R4637 – இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

R4637 (page 206)

இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை

JESUS DID NOT FORFEIT EARTHLY LIFE

“பறிக்கொடுக்கப்பட்ட / இழந்துபோகப்பட்ட ஜீவன் என்பது பலியாக்கப்பட்ட ஜீவனல்ல. நமது கர்த்தர் ஒருவேளை தம்முடைய ஜீவனை பறிக்கொடுத்திருந்திருப்பாரானால், அது ஒரு பலி ஆகாது. பறிக்கொடுக்கப்பட்ட/இழந்துபோகப்பட்ட ஜீவன் என்பது ஏதோ ஒரு நீதியான காரணத்திற்காய் எடுத்துக்கொள்ளப்பட்ட ஜீவனாய் இருக்கின்றது; ஆனால் அவருடைய ஜீவனானது காரணமில்லாமல், அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர் பாடுபட்டார். அவர் எப்படிப் பாடுபட்டார் மற்றும் ஏன் பாடுபட்டார் என்பது தொடர்புடைய விஷயத்தில், “”அவர் தேவன் முன்னிலையில் பிழையற்றவராய்க் காணப்பட்டார்” என்று வேதவாக்கியங்களானது தெள்ளத்தெளிவாய் நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. தேவனுடைய சித்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவராய் அவர் காணப்பட்டார்; தேவ சித்தத்திற்கு அவர் தலை வணங்கினார்; தேவ சித்தத்தை நிறைவேற்றும்படியாக அவர் தமது முழு ஜீவியத்தையுமே அர்ப்பணம் பண்ணியிருந்தார். அவரது உண்மையினையும், கீழ்ப்படிதலையும் முழுமையாய்ப் பரீட்சிக்கத்தக்கதாக, அவர் “”மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும்”” கீழ்ப்படிதலுள்ளவராகவும், கட்டுப்பட்டு நடப்பவராகவும் காணப்பட தேவன் எதிர்ப்பார்த்தார். அவரது ஜீவனானது அவரிடமிருந்து தேவனாலோ அல்லது மனிதர்களாலோ பறித்தெடுக்கப்படவில்லை; அவர் சொல்லியிருந்ததுபோல, திவ்விய உதவிக்காக அவர் கேட்டுக்கொண்டிருந்திருக்க முடியும் மற்றும் இப்படிக் கேட்டிருந்தாரானால் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்கள் அனுப்பிவைக்கப்பட்டு, அவருடைய ஜீவனைப் பாதுகாத்திருப்பார்கள்; “”என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன்.”” (யோவான் 10:18 திருவிவிலியம்). ஆகையால் இயேசுவினுடைய பலியின் விஷயத்தில், மனுஷன் அவருடைய ஜீவனை எடுத்துப்போடவுமில்லை, தேவனும் அதைக் கேட்கவுமில்லை, மாறாக அவரது நேர்மையினை நிரூபித்து விவரிப்பதற்கான வாய்ப்பினை அவருக்குத் தேவன் கொடுத்தார்; இதில் பலி ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது; அதாவது இது தேவன் விரும்பியதை தமது பூமிக்குரிய உரிமைகள் மற்றும் சிலாக்கியங்கள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்துவிடுவதைக் குறிக்கும் காரியத்தை – நிறைவேற்றிடும் நிலைக்கு அவரை ஆளாக்கியது/வழிநடத்தியது.

அவரது மரண நேரத்தின்போது, அவர் தம்முடைய புண்ணியத்தைக் குறித்து: “”இதை நான் இன்ன நோக்கத்திற்காகவும், இன்ன காரியத்திற்காகவும் செய்கின்றேன் மற்றும் என்னுடைய கீழ்ப்படிதல் நிமித்தமாய் உண்டாகும் புண்ணியம் எதையும், இன்ன ஒரு நோக்கத்திற்காகப் apply/பயன்படுத்துகின்றேன்” என்று கூறி, அவர் முன்கூட்டியே தம்முடைய புண்ணியத்தினைப் பயன்படுத்தவில்லை. இப்படியாக அவர் ஏதும் செய்யவில்லை. இப்படி அவர் பயன்படுத்திடவில்லை. கிறிஸ்துவின் மரணத்தினை முழு உலகத்தினுடைய பாவத்திற்கான மீட்கும்பொருள் விலைக்கிரயமென நாங்கள் பேசுகையிலும், “”அனைவரின் மீட்பிற்காக அவர் தம்மையே ஈடாக தந்தார்” என்று நாங்கள் பேசுகையிலும், மனுக்குலத்தின் உலகத்திற்கான மீட்கும்பொருள் விலைக்கிரயமாகிய அந்தப் பலியினுடைய புண்ணியத்தினைக் கர்த்தராகிய இயேசு அவர்களுக்காகப் பயன்படுத்த வாய்ப்புள்ள திவ்விய ஏற்பாட்டின் மற்ற அம்சங்களையும்கூட நாங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளவே செய்கின்றோம். இவைகள் இவைகளுக்கான ஏற்றகாலத்தில் நிறைவேற்றப்படும் (1 தீமோத்தேயு 2:5,6; திருவிவிலியம்). இவை அவர் மரித்தபோது நிறைவேற்றப்படவில்லை, மாறாக இனிமேல் நிறைவேற்றப்பட வேண்டியவையாய் இருக்கின்றது.

மரணபரியந்தமுமான தம்முடைய கீழ்ப்படிதலை நமது கர்த்தர் வெளிப்படுத்திட்ட பிற்பாடு, பிதா தாம் குறிப்பிட்டுள்ள அல்லது வாக்களித்துள்ள அனைத்தையும் நிறைவேற்றவும் மற்றும் இவைகளுக்கும் மேலாக நிறைவேற்றவும் பிரியமாய்க் காணப்பட்டார். ஆகையால் அவர் ஏற்கெனவே காணப்பட்ட மனித நிலைமையில், அவரைத் தேவன் மரணத்திலிருந்து எழுப்பாமல், மாறாக “”எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய்”” திவ்விய சுபாவத்தினுடைய மகிமையான நிலைமைக்கு எழுப்பினார். நமது கர்த்தரைப் பூமிக்குரிய சுபாவத்திற்குக் கொண்டுவருவது என்பது பிதாவிற்குக் கூடுகிற காரியம்தான்; ஆனால் இப்படிச் செய்வது என்பது, நாம் புரிந்திருக்கிறபடி “”அவருக்கு முன் இருந்த சந்தோஷம்”” என்ற இந்த விசேஷித்த கீழ்ப்படிதலுக்கு, விசேஷித்த வெகுமானம் கொடுக்கப்படும் என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதான தம்முடைய வாக்குத்தத்தத்தைப் பிதா நிறைவேற்றுவதாக இராது.

இயேசு பூமிக்குரிய சுபாவத்திற்கான உரிமையினை உடையவராவார்

மூன்றாம் நாளில் நமது கர்த்தர் பிதாவினால் மரணத்திலிருந்து, இப்பொழுது அவர் பெற்றிருக்கின்றதான இந்த மகிமையான சுபாவத்திற்கு உயர்த்தப்பட்ட போது பூமிக்குரிய சுபாவத்தைக்காட்டிலும் அதிகம் மேலான சுபாவத்திற்கு உயர்த்தப்பட்ட போது, அவர் பூமிக்குரிய சுபாவத்திற்கான உரிமையையும்கூட உடையவராகவே காணப்பட்டார். தம்முடைய உயர்வான சுபாவத்தினை (exchange) மாற்றாகக்கொடுத்துவிட்டு, பூமிக்குரிய சுபாவத்தினைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கர்த்தர் நிச்சயமாகவே எண்ணியிருந்திருக்க மாட்டார்; அதிலும் விசேஷமாக இத்தகையதொரு மாற்றிக்கொள்ளுதலானது, தேவனுடைய முழுத்திட்டத்தையும் சீர்க்குலைவிற்குள்ளாக்கும் காரியமாய் இருக்கும் என்கிறபோது, கர்த்தர் இப்படி நிச்சயமாகவே எண்ணியிருந்திருக்க மாட்டார். இதோ விவரிக்கின்றோம்: ஒருவேளை மரணத்திலிருந்து பிதாவின் மகிமைக்கு, திவ்விய சுபாவத்திற்கு எழுப்பப்பட்டுள்ளதான நமது கர்த்தர் இயேசு பின்வருமாறு: “”பிதாவே என்னை இவ்வளவு உயர்வாய் உயர்த்தினதில், எனக்கு நீர் பாராட்டியுள்ள அன்பையும், தயவையும் நான் பெரிதும் மதிக்கின்றேன்; ஆனாலும் இப்பொழுதோ நான் மனுஷீக சுபாவத்தையே விரும்புகின்றேன்”” என்று கூறுகின்றார் என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை அவர் இப்படியாகப் பேசுகின்றார் என்று நாம் கற்பனை பண்ணினால்கூட, அவரது மனுஷீக ஜீவனை அவர் ஒருபோதும் பறிக்கொடுக்காத காரணத்தினால், அதற்கான உரிமையினை உடையவராகத்தான் அவர் காணப்படுவார் என்றே நாம் பார்ப்போம். அவர் அதை laid it down/கொடுத்து வைத்து மாத்திரமே இருந்தார். தேவனுக்கான கீழ்ப்படிதலில் அவர் தம்மையே ஒப்புக்கொடுத்துவிட்டார்; மற்றும் ஒருவேளை அவரது உயிர்த்தெழுதலில் அவர் பூமிக்குரிய சுபாவத்தினை விரும்பிட்டாலும், அதனை திரும்பவும் அவர் ஒருவேளை பெற்றுக்கொள்வதும் முற்றிலும் தகுதியானதே. ஆனால் ஒருவேளை அதை அவர் திரும்பவும் எடுத்துக்கொள்வது என்பது, நிறைவேற்றத்தக்கதாக அவர் துவங்கின வேலை அனைத்தையும் இரத்துச் செய்துவிடுவதாய் இருக்கும்; மேலும் மிகவும் விரும்பத்தக்க பரலோகச் சுபாவத்தை, அதாவது எதைக் குறித்து அவர் “”பிதாவே, உலகம் உண்டாகிறதற்குமுன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்” (யோவான் 17:5) என்று பேசினாரோ அந்தப் பரலோகச் சுபாவத்தை அவர் உதறிதள்ளினவராய் இருந்திருப்பார்; இப்படியாக அவர் தாம் விரும்புவதாகத் (யோவான் 17:5-இல்) தெரிவித்ததைப் புறக்கணித்தவராய் மாத்திரமல்லாமல், தெய்வீகத் திட்டத்தையும், ஒழுங்கையும் மற்றும் ஏற்பாட்டையும் புறக்கணித்துப் போட்டவராயும் இருந்திருப்பார், ஏனெனில் இயேசு இந்த உயர்வான சுபாவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும், இன்னுமாக ஆதாமினால் பறிக்கொடுக்கப்பட்ட/இழந்துபோகப்பட்ட ஜீவனுக்கும், அதன் சகல பூமிக்குரிய சிலாக்கியங்களுக்குமான சரிநிகர் சமான விலையென அல்லது “”மீட்கும்பொருளென,”” பூமிக்குரிய சுபாவத்தையும், அதன் சகல உரிமைகள் மற்றும் சிலாக்கியங்களை இயேசு அருளத்தக்கதாக, பூமிக்குரிய ஜீவனுக்கான, பூமிக்குரிய சுபாவத்திற்கான உரிமையினை உடையவராகவும்கூட அவர் காணப்பட வேண்டும் என்பதும் தேவனுடைய சித்தமாய்க் காணப்பட்டது.

அதைப் பலி செலுத்திடுவதற்கு உடன்படிக்கைப் பண்ணினோருக்கு இப்பொழுது அவர் தமது புண்ணியத்தினைச் சாற்றுகின்றார்

உண்மையில் நமது கர்த்தர் இன்னமும் அனைவரையும் மீட்டுக்கொள்ளவில்லை, ஆனால் 1800-வருடங்களுக்கு முன்னதாகவே பலியை ஏறெடுக்கும் விதத்தில் அவர் தம்மைக் கொடுத்துவிட்டார். ஆனால் உலகம் அனைத்திற்குமான மீட்கும்பொருள் விலைக்கிரயமென, அவர் இன்னமும் புண்ணியத்தினைப் applied/பயன்படுத்திடவில்லை. இவ்வளவு காலங்களாக அவர் அந்த மீட்கும்பொருள் விலைக்கிரயத்தினை வைத்து என்ன செய்துகொண்டிருக்கின்றார்? மீட்கும்பொருள் விலைக்கிரயமானது பிதாவினுடைய கரங்களில் வைக்கப்பட்டுள்ளது. இயேசு மரித்தபோது, “”உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்றார். கர்த்தர் இயேசுவாகிய மாபெரும் மேசியா ஒட்டுமொத்த மனுக்குலத்திற்கும் ஆதாம் மற்றும் அவரது சந்ததியார் அனைவருக்கும் கொடுத்துவிடுவதற்கு நோக்கம் கொண்டுள்ளதான அந்தக் காரியங்கள் அனைத்திற்குமான உரிமையினை உடையவராய் இருக்கின்றார். இவர்கள் அனைவரும், தேவனுடைய ஜனங்களாகிடுவதற்கான வாய்ப்பினைக் கொடுத்தருளுவார். இதற்கிடைப்பட்ட காலத்தில் அந்தப் புண்ணியத்தை வைத்துக்கொண்டு, அவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்? ஆதாமின் சந்ததியார் மத்தியிலிருந்து யாரொருவர், கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவர் தமது பூமிக்குரிய ஜீவனை ஒப்புக்கொடுத்துவிட்டதுபோன்று ஒப்புக்கொடுத்திடும் நிபந்தனையின் கீழ்ப் பிதாவுடன் முழுமையான உறவிற்குள்ளாக வருவதற்கு வாஞ்சிக்கின்றாரோ, அப்படியான அந்தத் தனி நபர்களுக்கு கர்த்தர் அதைத் தரிப்பிக்கின்றார்/சாற்றுகின்றார். இப்படியாக தம்மிடத்தில் வரும் ஒவ்வொருவருக்கும், அவனவன் பலி செலுத்திடுவதற்குத் தன்னை அர்ப்பணிக்கும் தருணத்திலேயே, கர்த்தர் தம்முடைய புண்ணியத்தினைச் சாற்றுகின்றார் மற்றும் கர்த்தருடைய புண்ணியம் சாற்றப்படுதல் காரியமானது, அவனைப் பிதா ஏற்றுக்கொள்வதற்குத் தகுதிப்படுத்துகின்றது; அவர் அவனைப் புதுச்சிருஷ்டியென ஜெநிப்பிக்கின்றார். அதுமுதற்கொண்டு இத்தகையவர்கள் புதுச்சிருஷ்டிகளாக இருக்கின்றனர் மற்றும் இயேசுவின் ஜீவனானது, பலியில் கொடுக்கப்பட்டதுபோன்று, இவர்களது பூமிக்குரிய ஜீவனும் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. இவர்கள் அனைவருக்கும், அதாவது கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டான புண்ணியத்தின் வாயிலாக, இந்த விசேஷித்த ஏற்பாட்டின்கீழ் இப்பொழுது அழைக்கப்படுபவர்களுக்கு அந்தப் புண்ணியம் சாற்றப்படுகின்றதே ஒழிய, அந்தப் புண்ணியம் இவர்களுக்கு வழங்கப்படுகிறதில்லை/கொடுக்கப்படுகிறதில்லை.

புண்ணியம் சாற்றப்படுகிறதற்கும்/தரிப்பிக்கப்படுகிறதற்கும் மற்றும் புண்ணியம் வழங்கப்படுகிறதற்கும் /கொடுக்கப்படுகிறதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. உதாரணத்திற்கு, ஒருவேளை உங்கள் கரங்களில் நாங்கள் 100 டாலர் கொடுத்தோம் என்றால், நாங்கள் உங்களுக்கு இப்படி நேரடியாய்க் கொடுத்ததன் வாயிலாக, 100 டாலர் வழங்கியிருக்கின்றோம் என்று அர்த்தப்படும். ஆனால் ஒருவேளை உங்களுக்குக் காசோலையில் 100 டாலர் எழுதிச் சம்மதக் கையெழுத்திடுகிறோம் என்றால், நாங்கள் உங்களை 100 டாலர் உரியவராக்குகின்றோம்/உங்களுக்கு 100 டாலரைச் சாற்றுகின்றோம். சபையின் விஷயத்தில் தரிப்பித்தலே/சாற்றுதலே நடக்கின்றது; இவர்களுக்குப் புண்ணியமானது நிஜமாக கடந்துவருகிறதில்லை. ஆதாம் ஆரம்பத்தில் பெற்றிருந்ததும் மற்றும் அவரால் இழந்துபோகப்பட்டதுமான, மனுஷீக ஜீவனுக்கும், மனுஷீக சிலாக்கியங்களுக்குமான உரிமையினைத்தான், நமது கர்த்தர் மனுக்குலத்திற்கு கொடுக்கவிருக்கின்றார். மனுஷீக ஜீவனுக்கான அந்த உரிமையினை நமது கர்த்தர் மனுக்குலத்திற்குக் கொடுத்துவிட வேண்டியவையாகும், ஆனால் அவர் இப்பொழுது அதைக் கொடுத்து விடுவதில்லை. மனுக்குலத்தாரிடத்தில் அதனை ஏற்றகாலத்தில் கொடுக்கத்தக்கதாக, அதனை வைத்திருக்கின்றார். அவர் அந்தப் புண்ணியத்தினை இப்பொழுது நமக்குச் சாற்ற மாத்திரமே செய்கின்றார் அல்லது பரம பிதாவுடன் நாம் [R4638 : page 206] இத்தகைய ஒப்பந்தத்திற்குள் பிரவேசிக்க விரும்பும் பட்சத்தில், பிதாவுடனான நம்முடைய ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திடுவதைக் குறிக்கும் விதத்தில் சாற்றுகின்றார்.

உலகமானது, அவர்களுக்காக விலைக்கொடுத்து வாங்கப்பட்டதான பூமிக்குரிய ஜீவ-உரிமைகளைத் தொடர்ந்து வைத்துக்கொள்ளும்

உலகத்திற்காக அந்தப் புண்ணியமானது கொடுக்கப்படப் போகின்றது என்ற கருத்திற்கு மீண்டும் வருகையில், அது சம்பந்தமாகத் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில்… [R4638 : page 207] அந்தப் புண்ணியமானது முழு உலகத்திற்கும் கொடுக்கப்படப்போவதில்லை; மாறாக வேதவாக்கியங்கள் சொல்வதுபோன்று “”எல்லா ஜனங்களுக்கேயாகும்.”” “”எல்லா ஜனங்கள்” என்பதானது, முழு உலகத்தையும் குறிப்பதில்லை, மாறாக மாபெரும் மத்தியஸ்தரின் இராஜ்யத்தினுடைய காலப்பகுதியின்போது, தேவனுடன் உடன்படிக்கை உறவிற்குள்ளாகக் கடந்துவரப்போகிற அனைவரையும் குறிக்கின்றது. இந்த ஜனங்களுக்கு மாத்திரமே புண்ணியமானது applied/பயன்படுத்தப்படும். இந்த வாய்ப்பினைப் புறந்தள்ளி, இந்த ஜனங்களில் ஒருவராகிடுவதற்கு மறுத்திடும் யார் ஒருவரும், அருளப்படவிருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் புறந்தள்ளுகிறவராய் இருந்து, மனுஷீக ஜீவனுக்குரிய சீர்ப்பொருந்துதலை அடையாமல் போய்விடுவர். இத்தகையவர்கள் பூரணப்படுத்தப்படுவதில்லை. இத்தகையவர்கள் மனுஷீக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதேயில்லை. இத்தகையவர்கள் மரணத்திலிருந்து விழித்துக்கொள்வார்கள், ஆனால் இந்த விழித்துக்கொள்ளுதல் என்பது சீர்ப்பொருந்துதல் ஆகாது. இது வெறும் முதலாம் படியேயாகும்; இதிலிருந்தே அவர்கள் விரும்பும் பட்சத்தில் திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களுக்கு நேராய் வழிநடத்தக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கமுடியும். மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கத்தரிசியை மகா மத்தியஸ்தரை, மகா தீர்க்கத்தரிசியை, ஆசாரியனை மற்றும் இராஜாவை – இயேசுவைத் தலையாகவும், இந்தச் சுவிசேஷ யுகத்தின் சபையை அவரது அங்கத்தினர்களாகவும் பெற்றிருக்கும் தீர்க்கத்தரிசியை உங்களுக்கு “”உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. அந்தத் தீர்க்கத்தரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றார்” (அப்போஸ்தலர் 3:22,23).

இக்காரியம், “”குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்;”” என்ற வேதவாக்கியத்திற்கு இசைவாக உள்ளது (1 யோவான் 5:12; யோவான் 3:36). அவன் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டான்; அவன் சத்திய அறிவிற்குள்ளாகக் கொண்டுவரப்பட்டுள்ளான்; இஸ்ரயேல் வாயிலாக அனைவருக்குமே கடந்துவருகின்றதான புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்கடுத்த ஏற்பாடுகளின்கீழ் வரும் சிலாக்கியத்தினை அடையும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளான். ஆனால் ஒருவேளை அந்த வாய்ப்பினை அவன் பயன்படுத்திடுவதற்கும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராகிடுவதற்கும் தவறுவானாகில், அவர் கோபத்திற்கு நீங்கலாகவே மாட்டான். அவன் ஆயிரவருட யுகத்தின் முடிவைக் காணாமலும் – சீர்ப்பொருத்தப்பட்ட ஜனங்களில் ஒருவராகிடாமலும் – தேவனுடைய கோபத்தின்கீழ் மரித்துப்போய்விடுவான்.”