R4905 – நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

R4905 (page 398)

நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்

QUESTIONS ON OUR LORD'S LIFE-RIGHTS

ஆவிக்குரிய ஜீவ-உரிமைகள் பலிசெலுத்தப்படவில்லை

கேள்வி – நமது கர்த்தர் மனிதனாகிடுவதற்கு முன்னதாக ஓர் ஆவிக்குரிய ஜீவியாகக் காணப்பட்ட போது, அவர் எந்த உரிமைகளை உடையவராய் இருந்தார் மற்றும் அவர் மனிதனான போது, அந்த உரிமைகளுக்கு என்னவாயிற்று?

பதில் – ஐசுவரியமானவராய்க் காணப்பட்ட நமது கர்த்தர் பூமிக்குரிய உரிமைகளுக்கும் பரிபூரணத்திற்கென்றும், பரலோக உரிமைகளையும், பரிபூரணத்தையும் (exchange) மாற்றிக்கொண்டதன் காரணமாக, அவர் நம் நிமித்தமாய்த் தரித்திரரானார் (2 கொரிந்தியர் 8:9). இந்த (exchange) மாற்றிக்கொள்ளுதலானது பலியல்ல (பலியாக ஏறெடுக்கப்படவில்லை); ஏனெனில் மனிதனாகிய கிறிஸ்து இயேசுதான் மீட்கும்பொருளானார். மனிதனாகிடுவதற்கு முன்னதாக அவர் கொண்டிருந்த உரிமைகள் எதையும் அவர் பலிசெலுத்திட்டதாக வேதவாக்கியங்களில் எதுவும் சொல்லப்படவில்லை. எனினும் அவற்றை “”அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு”” துறந்துவிட்டார் (எபிரெயர் 12:2).
மனிதனுக்கு அவசியமான உரிமைகள், பூமிக்குரிய உரிமைகளாக, மனுஷீக உரிமைகளாகக் காணப்படுகின்றன; மேலும் இந்த உரிமைகளைத்தான், தம்முடைய பூமிக்குரிய ஜீவனைப் பலிசெலுத்தினதன் வாயிலாக இயேசு மீட்டுக்கொண்டார். ஓர் ஆவிக்குரிய ஜீவியாகக் காணப்பட்ட அவரால் ஆவிக்குரிய ஜீவிக்கடுத்த உரிமைகளைப் பலிசெலுத்தியிருக்க முடியாது; ஏனெனில் எந்த ஆவிக்குரிய ஜீவிகளும் மரணத்திற்குள்ளாகத் தீர்க்கப்படவில்லை. மனிதனாகிய ஆதாமையே அவர் மீட்கவேண்டியிருந்தது. “”மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” (1 கொரிந்தியர் 15:21,22).

மீட்கும்பொருள் விலைக்கிரயம் கல்வாரியில் கொடுக்கப்பட்டது

கேள்வி – கல்வாரியில் நமது கர்த்தர் எதைச் செய்துமுடித்தார்?

பதில் – நமது கர்த்தர் ஜீவனைக் கொடுத்து வைத்த காரியமானது, நாம் ஏற்கெனவே காண்பித்திருந்ததுபோன்று மனுக்குலத்தை மீட்டிடவில்லை, மாறாக தேவனுடைய ஏற்றகாலங்களிலும், வேளைகளிலும் மனுக்குலம் விடுவிக்கப்படத்தக்கதாக மீட்கும்பொருள் விலைக்கிரயம் வழங்கப்பட்ட காரியமாகக் காணப்பட்டது; அவர் தம்மையே antilutron-ஆக (சரி நிகர் சமான விலையாக) கொடுத்தவராயிருந்தார் (1 தீமோத்தேயு 2:5,6).

நமது கர்த்தருடைய பலியும், அவர் மனமுவந்து தமது ஜீவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்ததும், தேவ பார்வையில் சிறப்பானதாய்க் காணப்பட்டது மற்றும் உயர்தளத்தில் ஒரு புதிய ஜீவனை அவருக்குக் கொடுப்பதன் வாயிலாக பிதா அவருக்கு வெகுமானமளித்தார். புதிய ஜீவனானது யோர்தானில், அவரது ஜெநிப்பித்தலில் துவங்கினது மற்றும் அவரது உயிர்த்தெழுதலில் நிறைவடைந்தது. பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமையானது, பாவத்தின் காரணமாய்ப் பறிக்கொடுக்கப்படாததால், அது தொடர்ந்து நமது கர்த்தருக்கு உரியதாகவே இருந்தது. ஒரு மனிதனுடைய பாவத்திற்காக என்று, நீதிக்கு ஈடுகட்டும் வண்ணமாக அந்தப் பூமிக்குரிய ஜீவ-உரிமையினை அவர் கொடுக்க வேண்டுமென்றிருக்கின்றார். மாம்ச ஆத்துமாவாக அவர் மரணத்திற்குள்ளாக்கப்பட்டார். அவர் ஆவிக்குரிய ஆத்துமாவாகப் பலனளிக்கப்பட்டார். ஆதாம் மற்றும் அவரது சந்ததியாருக்காகப் பயன்படுத்துவதற்கும், அவர்களுக்காகப் புதிய உடன்படிக்கையினை முத்தியிரையிடுவதற்குமென்று தம்முடைய மாம்ச ஆத்துமாவிற்கடுத்த உரிமையினை அவர் உடையவராய் இருக்கின்றார்.

நீதியும் / புண்ணியமும், ஜீவ-உரிமையும்

கேள்வி – உலகத்தின் பாவங்களுக்காகவெனக் கிறிஸ்துவின் புண்ணியம்/நீதி பயன்படுத்தப்படும் காரியத்திற்கும், உலகத்தின் பாவங்களுக்காகவெனக் கிறிஸ்துவின் ஜீவ-உரிமையானது அவரால் கொடுக்கப்படும் காரியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தினை நாம் எப்படி அறிந்துகொள்வது?

பதில் – மனித தளத்தில் நமது கர்த்தருக்குக் காணப்பட்ட நீதியானது, அவர் மனிதனாகக் காணப்பட்டபோது, அவருக்கு உரியதாகவே காணப்பட்டது. இப்பொழுதோ மனிதன் என்ற விதத்தில் அவருக்கு நீதி ஏதுமில்லை. அந்த நீதியினால் உண்டான தகுதியை/credit மாத்திரமே பிதாவின் பார்வையிலும், நீதியின் பார்வையிலும் ஒரு புண்ணியமாக அதாவது சுவிசேஷ யுகத்தின்போது சபைக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளதும், ஏற்றகாலத்தில் உலகத்திற்காகப் பயன்படுத்தப்படப்போகின்றதுமான புண்ணியமாகப் பெற்றிருக்கின்றார்.

மனுஷீக ஜீவ-உரிமைகளானது, இயேசு மரிக்கும் தருணம்வரையிலும் அவருக்கு அவசியமாய் இருந்தது. மரிக்கையில் பிதாவின் ஏற்பாட்டிற்கு இசைவாக, அவர் அதைப் பிதாவிடம் ஒப்படைத்துவிட்டார். “”பிதா எனக்குக் கொடுத்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?”” என்று அவர் கூறினார் (யோவான் 18:11). அவர் மனிதனாக இருந்தபோது, அந்த ஜீவ-உரிமைகளானது அவருக்குத் தேவையானவைகளாக இருந்தன; ஆனால் இப்பொழுதோ அவை அவருக்கு அவசியமில்லை; ஏனெனில் அவர் மேலான உரிமைகளை உடையவராயிருக்கின்றார். ஆனாலும் அவர் மனுஷீக ஜீவனுக்கான ஓர் உரிமையினையும் உடையவராயிருக்கின்றார்; இந்த உரிமையானது அவருக்கென்று தனிப்பட்ட விதத்தில் அவசியமில்லாததாகும் – எனினும் அது அவருக்கு – அதாவது மனுக்குலத்தின் உலகத்தார் விரும்பும்பட்சத்தில், அவர்கள் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாய், அவர்களுக்குக் கொடுத்திடுவதற்கு, அவருக்குத் தேவையாய் இருக்கின்றது.

கர்த்தரானவர் அவரது நிலைமையின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும். முதலாவதாக அவர் ஆவியின் ஜீவியாகக் காணப்பட்டிருந்தார்; இரண்டாவதாக அவர் மாம்சமாக்கப்பட்டவராய் இருந்தார் – பரிசுத்தராயும், மாசில்லாதவராகவும், குற்றமில்லாதவராகவும், பாவிகளுக்கு விலகினவராகவும் காணப்பட்டார்; மூன்றாவதாகப் பூமிக்குரிய ஜீவனானது தம்மிடமிருந்து எடுக்கப்படத்தக்கதாக அவர் அனுமதித்ததின் காரணமாக, அவரை உயர்வாய் உயர்த்தி அவருக்குத் தேவன் தனிப்பட்ட விதத்தில் பலனளித்தார் (பிலிப்பியர் 2:9).

இந்த மகிமையான ஜீவி சில விஷயங்களை மனுக்குலத்தின் உலகத்திற்கென்று செய்யும்படிக்குத் தேவன் ஏற்பாடு பண்ணியுள்ளார். இக்காரியங்களையெல்லாம் செய்வதற்கான வல்லமை என்பது, அவருக்கென்று தேவைப்படாத வண்ணமுள்ள பூமிக்குரிய ஜீவனுக்கான ஓர் உரிமையினை அவர் இன்னமும் ௨டையவராய் இருக்கின்றார் எனும் உண்மையின் அடிப்படையினாலானதாகும். ஆயிரவருட யுகத்தின்போது உலக ஜனங்கள் புதிய உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு இசைவாக வருகையில், அவர்களுக்குப் படிப்படியாக அதைக் கொடுக்கத்தக்கதாக, அதை அவர் வைத்திருக்கின்றார். அதில் ஒரு பகுதியை – தம்முடைய அங்கத்தினர்களாகுவதற்கு விருப்பம்கொள்பவர்களுடைய குறைவுகளை மூடத்தக்கதாகவும், அவர்களது பலிகளைப் பிதா ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவானதாக்கவும் வேண்டி இப்பொழுது சாற்றுகின்றார்.

கிறிஸ்துவின் புண்ணியமானது/நீதியானது, பிதாவின் சித்தத்தைச் செய்கிறதில் காணப்பட்டது. அதற்குப் பிதா திரைக்கு அப்பக்கத்தில் புதிய சுபாவத்தினால் அவருக்குப் பலனளித்தார். மேலும் அந்த நீதி/புண்ணியம் இன்னமும் காணவேபடுகின்றது; மேலும் அவர் மனுக்குலத்திற்கு எதைச் செய்தாலும்கூட, அவர் பிதாவின் பார்வையில் எப்போதுமே தனிப்பட்ட ஒரு நீதியை/புண்ணியத்தினை ௨டையவராகவே இருப்பார். ஆகையால் அவர் தம்முடைய நீதியை/புண்ணியத்தினைக் கொடுத்துவிடுவார் என்று நாம் எண்ணிடமுடியாது; இப்படிக் கொடுத்துவிடுவாரானால், அவர் நீதி/புண்ணியம் இல்லாமல் விடப்படுவார். ஆனால் தமக்கான வெகுமானத்தை அடைந்தாலும், அவர் மனுஷீக ஜீவனுக்கான உரிமையினை உடையவராய் இருப்பார் மற்றும் இப்படிக் காணப்படுவதே தேவனுடைய ஏற்பாடாகவும் காணப்படுகின்றது. இதுவே பிதாவின் பார்வையில் ஒரு புண்ணியமாக ஆதாம் மற்றும் அவரது பிள்ளைகளுடைய மீட்பிற்கான ஒரு கிரயமாக அவர் விலைகொடுத்து வாங்கினதாகக் காணப்படுகின்றது. இதை அவர் சீக்கிரத்தில் உலகத்திற்காகப் பயன்படுத்தப்போகின்றார் மற்றும் இதைத்தான் அவர் இப்பொழுது நமக்குத் தரிப்பிக்கின்றார்/சாற்றுகின்றார்.

கிறிஸ்துவின் புண்ணியத்தினை/நீதியினைச் சாற்றுதல்

கேள்வி – “”கிறிஸ்துவினால் சாற்றப்படும் புண்ணியம்/நீதி”” என்றால் என்ன?

பதில் – கிறிஸ்துவினால் சாற்றப்படும் புண்ணியத்தைக் குறித்துப் பேசுகையில், அவர் தனிப்பட்ட ஒரு புண்ணியத்தினை, அவருக்கென்று ஒரு நீதியினை வைத்திருந்தார் என்றும், அதை அவர் ஒருபோதும் கொடுத்துவிடவில்லை என்றும் நாம் தெளிவாய் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவரது நீதி, அவருக்கு வேண்டியிருந்தது. அப்படியானால் அவர் நீதியை இழக்காமல் அவரால் அவரது நீதியினை நமக்குக் கொடுத்திட முடியாது. இதே விஷயம் அவரது ஜீவ-உரிமை விஷயத்திலும் பொருந்துகின்றதாய் முடிய இருக்கும். ஜீவிப்பதற்கான ஓர் உரிமையினை அவர் உடையவராய் இருந்தார்; ஆனால் ஜீவிப்பதற்கான இந்த உரிமையினை அவர் நமக்குத் தரிப்பித்துத் தரவில்லை/சாற்றிடவில்லை; ஏனெனில் அது அவருக்கும் வேண்டியதாயிருந்தது. அவருக்கு அவரது சொந்த தனிப்பட்ட புண்ணியம்/நீதி தேவையாயிருந்தது.

அப்படியானால் ஜீவ-உரிமையினையும், நீதியினையும் அவர் ஆயிரவருட யுகத்தின்போது மனுக்குலத்திற்குக் கொடுத்திடுவார் என்றும், சுவிசேஷ யுகத்தின்போது சபைக்குச் சாற்றுகின்றார் என்றும் நாம் எந்த அர்த்தத்தில் சொல்லி வருகின்றோம்? பின்வரும் விதத்திலாகும்: அவர் தமது மனுஷீக ஜீவ-உரிமையினை அதாவது மனிதனாகிய கிறிஸ்து இயேசுவின் கீழ்ப்படிதலுக்கான பலனாக அவருக்குரியதான புண்ணியத்தினை, அதாவது ஒரு மனுஷ ஜீவியாக வாழ்வதற்கான உரிமையினை அல்லது சிலாக்கியத்தினை மனுக்குலத்திற்குக் கொடுத்திடுவார். அந்த உரிமையானது நியாயப்பிரமாணத்திற்கான கீழ்ப்படிதலின் காரணமாக அவரால் அடையப்பெற்றதாகும் (ரோமர் 10:5; கலாத்தியர் 3:12). இப்பொழுது அவர் உயர்வாய் உயர்த்தப்பட்டிருக்கின்றார்; திவ்விய சுபாவமுடையவராய் இருக்கின்றார் மற்றும் இனிமேல் மனுஷீக ஜீவனுக்கான அந்த உரிமையும், அதனோடுகூட வரும் நீதியும் அவருக்குத் தேவைப்படாது. அவர் தமது தற்போதைய நிலைமையில் முற்றிலும் திருப்தியடைந்தவராகவும், முழுமையடைந்தவராகவும் காணப்படுகின்றார்.”” விரைவில் அவர் மனுஷீக ஜீவனுக்கான உரிமையினையும், அதனோடுகூட வரும் நீதியையும், அதாவது அந்த மாம்சீக பலியின் புண்ணியத்தினை உலகத்திற்குக் கொடுக்கவிருக்கின்றார். இதையே அவர் தற்காலத்தில் சபையின் அபூரணங்களை நிறைவுபடுத்திடுவதற்கென்று, சபைக்குச் சாற்றுகின்றவராய் இருக்கின்றார். நாம் அவரில் முழுமையடைந்திருக்கின்றோம், ஆகையால் அவர் வாயிலாக நாம் நம்மையே பலிசெலுத்திடும்போது, இது தேவனால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க பலியாகக் காணப்படும் மற்றும் பரிசுத்தமானதாய்க் கருதப்படும்.

ஜீவ – உரிமைகள் புது உடன்படிக்கையில் அடையாளப்படுத்தப்படுகின்றது

கேள்வி – கல்வாரியில் கொடுத்து வைக்கப்பட்டதான இயேசுவின் ஜீவ-உரிமைகளானது, ஆயிரவருட யுகத்தின் போது எங்கே காணப்படும்?

பதில் – மகாபெரும் மீட்பரின் ஜீவ-உரிமை என்று நாம் சொல்லுகிற காரியமானது, பாவநிவாரண இரத்தத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்று நாம் புரிந்திருக்கின்றோம். நிழலில் பாவநிவாரண நாளின் இறுதியில், பாவநிவாரண இரத்தமானது ஒட்டுமொத்த மனுக்குலத்திற்காக நீதிக்குச் செலுத்தப்படும் மற்றும் அது அவர்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படும்; அதாவது அப்போஸ்தலன் சொல்லுகின்றதுபோல், “”ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக”” ஆகும் (எபிரெயர் 2:17). ஜனங்கள் தங்கள் மரண ஆக்கினையினின்று விடுதலைப்பண்ணப்பட்டவுடன், அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள துவங்குவதற்குரிய நிலைமையில் காணப்படுவார்கள்; ஆனாலும் இக்காலத்திற்கு முன்பல்ல. மகா பிரதான ஆசாரியனென நமது கர்த்தர் சுவிசேஷ யுகத்தின் முடிவில், தேவனுக்கும், ஆபிரகாமின் சந்ததியாகிய மாம்சீக இஸ்ரயேலுக்கும் இடையில் பாவநிவாரண இரத்தத்தைக்கொண்டு புது உடன்படிக்கையினை முத்திரையிடுவார்; மேலும் அவர் “”தம்முடைய சரீரமாகிய சபையோடு,”” அந்த உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருப்பார். அந்தப் பிரமாணத்திற்கு முழு இசைவாக வருகின்ற யாவரும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள். அந்த வருஷங்கள் முழுவதும் – திரும்பக்கொடுத்தலின் சிலாக்கியங்களை ஜனங்கள் பெற்றுக்கொள்வார்கள் என்று வாக்களிக்கின்றதான, அந்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளை, காரியங்களை நடந்தேற்றுவார்.

அப்போது மனுஷ ஜீவனுக்கான உரிமையானது மீட்பராகிய நமது கர்த்தருடைய கரங்களினின்று கடந்துபோய், அதுமுதற்கொண்டு உடன்படிக்கையில் அடையாளப்படுத்தப்படும்; அது மனிதன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் அறிவித்த யாவற்றையும் உறுதியளித்திடும். மனுஷருடைய கல்லான இருதயம் மாறி, சதையான இருதயம் உண்டாகும்; மற்றும் இந்த உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளுக்கேற்ப ஜீவிப்பவர்கள், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளலாம். நமது கர்த்தரினால் கொடுத்துவைக்கப்பட்டதான ஜீவ-உரிமைகளே, ஆயிரவருட யுகத்தின்போது, புது உடன்படிக்கையாய்க் காணப்படும். அந்தப் பிரமாணத்தினைக் கைக்கொள்ள தவறுபவர்கள் சிட்சைகள் பெறுவார்கள். இந்த ஏற்பாட்டின் வாயிலாக கிறிஸ்து புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரென, ஆயிரவருடங்களளவும் ஆசீர்வாதங்களை வழங்கிக்கொண்டிருப்பார். உலகத்தின் பாவங்களுக்காக – உலகத்தின் மீட்பிற்காக நீதியிடம் கொடுக்கத்தக்கதாக, ஜீவனுக்கான உரிமையினை நமது கர்த்தர் இந்தச் சுவிசேஷ யுகத்தின்போது தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றார். இந்த யுகத்தின் முடிவில், அவர் இந்த உரிமையினைக் கொடுத்துவிட்ட உடனே, நீதி அதைக்கொடுக்க, மனுக்குலம் அதைப் பெற்றுக்கொள்வார்கள்.