R5342 (Page 328)
“நமது கர்த்தர் தம்முடைய பூமிக்குரிய ஜீவனைக் laid down/கொடுத்து வைத்தபோது, அந்த ஜீவனைத் தமக்காகப் பயன்படுத்தும் வண்ணமாக, அந்தப் பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமையை அவர் தம் வசமாய் வைத்துக்கொள்ளவில்லை. “”விலையுயர்ந்த முத்தை” அடைய விரும்புபவர்கள் அனைவரும், தங்களிடத்திலுள்ள யாவற்றையும் விற்கவேண்டும், அதாவது தாங்கள் அனுபவிக்கின்றதான பூமிக்குரிய ஜீவன் (அ) சிலாக்கியங்கள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்திட வேண்டும் என்று அவர் நமக்கு உவமை ஒன்றில் கூறியுள்ளார் (மத்தேயு 13:45,46). நமது கர்த்தர் பரிபூரணமான பூமிக்குரிய ஜீவனை உடையவராய் இருந்தார். அவர் அந்த ஜீவனை ஒப்புக்கொடுத்தார். “”அவர் தம்முடைய ஆத்துமாவை (ஜீவனை) மரணத்திலூற்றினார்” (ஏசாயா 53:12). இது எதன் அடிப்படையில் ஆகும்? நமக்கு முன்பாக அவர் முன்வைத்ததான அதே காரியங்களினுடைய அடிப்படையிலேயே ஆகும்; அதாவது “”நாம் பிழைத்திருக்க வேண்டும் எனில், நாம் மரித்தாக வேண்டும்; நாம் ஆளுகைசெய்ய வேண்டுமெனில், நாம் பாடுபட வேண்டும்; நாம் அவரோடுகூட மரித்திருக்க வேண்டும்”” என்பதாக அவர் நம் முன் வைத்ததான இதே காரியங்களினுடைய அடிப்படையிலேயே ஆகும் (2 தீமோத்தேயு 2:11,12). ஆகையால் அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடருகின்றவர்களாகிய நாமும், அவர் செய்த வண்ணமாகவே செய்ய வேண்டும்.
நாம் அவரது சீஷர்களெனச் சகோதர சகோதரிகளுக்கு நம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுப்போமானால், நாம் இயேசு செய்ததையே செய்கிறவர்களாக இருப்போம். இவை அனைத்தும் உலகத்துக்காகச் செயல்படுத்தப்படப்போகின்றது. அந்தப் பூமிக்குரிய ஜீவனை அவர் கையளித்தது என்பது, பாதுகாத்து வைத்துக்கொள்வதற்காக இராமல், மாறாக இறுதியில் அதை மனுக்குலம் அனைத்திற்கும் (கைமாற்றிவிடுவதற்கே) கொடுத்துவிடுவதற்கே ஆகும். மனித ஜீவனுக்கான உரிமை இன்னும் அவரது கட்டுப்பாட்டின்கீழாக இருக்கின்றது. அவரே மாபெரும் மத்தியஸ்தராக, தம்மால் ஊற்றப்பட்டதான ஜீவனை, மனுக்குலத்தின் உலகத்திற்காகக் கொடுத்தருளுவார்.
சபையாகிய நாம் அவரோடுகூட, அவரது பாடுகளில் பங்கடையத்தக்கதாகவும், ஆவிக்குரிய தளத்தில் அவரது மகிமையான இராஜ்யத்தில் பங்கடையத்தக்கதாகவும், அவர் இப்பொழுது நமக்கு, தம்முடைய புண்ணியத்தைத் தரிப்பிக்கின்றவராய்/சாற்றுகின்றவராய் இருக்கின்றார். ஆகையால் இந்தப் பாத்திரமானது, பூமிக்குரிய ஜீவனையும், அதனுடன் உள்ள உரிமைகள் அனைத்தையும் முழுமையாய்த் துறந்துவிடுதலைக் குறிக்கின்றதாயிருக்கும். நமது கர்த்தருடைய பூமிக்குரிய ஜீவனானது பறிமுதல் செய்யப்படவில்லை, மாறாக laid down/கொடுத்து வைக்க மாத்திரமேபட்டது (யோவான் 10:17, 18). அதைக் கொடுத்து வைப்பதற்கான நோக்கம் என்னவெனில், மனுக்குலம் அதனை பெற்றுக்கொள்ளத்தக்கதாக அதை அவர் தனிப்பட்ட விதத்திலும், என்றென்றுமாகவும் துறந்துவிடுவதாக இருந்தது. அவர்கள்வசம் கைமாற்றும் காரியத்தினை, அவர் இன்னமும் நிறைவேற்றி முடிக்கவில்லை, எனினும் இந்த நோக்கத்திற்காகவே, அவர் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்துவிட்டார்.
உலகத்தை மீட்டுக்கொள்வதற்கான தெய்வீகச் சித்தத்தை நிறைவேற்றும் பணியை நமது கர்த்தர் மேற்கொண்டார் மற்றும் அதை நிறைவேற்றும் காரியத்தினைத் தொடர்ந்தார், எனினும் அவர் நோக்கத்தினை இன்னமும் நிறைவேற்றி முடிக்கவில்லை. அவர் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார், ஆனால் அதை அவர் பறிக்கொடுத்து இழந்துபோகவில்லை. அவர் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டபோது, அவருக்கு இன்னமும் அந்தப் பூமிக்குரிய ஜீவன்மீது உரிமை இருந்தது மற்றும் அந்த ஜீவனைத் தமக்காக தாம் பயன்படுத்தக்கூடாது என்றும், அதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்களாகிய உலகம் அனைத்திற்கும், தம்முடைய சபை தம்மோடுகூட ஆளுகை செய்யும் ஆயிர வருடங்களடங்கிய தம்முடைய ஆளுகையின் முடிவில், அது கொடுக்கப்பட வேண்டும் என்றுமுள்ள புரிந்துகொள்ளுதலை உடையவராய் இருந்தார்.
ஆகையால் அவரது ஜீவன், அவரிடமிருந்து பிடுங்கப்படவில்லை; அவரது கீழ்ப்படியாமையினால் மாத்திரமே அவரிடமிருந்து, அவரது ஜீவன் பிடுங்கப்பட முடியும் (லேவியராகமம் 18:5; எசேக்கியேல் 20:11; லூக்கா 10:28; ரோமர் 10:5). அவர் தாமாய் முன்வந்து, தெய்வீகச் சித்தத்திற்கு இசைவாகத் தமது ஜீவனைக் laid down/கொடுத்து வைத்தார். தம்முடைய ஜீவனானது தெய்வீக நீதியினுடைய கரங்களில் சொத்தாகக் காணப்படத்தக்கதாகவும், இதினிமித்தம் காலங்கள் வரும்போது, அந்தச் சொத்தை தாம் மனுக்குலத்திற்காகப் பயன்படுத்தத்தக்கதாகவும், அவர் தமது ஜீவனைக் கொடுத்து வைத்தார் (யோவான் 6:51).
நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவனானது என்றென்றைக்குமாய்க் கொடுக்கப்பட வேண்டும் என்பதும், அதை அவர் திரும்ப எடுக்கக்கூடாது என்பதும் தெய்வீக நோக்கமாய்க் காணப்பட்டது. அவர் தம்முடைய ஜீவனை யோர்தானில் அர்ப்பணம் பண்ணி, அந்தப் பலியைக் கல்வாரியில் முடித்தார். சுவிசேஷ யுகம் முழுவதிலும், அவர் தம்முடைய மறைபொருளான சரீரத்தைப் பலிசெலுத்திக் கொண்டுவருகின்றார். இந்தச் சரீர அங்கத்தினர்களுடைய பலியினை அவர் நிறைவேற்றின உடனே, மகா பிரதான ஆசாரியனுக்குச் சொந்தமான, அவர்களது ஜீவனுக்கான உரிமைகளானது, புதிய உடன்படிக்கையை முத்திரிப்பதின் மூலமாக உலகத்தை வாங்குவதற்காக, மீட்டுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும். இதன்பின் உடனடியாக, அவரது இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும். அவரது புண்ணியமானது, அவரது ஜீவ-உரிமையானது முழுச்சபையும், திரைக்கு அப்பால் கடந்து போகாததுவரையிலும் அடுத்தக் கட்டமாகச் செயல்படுத்தப்படாது என்பது, கிருபாசனம் ஆட்டினுடைய இரத்தத்தினால் தெளிக்கப்படும் காரியத்தினால் அடையாளப்படுத்தப்படுகின்றது. நமது கர்த்தருடைய இரத்தமும், அவரது சரீரத்தினுடைய இரத்தமும், அனைத்தும் ஒரே இரத்தமாயிருக்கின்றது. அநேக அங்கத்தினர்கள் அடங்கின ஓர் ஆசாரியன் ஆகும். அது அனைவருக்குமான, அதாவது சர்வலோகத்தினுடைய பாவங்களுக்குமான ஒரே பாவநிவாரணம் ஆகும் (1 யோவான் 2:2). “