய இயேசு ஆயிரவருட ஆளுகையின்போது ஆதாமிற்கும், அவரது சந்ததிக்கும் பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமையினை கொடுத்துவிடுவதற்கென, அந்த உரிமையினைச் சொத்தாகப் பெற்றிருக்கவில்லையெனில், அவரைக்குறித்து அந்தச் சந்ததியின் பிதா என்று கூறமுடியாது. கொடுத்துவிடுவதற்கென்று ஜீவனை – பூமிக்குரிய ஜீவன் ஒன்றை அவர் கடவ பெற்றிராதது வரையிலும் அவரால் மனுக்குலத்தின் சந்ததியை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. “