R5085 – கிறிஸ்துவினுடைய பலி

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

R5085 (page 263)

கிறிஸ்துவினுடைய பலி

THE SACRIFICE OF THE CHRIST

“யோர்தானில் நமது கர்த்தர், மரணபரியந்தம் தம்மை அர்ப்பணம் பண்ணினார். அதாவது அவர் ஞானஸ்நானம், முழுகுதல் பெற்றுக்கொண்டார். அவர்: “”இது முதற்கொண்டு நான் என் சித்தம் செய்வதில்லை. பிதாவே உம்முடைய சித்தம் எதுவோ, அதுவே என்னுடைய சித்தமாக இருக்கும். நான் செய்யும்படிக்கு நீர் விரும்பும் எதையும் நான் செய்திடுவேன் – திவ்விய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிகிற விஷயத்தில், செய்யும்படிக்கு எதிர்ப்பார்க்கப்படுகிறவைகளைச் செய்யத் தவறுவது பாவமாய் இருக்கும் என்பதினால், அக்காரியங்களைச் செய்வது மாத்திரமல்லாமல், புஸ்தகச்சுருளில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் நான் செய்திடுவேன். நான் என் ஜீவனை ஒப்புக்கொடுத்துவிட்டேன். நான் உமது சித்தத்தைக் கண்டுகொள்ளவும், அதைச் செய்யவும்தக்கதாக நீர் உம்முடைய வழிநடத்துதல்கள் மற்றும் உம்முடைய வார்த்தைகள் வாயிலாக என்னை நடத்தியருளும்” என்றார். இது அவர் ஏதோ உலகத்திடம் (உலகத்தின் கைகளில்) ஜீவனைக்கொடுத்துவிடுகிற காரியமாய் இருக்கவில்லை; ஏனெனில் அவர் தம்மையே தேவனுக்குக் கொடுக்கின்றவராய்க் காணப்படுகின்றார். அவர் மரணத்தைச் சந்திப்பதற்கும் மற்றும் தம் ஜீவனைக் கொடுப்பதும்தான் பிதாவின் சித்தமாக இருக்கும் பட்சத்தில் ஜீவனைக்கொடுத்துவிடுவதற்கும் அவர் தேவனுக்குத் தம்மை அர்ப்பணம் பண்ணினபோது, ஆயத்தமாகவே காணப்பட்டார். சங்கீதம் 40:7,8; எபிரெயர் 10:7.

அவரது அர்ப்பணத்தைத் தொடர்ந்து, அவர் தமது ஊழியத்தினைத் துவங்கினார். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிற ஊழியத்தில் அவர் மேன்மேலும் முன்னேறுகையில், அவர் புஸ்தகச் சுருளில் எழுதப்பட்டிருந்த அனைத்திற்கும் தம்மை ஒப்புக்கொடுத்தவரானார். அவரது இருதயத்தின் வார்த்தைகளானது: “”தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்” (எபிரெயர் 10:7) மற்றும் தம்மைக் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுத்த விஷயத்தில், பின்வருமாறு லூக்கா 6:18-19 ஆம் வசனத்தில் – “”அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியாலே, பாலஸ்தீனியா மற்றும் சுற்றிலும் உள்ள திரளான ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்” என்று சொல்லப்படுமளவுக்கு அவர் தமது ஆற்றலையும், பலத்தையும் கொடுத்தவரானார். அவர் தமது பெலனைத் திரும்பவும் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக, எதையும் தமக்கென்று அவர் வைத்துக்கொள்ளவில்லை, மாறாக பிதாவின் சித்தம் இன்னது என்று தாம் புரிந்திருப்பவைகளுக்குக் கீழ்ப்படிகிறதில், தமது ஜீவனைத் தினந்தோறும் கொடுத்துவந்தவராய்க் காணப்பட்டார்; ஆகையால் தேவனுக்குப் பிரியமானவைகளை அவர் செய்துகொண்டிருந்தார் அதாவது அவர் செய்ய வேண்டுமென்று தேவன் விரும்பினவைகள் யாவற்றையும், நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்டிருக்கின்றவற்றையும்கூட அவர் செய்து கொண்டு வந்தவராய் இருந்தார்.

முடிந்தது

சிலுவையில் நமது கர்த்தர் “”முடிந்தது!”” என்று சத்தமிட்டுக் கூறினார். அவர் “”தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றிவிட்டார்;”” அவர் “”தம்முடைய ஆத்துமாவைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுத்துவிட்டார்” (யோவான் 19:30; ஏசாயா 53:12,10); பிதாவின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிகிற விஷயத்தில், தம்முடைய ஜீவன் தம்மிடமிருந்து எடுக்கப்படுவதற்கு அவர் அனுமதித்தார். இக்காரியங்கள் அனைத்தும், நிழலில் முன்னரே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட மாதத்தில், பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட வேண்டும். நியாயப்பிரமாணத்தில் நேரடியான கட்டளையாகவோ அல்லது நிழலாகவோ காணப்படுபவைகளில் அடங்கும் அனைத்தும் தேவனுடைய சித்தமாக இருக்கின்றது என்று நமது கர்த்தர் அடையாளம் கண்டுகொண்டார். ஏதோ தமக்கு விருப்பமற்றிருக்கும் காரியங்களை மனுஷர்கள் தமக்கு நடப்பித்ததுபோன்று, மனுஷர்கள் தம்மிடமிருந்து, தம்முடைய ஜீவனை எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார். “”என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்” (சங்கீதம் 40:8) என்று அவர் உண்மையாகவே சொல்லியிருந்தார் மற்றும் அவர் தேவனுடைய சித்தத்திற்குத் தம்மைக் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுத்திருந்தபடியால், அவர்கள் அவரைக் கொலைசெய்யும்படிக்கு அவர் அவர்களை அனுமதித்தார்.

தம்முடைய ஜீவனானது அநீதியான விதத்தில் எடுக்கப்படுகின்றது என்று நமது கர்த்தர் உணர்ந்துகொண்டார். அவர் எதிர்க்கவில்லை; மாறாக இது நடைபெறும்படிக்கு அனுமதித்தார். தாம் எதிர்த்துப் போராடுவதில்லை என்றும், எவற்றையெல்லாம் தாம் நிறைவேற்றும்படிக்குப் பிதாவால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தாரோ, அவற்றையெல்லாம் தாம் செய்வார் என்றும் அவர் ஒப்பந்தம் பண்ணியிருந்தார். அவர் ஒருதரம் அர்ப்பணம் பண்ணின பிற்பாடு, அதிலிருந்து அவரால் பின்வாங்கிடக்கூடுமோ? இல்லை; ஏனெனில் பிதாவின் சித்தமெனத் தெய்வீக வழிநடத்துதலானது சுட்டிக்காட்டிடும் எதற்கும் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்திட, அவர் உடன்படிக்கைப் பண்ணியிருக்கின்றார். அவர் ஓர் உறுதியான ஒப்பந்தத்திற்குள் பிரவேசித்திருக்கின்றார் மற்றும் இதன் கீழ் அவர் தேவனுடைய சித்தத்திற்கு உண்மையாய்க் காணப்படும்படிக்குத் தம்மைக் கடமைக்குட்படுத்தியிருக்கின்றார் மற்றும் இந்த உண்மையுள்ள கீழ்ப்படிதலின் காரணமாக, திவ்விய சுபாவத்திற்கு உயர்த்திடும் மகா மேன்மையான மகா பலனை நமது கர்த்தருக்குத் தேவன் கொடுப்பாரென, தேவனும் தம்மைக் கடமைக்குட்படுத்தியிருக்கின்றார். அந்த ஒப்பந்தத்திற்கான வாக்குறுதியெனப் பரிசுத்த ஆவியினைத் தேவன் அவருக்குக் கொடுத்திருந்தார்.

மனுஷீக ஜீவ-உரிமைகள் நமது கர்த்தருக்குச் சொந்தமானவை

ஒன்றைக்கொடுத்து இன்னொன்றை மாற்றிக்கொள்வது (exchange) என்பதற்கும் மற்றும் வெகுமானம் அருளுதல் (reward) என்பதற்கும் இடையே மிகுந்த வித்தியாசம் காணப்படுகின்றது. Exchange என்பது சம மதிப்புள்ள ஏதோ ஒன்றிற்காக, சம மதிப்புள்ள ஏதோ ஒன்றை விட்டுக்கொடுப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. Reward என்பது தகுதியின் பொருட்டு ஏதோ ஒன்று அருளப்படுவதைக் குறிக்கின்றதாய் இருக்கும்; அருளும் விஷயத்தில் Reward என்ற வார்த்தையானது எந்தக் கடமையையும் சுட்டிக்காட்டுகிறதில்லை. வெகுமானம்/reward அருளுபவர், தனது சுயாதீனத்தின்படி முற்றிலும் செயல்படுபவராய் இருப்பார்.

பிதாவிற்கும், நமது கர்த்தருக்கும் இடையிலாகப் பண்ணப்பட்ட ஏற்பாட்டில், பூமிக்குரிய ஜீவனுக்கான நமது கர்த்தருடைய உரிமையானது சம்பந்தப்படுகிறதில்லை; ஏனெனில் மனிதனாக அவருக்கு இருக்கும் ஜீவனுக்கு மாற்றாக (exchange), ஜீவனுக்கான உயர் தளத்தில், அவருக்கு ஜீவன் கொடுப்பதாகப் பிதா ஒப்பந்தம் பண்ணிடவில்லை. ஒருவேளை இப்படியாகத்தான் காரியம் இருந்திருக்குமானால், மனுஷ ஜாதியில் எவருக்கேனும் சபைக்கோ அல்லது மனுக்குலத்தின் உலகத்திற்கோ – கொடுத்திடுவதற்கு அவர் எதையும் பெற்றிராதவராய் இருந்திருப்பார்.

மாறாக தமது குமாரனுடைய மரணபரியந்தமான கீழ்ப்படிதலுக்காய், தூதர்களுக்கும், துரைத்தனங்களுக்கும் மற்றும் அதிகாரங்களுக்கும் மேலாக அவரை உயர்த்துவதன் வாயிலாக, நமது கர்த்தருக்குப் பிதா பலனளிக்கவிருந்தார். பூமிக்குரிய ஜீவ-உரிமைகளானது, [R5086 : page 263] இன்னமும் நமது கர்த்தருக்கு உரியவையே. அவர் மனுஷீக ஜீவனை மனுக்குலத்திற்குக் கொடுக்கப்போகின்றார் என்ற உண்மையானது, அந்தப் பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமையினை அவர் பெற்றிருக்கின்றார் என்பதற்குச் சான்றுபகர்கின்றது.

நமது கர்த்தர் இயேசு வெறுமனே தம்முடைய ஜீவனை ஒப்படைத்துவிட ஒப்புக்கொண்டார் என்று நாம் புரிந்துகொள்கிறதில்லை. யேகோவா தேவன் மீதான அவரது அன்பும், யேகோவா தேவனிடத்திலான அவரது நம்பிக்கையும் மிகவும் அதிகமாய் இருந்தபடியால், மனுக்குலத்தின் ஆசீர்வாதத்திற்கான பிதாவின் திட்டத்தை நடந்தேற்றுவதில், தாம் என்ன விலை கொடுக்க வேண்டியிருப்பினும், அத்திட்டத்தை நடந்தேற்றுவதில் அவர் ஆவலாய் இருந்தார். அர்ப்பணிப்பின்போது அவரது நிலைப்பாட்டினை, “”தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன்” என்ற வேதவாக்கிய வார்த்தைகளானது தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இந்த வலியுறுத்தலானது, எந்தமட்டிலுமான தேவசித்தத்தை உள்ளடக்கினது? “”புஸ்தகச் சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிற”” …..புஸ்தகச் சுருளில் எழுதப்பட்டிருக்கும் அனைத்தையும் செய்யும்படிக்கு நான் ஆயத்தமாய் வருகிறேன் என்றார். தேவனுடைய பிரமாணத்தினைத் தம்முடைய இருதயத்தில் எழுதப்பெற்றவராக மாத்திரம் அவர் வராமல், இன்னுமாகப் புஸ்தகச் சுருளில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் செய்யும்படிக்கு அவர் தம்மை ஒப்புக்கொடுத்திருந்தார்.

புஸ்தகச்சுருளில் எழுதப்பட்டவைகளை இயேசுவினால் எப்படி அறிந்துகொள்ள முடியும்? அவர் தம்மை அர்ப்பணம் பண்ணின தருணத்தின்போது, புஸ்தகச்சுருளில் எழுதப்பட்டிருப்பவைகள் அனைத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை என்று நாம் தாராளமாய் நம்பலாம். புஸ்தகச்சுருளில் எழுதப்பட்டிருப்பவைகள், பழைய ஏற்பாட்டினுடைய நிழல்களிலும், அடையாளங்களிலும் எழுதப்பட்டிருப்பவைகள், யூதர்களால் மாத்திரமே புரிந்துகொள்ளப்பட்டவையாகும். இவைகளில் அநேகவற்றை, சந்தேகத்திற்கிடமின்றி நமது கர்த்தர் தம்முடைய ஞானஸ்நானத்திற்கு முன்பு முழுமையாய்ப் புரிந்துகொள்ளவில்லை. நியாயப்பிரமாண உடன்படிக்கையின் நிழல்களில், தேவனுடைய சித்தமானது தெரிவிக்கப்பட்டுள்ளது. “”புஸ்தகச்சுருளில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும்” என்று நமது கர்த்தர் கூறியிருக்கின்றார். ஆனால் அத்தருணத்தின்போது, எவ்வளவு காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளது என்று அவர் அறிந்திருந்தார் என யாரால் சொல்லக்கூடும்? அவரது ஞானஸ்நானத்திற்கு முன்புவரை அதாவது ஞானஸ்நானத்தின்போது, மேலான காரியங்கள் அவருக்குத் திறக்கப்பட்டு, அவருக்குத் தெரியப்படுத்தப்படுவதற்கு முன்புவரை – அவர் அறியாதவராய் இருந்தார்; இந்தப் பிரகாசிப்பித்தலைத் தொடர்ந்து, அவர் கற்றுக்கொள்வதற்கும், அவைகளைத் தியானிப்பதற்கும் வேண்டி வனாந்தரத்திற்குப் போனார்.

தேவனுடைய சித்தத்திற்குத் தவிர மற்றப்படி அனைத்திற்கும் மரித்திருந்தார்

தம்மைக்குறித்துப் புஸ்தகச்சுருளில் எழுதப்பட்டிருப்பவைகள் அனைத்தையும் குறித்து இயேசு தம்முடைய அர்ப்பணிப்பிற்கு முன்னதாக அறியவில்லை என்றபோதிலும், அவரது அர்ப்பணம் முழுமையானதாகவே காணப்பட்டது. தேவனுடைய சித்தத்தைச் செய்யத்தக்கதாக, அவர் தமது முழு ஜீவியத்தையும் சமர்ப்பித்திருந்தார். அவரது சொந்த சித்தமானது மரித்துப்போயிருந்தது. பிற்பாடு, ஒரு குற்றவாளியெனத் தாம் உண்மையில் மரிப்பதையும் தமது உடன்படிக்கையானது குறிக்கின்றது என்று உணர்ந்துகொண்டார்.

இயேசுவின் மனுஷீக ஜீவ-உரிமைகளானது, மரணத்தில் இழக்கப்படவில்லை என்ற உண்மையின் காரணமாக அல்லது “”சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக”” அவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையின் காரணமாக, அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு அவர் மனுஷீக ஜீவ-உரிமைகளைப் பெற்றிருந்தாரா? என்று கேள்வி கேட்கப்படுகின்றது. (எபிரெயர் 1:2).

இதுவும் மற்ற அநேகம் பாடப்பொருள்களைப்போன்று, வெவ்வேறு சிந்தனைகள் மற்றும் கருத்துகள் கொடுக்கப்படுவதற்கு ஏதுவானவையாகும். மனுஷீக ஜீவனுக்கான மற்றும் சகல பூமிக்குரிய காரியங்களுக்கான உரிமையினை நமது கர்த்தர் உடையவராய்க் காணப்பட்டார். இந்த ஜீவன் மற்றும் அதன் சகல ஆசீர்வாதங்களுக்கான இந்த உரிமையினை, ஆதாம் கீழ்ப்படியாமையின் காரணமாக இழந்துபோயிருந்தார்; ஆனால் கீழ்ப்படிதலின் காரணமாக இயேசு அதைப் பாதுகாத்துக்கொண்டார் மற்றும் இழந்துபோகும் அபாயம் முற்றிலும் அற்ற நிலையில் அதை வைத்திருந்தார். ஆகையால் ஒருவேளை யாரேனும் நியாயப்பிரமாணத்திற்கு எதிராக, அவரது உரிமைகளிடமிருந்து அவரை அறுப்புண்டுபோகப் பண்ணினாலும், இந்த அறுப்புண்டுபோகப் பண்ணுதலானது, அவருக்கு இருந்த உரிமைகள் எதையும் இழந்துபோய்விடச் செய்யவில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், சட்டப்பூர்வமாக நமது கர்த்தரிடமிருந்து அவரது ஜீவ-உரிமைகளை எப்படி ஒருவரால் பறிமுதல் செய்திட முடியும் என்று எங்களால் காணமுடியவில்லை. எங்களுடைய புரிந்துகொள்ளுதலின்படி, விழுந்துபோன மனுஷர்கள் அடங்கின மதவெறி கொண்ட ஒரு கூட்டத்தாரினால் இயேசுவானவர், அவரது ஜீவனிடமிருந்தும், அது சம்பந்தப்பட்ட உரிமைகள் அனைத்திடமிருந்தும் துண்டிக்கப்பட்டார்; ஆனால் அவர்களது செயல்பாடுகளானது, [R5086 : page 264] அவருக்குத் தேவனுடைய நியாயப்பிரமாணமானது அருளின எந்த உரிமைகளையும் அழித்துப்போட முடியவில்லை. ஆகையால், தேவன் அவரை மரணத்திலிருந்து உயிர்த்தெழப்பண்ணி, மேலான சுபாவத்தையும், அது தொடர்புடைய அருமையான குறிப்பிட்ட ஆசீர்வாதங்களையும் அவருக்கு வெகுமானமாக அருளின போது, இந்த உயர்த்தப்படுதலானது, அவருக்குத் தேவனுடைய நியாயப்பிரமாணம் கொடுத்திட்டதும், அவரால் இழந்து போகப்படாததும் அல்லது பறிக்கொடுக்கப்படாததுமான அந்த உரிமைகள் விஷயத்தில் தலையிடுகிறதில்லை. அவருக்குச் சொந்தமான ஜீவனை அவரிடமிருந்து எடுக்கத்தக்கதாக அவர் மனுஷர்களுக்கு அனுமதி மாத்திரம் வழங்கினார். இப்படியாக அவருடையதாகக் காணப்படும் அவருடைய உரிமைகளிடமிருந்து அவர் பிரிக்கப்பட்டார்.

எப்படி நமது கர்த்தர் மனுக்குலத்தின் தந்தையானார்?

இப்படியாக நமது கர்த்தர் அந்த உரிமைகளை இழந்துபோகாதவராகவும், அதைப் பறிக்கொடுக்காதவராகவும் காணப்படுவதினால், மரணம் வரையிலுமான இவரது கீழ்ப்படிதலின் காரணமாக, இவரைத் தேவன் உயர்வாய் உயர்த்தினபோது, அப்போது அவர் சொந்தமாய்ப் பெற்றிருந்தவைகள் மத்தியில், மனுஷீக ஜீவனுக்கான இந்த உரிமையும் அடங்கியிருந்தது. பிதா அவருக்கு மற்றவையெல்லாம் அருளியிருந்தபோதிலும், அந்த உரிமை அவருக்கு இன்னமும் சொந்தமானதேயாகும். மனுஷீக ஜீவனுக்கான இந்த உரிமையினை அவர் சொத்தாக அதாவது ஏதோ பெற்றுக்கொண்ட அன்பளிப்பாக இல்லாமல், சட்டப்பூர்வமாகத் தம்முடையதாக வைத்திருப்பதின் காரணமாகவே, அவர் “”ஜீவனளிப்பவராக”” கூறப்படுகின்றார்.

ஆயிரவருட யுகத்தின்போது, திவ்விய வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாக, நமது கர்த்தர் மனுக்குலத்திற்குப் பூரண மனுஷீக சுபாவத்திற்கு நேரான திரும்புதலை அருளுவார். இதைச் செய்கையில், பிதா தமக்குக் கொடுத்த ஏதோ ஒன்றினை அவர் கொடுப்பவராய் இராமல், மாறாக அவர் ஒரு விசேஷித்த விதத்தில், தம்முடைய சொந்த நாமத்திலேயே செயல்படுபவராய்க் காணப்படுவார். நித்திய ஜீவனுக்கான இந்த உரிமையினை அவர் ஒருவேளை பெற்றிருக்கவில்லையெனில், அவரை “”ஜீவனளிப்பவர்” என்று கூறிடமுடியாது. ஆனால் மனுஷீக ஜீவனுக்கான இந்த உரிமையினை அவர் பெற்றிருக்கின்றபடியால், அவர் தம்முடைய ஆயிரவருட ஆளுகையின்போது, அதைக் கொடுத்துவிடுவார்.

ஆயிர வருடங்கள் முடிந்த பிற்பாடு, நமது கர்த்தர் ஜீவனளிப்பவராகக் காணப்படுவதில்லை. அவர் தூதர்களுக்கோ, மனுக்குலமல்லாதவர்களுக்கோ ஜீவனளிப்பவராகக் காணப்பட முடியாது; ஏனெனில் அவரது உரிமையானது, பூரண மனித ஜீவிக்கான உரிமையாக மாத்திரம் காணப்பட்டது; பொதுவான மனுக்குலத்திற்கு அவர் கொடுக்க விரும்புபவைகளைத்தான் இப்போது சபைக்குச் impute/சாற்றுகின்றார் – அதாவது அவரோடுகூடப் பலியின் வேலையிலும், எதிர்க்காலத்தில் அவரது மகிமையான வேலையிலும் பங்கடையத்தக்கதாக நம்மை அனுமதிக்கத்தக்கதாக நமக்குச் சாற்றுகின்றார் அல்லது கடனாய்க் கொடுக்கின்றார்.

மனுஷீக ஜீவனுக்கான உரிமையானது, மனுக்குலத்திற்கான நமது கர்த்தருடைய தனிப்பட்ட அன்பளிப்பாகும்

நியாயப்பிரமாணத்திற்குத் தாம் கீழ்ப்படிந்ததன் காரணமாய் (ஏற்கெனவே) தமக்குரியதாகின, தம்முடைய பூமிக்குரிய சுபாவம் மற்றும் பூமிக்குரிய ஜீவ-உரிமைகள் விஷயத்தில் எப்படிச் “”சர்வத்துக்கும் சுதந்தரவாளியென” நமது கர்த்தர் ஏதேனும் கூடுதலான அதிகாரத்தை அடைய முடியும் என்று எங்களால் காண இயலவில்லை. சர்வத்துக்கும் சுதந்தரவாளியென அவர் நித்திய காலமும் பிதாவின் பிரதிநிதியாய் இருப்பார். அவர் உன்னதமானவருடைய வலது பாரிசத்தின் இடத்தை எடுத்துக்கொள்வார். ஏற்றகாலத்தில் முழங்கால் யாவும் அவருக்கு முடங்கிடும் மற்றும் தூதர்களும்கூட அவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்கள்.

இவைகள் அனைத்தும் பிதா வாக்களித்த வெகுமானத்தின் ஒரு பாகமென நமது கர்த்தருக்குக் கடந்துவந்ததாய் இருக்கின்றது. ஆனால் ஆதாமினால் தொலைத்துப்போடப்பட்ட அனைத்தையும் திரும்பக்கொடுத்தல் எனும் இந்த ஒரு குறிப்பிட்ட அம்சமானது, அவரது பெரும் தியாகத்தினால், அவரால் சம்பாதிக்கப்பட்டு, மனுக்குலத்திற்குக் கடந்துவரும் அவரது சொந்த அன்பளிப்பாய்க் காணப்படுகின்றது; அதாவது அவர் தம்முடைய பூமிக்குரிய ஜீவனைக் கொடுத்து வைத்துவிட்டபோது, இதன் அடிப்படையிலேயே புதிய சுபாவத்தையும் மற்றும் மனுக்குலத்தின் சார்பாக திரும்பக்கொடுத்தலில், பயன்படுத்தப்படப்போகும் அந்தப் பூமிக்குரிய ஜீவனை ஆளும் உரிமையையும் அவர் பெற்றுக்கொண்டார் என்று சொல்லலாம்.

ஒருவேளை அவர் ஏற்கெனவே அந்த ஜீவனைப் பிரயோகித்திருப்பாரானால் மற்றும் உண்மையிலேயே அதைக் கைநெகிழவிட்டிருப்பாரானால், அவரால் மனுக்குலத்திற்கு எப்படி விசேஷமாக எதையேனும் நிறைவேற்றிட முடியும் என்று எங்களால் காணமுடியவில்லை. ஆனால் கொடுப்பதற்கென்று அவர் பூமிக்குரிய உரிமைகள் மற்றும் சிலாக்கியங்கள் எனும் இச்சொத்தினைப் பெற்றிருக்கின்றபடியால், ஆயிரவருட ஆளுகையின்போது கொடுத்துவிடும் வேலை நடைபெறும்; மேலும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்ததின் காரணமாக தாம் பெற்றுக்கொண்டது எதுவோ அதையே அவர் கொடுத்துவிடுபவராய் இருப்பார் (லேவியராகமம் 18:5).

பலி என்ற வார்த்தைக்குக் காணப்படும் வேதவாக்கிய பயன்பாட்டின்படியான அர்த்தம்

“”பலி”” என்ற வார்த்தையானது பல்வேறு கோணங்களில் பயன்படுத்தப்படலாம். ஒரு விலங்கானது ஏதோ ஓர் இரக்கமான காரணத்திற்காக அல்லது நோக்கத்திற்காகக் கொல்லப்பட்டால், அதுவும் அது குறிப்பாக ஒருவேளை திவ்விய ஏற்பாட்டிற்கு இசைவாக நடைபெற்றதாக இருக்கும்பட்சத்தில், அது சொல்லப்படலாம். ஆனால் வெறுமனே ஒரு விலங்கு கொல்லப்படுவது என்பது பலியாகாது. பலியாக்கப்படாமலேயே ஒரு நாயானது கொல்லப்படலாம். ஆனால் ஒருவேளை அறிவியல் சோதனை ஒன்றிற்காக நாயினுடைய ஜீவனானது கையளிக்கப்படுகிறதென்றால், அறிவியலுக்காக அது பலி செலுத்தப்பட்டுள்ளது என்று நாம் சொல்லலாம். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து, நாம் பலியின் காரியத்தினை கண்ணோக்க வேண்டும். அர்ப்பணிக்கப்பட்டுள்ள தேவனுடைய ஜனங்களின் ஜீவியங்களானது ஒரு நோக்கத்திற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய அர்ப்பணிப்பின்போது, நமது சரீரங்களை நாம் ஜீவனுள்ள பலிகளாக ஒப்புக்கொடுக்கின்றோம். நம்முடைய ஜீவியங்களை, நம்முடைய மனித சரீரங்களை மற்றும் நமக்குரிய அனைத்தையும் நாம் கர்த்தருக்குக் கொடுக்கின்றோம். எனினும் இந்தப் பலியானது சில விசேஷித்த விதத்தில் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படத் தேவன் விடுகிறதில்லை. சிலர் கர்த்தருடைய சத்தியத்திற்கு ஊழியம்புரிவதில் தங்கள் ஜீவியங்களைச் செலவழிப்பதுண்டு மற்றும் அவர்கள் ஏதோ தொழு மரத்தில் மரித்ததற்கு ஒப்பாகப் பலியானதாகவும் சொல்லப்படலாம். “”என் ஜீவியம் முழுவதும் உமது கரத்தில் இருக்கின்றது; உமக்குப் பிரியமானபடி, அதைப் பயன்படுத்திடும்”” என்று நாம் கர்த்தரிடத்தில் சொல்லுகின்றோம். அது சந்தோஷம் அல்லது வலி நிறைந்ததாகவும், தியாகமாக/பலியாக அல்லது இன்பம் நிறைந்ததாகவும் இருப்பினும், இது விஷயத்தில் எங்கள் சொந்த சித்தங்களை நாங்கள் கையளித்துவிட்டு, “”என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்”” (யோவான் 6:38) என்று சொன்ன இயேசுவைப் போன்று ஆகுகின்றோம்.

நாம் எதைப் பலிசெலுத்துகின்றோம்?

இயேசுவின் பலியானது யோர்தானில் ஏறெடுக்கப்பட்டது. ஆனால் அது கல்வாரியில் நிறைவடைந்தது. அவரது அர்ப்பணிப்பானது முழுமையானதாய் இருந்தது. காளை கொல்லப்படுகிற காரியமானது, இயேசு தம்முடைய சித்தத்தைக் கையளித்தப்போது அவர் செய்ததை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. அதுபோலவே நம் விஷயத்திலும் காணப்படும். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுகையில், நாம் நமது சித்தங்களைப் பலி செலுத்துகிற விதத்தில் மரித்தவர்களாகுகின்றோம். ஆனால் பலி செலுத்தப்பட்ட அந்தச் சித்தத்தைக் கர்த்தர் எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ளப்போகின்றார் என்பது அவருடைய காரியமாய் இருக்கின்றது. நாம் அதை – அதாவது நம்மிடத்தில் கிறிஸ்துவின் சிந்தையானது சம்பூரணமாய் வாசம் செய்யத்தக்கதாக, நாம் அதைக் கையளித்துவிடுகின்றோம்.

நம்முடைய சித்தங்களைக் கையளித்துவிடுவது என்பது இறுதியில் நம்முடைய ஜீவியங்களையும் நாம் கையளித்துவிடுவதற்கு நம்மை நடத்திடும் என்பதை நாம் அறிந்திருந்தபோதிலும், நம்முடைய சொந்த சித்தங்களுக்கடுத்த உரிமைகளை நாம் என்றென்றுமாக விட்டுப் பிரிந்துவிடுகின்றோம்; எனினும் நம்முடைய ஜீவனைப் பலியிடும் வேலையை நாம் செய்கிறதில்லை. நம்முடைய சொந்த உரிமைகளை விட்டுப்பிரியும் விஷயத்தில் நாம் எதையும் செய்கிறதில்லை. இயேசு நமக்காகப் பரிந்துபேசுகிறவராகும்போது, அவர் நம்மைப் பொறுப்பேற்றுக்கொள்கின்றார். நம்முடைய சித்தங்களை நாம் கையளித்தது முதற்கொண்டு, நம்முடைய சரீரங்களானது, அவரது சரீரமாகக் கருதப்படுகின்றது. இவ்விஷயத்தில் நாம் நமது சித்தங்களைக் கையளிக்க மாத்திரம் செய்து, அனைத்தையும் அவர் செய்யத்தக்கதாக, விட்டுவிடுகின்றோம். அவர் பலியிடும் வேலையைப் பார்த்துக்கொள்கின்றார்; ஏனெனில் அவரே பிரதான ஆசாரியனாய் இருக்கின்றாரே ஒழிய, நாமல்ல.

இதுபோலவே மாபெரும் பலனானது, கர்த்தருடைய கரங்களிலேயே காணப்படுகின்றது. சுவிசேஷ யுகத்தின் போது, அவர் தம்முடைய புண்ணியத்தினை (merit) சபைக்குத் தரிப்பிக்கின்றார்/சாற்றுகின்றார். பலியிடும் வேலையினை அவர் நிறைவேற்றி முடிக்கையில், தம்முடையதென்று அவர் அழைத்திடும் இந்த மாபெரும் பலியின் புண்ணியத்தினை உலகத்திற்கான புதிய உடன்படிக்கையினை முத்திரிக்கத்தக்கதாகப் பயன்படுத்துவார். ஆனால் பலியிடும் பணியில், நாம் செய்வதற்கொன்றுமில்லை. அவை அனைத்தையும், நமக்காகப் பரிந்துபேசுபவரிடத்தில் நாம் விட்டுவிடுகின்றோம்.

புதிய சிருஷ்டிதான் சரீரத்திற்கு எஜமானாக அல்லது அதிகாரியாக நிச்சயமாகக் காணப்படுகின்றது மற்றும் இப்படியாகத்தான் கர்த்தரும் ஏற்பாடு பண்ணியுள்ளார். புதுச்சிருஷ்டிகளென நம்முடைய சரீரத்தை வைத்து நிறைவேற்றும்படிக்கு நாம் ஒரு வேலையைப் பெற்றிருக்கின்றோம். நமது கர்த்தர் நம்மை, அவரது ஊழியக்காரர்களென ஏற்றுக்கொள்ளும்போது, நாம் அவரது உக்கிராணக்காரர்களென நம்முடைய தாலந்துகள் அனைத்தையும் பயன்படுத்திட வேண்டும். இந்த விதத்திலேயே சரீரமானது மரணம் வரையிலும் புதுச்சிருஷ்டியினுடைய கட்டுபாட்டின் கீழ்க் காணப்படும்.

ஜீவ-உரிமைகள் சபைக்குச் சாற்ற மாத்திரமே படுகின்றது

நமது கர்த்தருடைய நிலைமையிலிருந்து நம்முடைய நிலைமையானது வேறுபடுகின்றது. முதலாவதாக நம்மிடத்தில் பூமிக்குரிய ஜீவ-உரிமைகள் ஏதும் இல்லை; ஆகையால் give away/கொடுத்துவிடுவதற்கென்று நாம் எதையும் பெற்றிருக்கவில்லை. நாம் அதை ஆதாமினுடைய பாவத்தின் காரணமாக இழந்திருக்கின்றோம். ஆனால் ஒருவேளை நாம் கர்த்தருடைய சீஷர்களாகுவோமானால், அனைத்தையும் அவரிடத்திற்குக் கையளித்துவிட்டு, அவர் நமக்குச் சாற்றிடுவதற்கு விருப்பமாய் இருக்கின்ற புண்ணியத்தினை ஏற்றுக்கொள்வோமானால், நமக்கான மகா பரிந்துபேசுபவர் நம்மை அவரது சரீரத்தின் அங்கத்தினர்களெனக் கருதி, அவரது பாடுகளில் பங்கெடுப்பதற்கு நம்மை அனுமதிப்பார். அவர் தம்முடைய புண்ணியத்தினை நமக்குச் சாற்றும்போது, அனைத்து உரிமைகளும் கடந்துவந்தது. தமது அங்கங்களுக்குரியதான உரிமைகளையும், அவர்களுக்கு வரும் பூமிக்குரிய உரிமைக்கடுத்த சிலாக்கியங்களையும், அவர்களுக்கு அவர் கொடுக்கின்றார்.

உலகத்திற்கென்று எதிர்க்காலத்தில் இந்த உரிமைகளை நமது கர்த்தர் பயன்படுத்துவதற்கான அவசியம் ஏற்படுகையில், அப்படிச் செய்ய அவர் முற்றிலும் ஆற்றலுடையவராகவும் மற்றும் வல்லமையுடையவராகவும் காணப்படுவார். அவர் திவ்விய [R5086 : page 265] பிரமாணத்தினை ஒருபோதும் மீறாததினால், தமது பூமிக்குரிய உரிமைகளைப் பயன்படுத்துவதற்கும், அது தொடர்பாகக் கட்டளையிடுவதற்கும் அவர் முழு உரிமையுடையவராய் இருப்பார்; இந்தத் தமது பூமிக்குரிய உரிமைகளை அவர் forfeited/பறிக்கொடுக்கவில்லை/ இழந்துபோகவில்லை, மாறாக மனுக்குலத்தினுடைய எதிர்க்கால ஜீவன் தொடர்புடைய விஷயத்தில், மனுக்குலத்தின் தந்தையெனத் தாம் அழைக்கப்படத்தக்கதாக, உலகத்திற்கு ஜீவன் கொடுப்பதற்கு வேண்டி தாம் இந்த உரிமைகளை மறுபடியுமாகப் பயன்படுத்திட வேண்டும் என்ற புரிந்துகொள்ளுதலில், அந்த உரிமைகளை அவர் laid down/கொடுத்து வைத்துவிட்டார்.

தம்மையே பலிசெலுத்தும்படியாகக் கிறிஸ்து வந்ததாக வேதவாக்கியங்களில் எங்குமே சொல்லப்படவில்லை. அவர் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படியாக வந்தார் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன. பிதா அவருக்கென்று ஆயத்தம் பண்ணி ஊற்றின “”பாத்திரத்தில்” பானம்பண்ணுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திடாமல், அடிமண்டி மட்டும் அதைப் பருகினார். அந்த ஜீவன் கொஞ்ச காலம் அல்லது நீண்ட காலம் காணப்படுவது பிதாவின் விருப்பமாக இருப்பினும், எப்படி இருப்பினும் – மரணபரியந்தமுமான அந்தச் சித்தத்திற்கான அவரது கீழ்ப்படிதலுக்காய், அவர் பலனைப் பெற்றுக்கொண்டார். அவர் அனைத்தையும் பிதாவின் கரங்களில் கொடுத்துவிட்டார். இது ஒரு பலியாகும்; ஏனெனில் அவரது ஜீவனைப் பயன்படுத்துவதற்கான உரிமை அவரிடத்தில் காணப்பட்டது. ஆனால் அவரது பிதாவின் சித்தத்திற்கான அவரது கீழ்ப்படிதலானது, பலிக்கு நேராய் வழிநடத்தினதாய் இருக்கின்றது; இதற்கே அவர் பலனைப் பெற்றுக்கொண்டார். “