R4642 (Page 216)
“இயேசு எதைப் பலிசெலுத்திட்டார்? எதைக் கொடுத்திட்டார் /கொடுத்துவைத்திட்டார்? என்று நாம் தெளிவாகக் காணமுடிகின்றதா? அவர் தம்மையே கொடுத்தார், பிதாவின் சித்தம் என்னவாக இருப்பினும் அதற்குத் தம்மை ஒப்புக்கொடுத்துவிட்டார், மாறாக அவரிடமிருந்து பூமிக்குரிய ஜீவன் எடுத்துப்போடப்படத்தக்கதாக அவர் பாவம்செய்து, அது அவரிடமிருந்து பறித்தெடுக்கப்படவில்லை. இந்த ஜீவனைப் பரலோக சுபாவத்திற்காகவென்று அவர் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் இல்லை. “”No man taketh it from me, but I lay it down of myself. I have power to lay it down, and I have power to take it again. This commandment have I received of my Father.”” “”ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்”” (யோவான் 10:18) எனும் அவரது வார்த்தைகளுக்கு இசைவாக தம் பூமிக்குரிய உரிமைகளை அவர் ஒப்படைக்க அல்லது கொடுத்துவைக்க மாத்திரமே செய்தார். அதை அவரிடமிருந்து எடுத்துப்போடத்தக்கதாக எந்த மனுஷனுக்கும் அதிகாரமில்லை; ஏனெனில், “”நியாயப்பிரமாணத்தைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான்”” என்று தேவன் வாக்களித்துள்ளார். ஆகையால் நமது கர்த்தர், தம்முடைய ஜீவனைத் தாமே முன்வந்து கையளித்துக் கொடுக்கவில்லையெனில், அவரது ஜீவனானது பாதுகாக்கப்பட்டிருக்கும்.
மறுபடியும் எடுத்துக்கொள்ளத்தக்கதாக அவர் அதைக் கொடுத்தார் /கொடுத்துவைத்தார். “”உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று கூறி அதைப் பிதாவின் கரங்களில் கொடுத்துவைத்திட்டார். ஆகையால் அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தபோது, புதுச்சிருஷ்டியாகிய அவருக்கு பூமிக்குரிய ஜீவனுக்கும், பூமிக்குரிய பாதுகாப்புக்கும், பூமிக்குரிய கனத்துக்கும், மகிமைக்கும், பூமிக்குரிய ஆளுகைக்கும் மற்றும் அதிகாரத்திற்குமுரிய அவரது உரிமைகள் அவருடையதாகவே இருந்தன. தம்முடைய பூமிக்குரிய உரிமைகள் எதையும் அவர் இழந்துபோகவும் இல்லை, பறிக்கொடுத்திடவுமில்லை. இந்தப் பூமிக்குரிய உரிமைகளே, கிறிஸ்து மூலமாக ஆதாம் மற்றும் அவரது சந்ததிக்குக் கடந்துவரும் தேவனுடைய ஆசீர்வாதங்கள் அனைத்திற்கும் அடிப்படையாயின.”