Q445:1
“கேள்வி – (1912)-1- ஜீவ-உரிமைகளை இயேசு சபைக்குத் தரிப்பித்துள்ளதாக/ சாற்றியுள்ளதாகத் தாங்கள் போதிக்கின்றீர்களா?
பதில் – உண்மையில் அப்படித்தான்! இயேசு இரண்டு ஜீவ-உரிமைகளை உடையவராயிருந்தார். மனிதனென ஜீவிப்பதற்கென உரிமை ஒன்றினை அவர் பெற்றிருந்தார். அவர் தமது பூமிக்குரிய ஜீவனை laid down/கொடுத்து வைத்திட்டார்; அது அவரிடமிருந்து forfeit/பறிமுதல் செய்யப்படவில்லை. அதை அவர் திவ்விய ஏற்பாட்டிற்கு இசைவாக “”மரணபரியந்தம்”” laid down/கொடுத்து வைத்திட்டார். அவரால் கொடுத்து வைக்கப்பட்ட அது இன்னமும் அவருடையதே. உதாரணத்திற்கு என்னுடைய புத்தகத்தை நான் இங்கே மேஜையில் வைத்துள்ளேன் (laid down) என்று வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் அது கொஞ்சம் நேரம் மேஜையிலேயே இருக்கட்டும்; எனினும் அது இன்னமும் என்னுடையதே மற்றும் நான் திரும்பிவந்து, மீண்டும் எனது புத்தகத்தை எடுத்துக்கொள்வதற்கு முழு உரிமையுடையவனாக இருக்கின்றேன். அப்படித்தானே? இயேசு தமது ஜீவனைப் பறிக்கொடுக்கவில்லை. அவர் தாமே முன்வந்து தம் ஜீவனைக் கொடுத்து வைக்க மாத்திரமே செய்தார். “”அதைக் கொடுத்து வைப்பதற்கும் மற்றும் மறுபடியுமாய் வந்து பெற்றுக்கொள்வதற்கும் அதிகாரம் காணப்படுகின்றது.”” மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுவதற்கான வேளை வந்தபோதோ, அவர் திவ்விய தளத்தில் தேவனுடைய குமாரனென, உயர்த்தளத்தில் ஜீவனைப் பெற்றுக்கொண்டார். அது அவர் தமது ஜீவனை ஒப்படைத்ததற்கான வெகுமானமாகும். இது “”வெகுமான ஜீவனாகும்.” இது அவருக்கான தேவனுடைய அன்பளிப்பாகும். இது மரணம் வரையிலுமான அவரது கீழ்ப்படிதலுக்கான வெகுமானமாகும். பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமையினை அவர் இன்னமும் உடையவராயிருந்தார், ஆனால் வெகுமதியாக அவருக்குத் திவ்விய ஜீவன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திவ்விய ஜீவனை அவர் பெற்றவராயிருக்க, பூமிக்குரிய ஜீவனுக்கான அந்தப் பூமிக்குரிய உரிமையையும்கூட அவர் உடையவராயிருந்தார் மற்றும் அதை அவர் விருப்பம் போல் கையாள முடிந்தவராய்க் காணப்பட்டார். அது தேவனுடைய கரங்களில் காணப்பட்டது; “”பிதாவே உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன்.” இதை அவர் யாருக்கேனும் apply/பயன்படுத்தினாரா? இல்லை! இயேசு திவ்விய ஜீவனுக்கான உரிமையினை உடையவராயிருந்தது போன்று, அவர் தம்முடைய பூமிக்குரிய உரிமைகளையும் இன்னமும் உடையவராயிருந்தார். பூமிக்குரிய ஜீவனுக்கான தம்முடைய உரிமைகளை அவர் உலகத்திற்குக் கொடுத்துவிடுவதற்கு நோக்கம் கொண்டுள்ளார். பூமிக்குரிய ஜீவனுக்கான இந்த உரிமைகளை ஆதாமுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும் வழங்குவதே, இந்த ஏற்பாடுகளைப் பண்ணினதற்கான தேவனுடைய நோக்கமாய்க் காணப்படுகின்றது. ஆனாலும் இப்பொழுதல்ல! அவர் இப்பொழுது ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியாகிய சபையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கின்றார். இயேசுவின் மூலமாய் பிதாவினிடத்திற்கு வருகிற நம் அனைவருக்கும், இயேசு “”உத்தரவாதமாகிறார்.” இப்படியே அவர் – தங்கள் சரீரங்களை “”ஜீவபலிகளாக”” ஒப்புக்கொடுத்துள்ள அனைவருக்கும் இருக்கின்றார். இவர்களைத் தம்முடைய சொந்த புண்ணியத்தின் வாயிலாக ஏற்றுக்கொண்டு, நிறுத்துகின்றார். புண்ணியத்தினால் imputation/சாற்றப்படுவதற்கும், அது கொடுத்துவிடப்படுவதற்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது. ஒருவேளை நீங்கள் என்னிடம் பணம் கொஞ்சம் கேட்க மற்றும் நான் உங்களுக்குக் காசோலை ஒன்றின் பின்னால் சம்மதம் எழுதிக்கொடுத்தால், அந்தக் காசோலையை நீங்கள் வங்கியில் சமர்ப்பித்து, அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படியே இயேசுவின் புண்ணியத்தினுடைய விஷயத்திலும் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லலாம். அவர் தமது பூரண முழுமையினுடைய புண்ணியத்தினை நமக்குத் தரிப்பிக்கின்றார் அல்லது சாற்றுகின்றார் மற்றும் இப்படியாக நாம் நம்மைத் தேவனுக்கு முன்பு பரிசுத்தமான, ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதான நிலைமையில் ஒப்புக்கொடுத்திடலாம்.”