Q446:4 ஜீவ-உரிமைகள் — ஜீவிப்பதற்கான உரிமை

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

Q446:4

ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை

LIFE-RIGHTS--Right to Life

“கேள்வி – (1916-Z5881)-4- “”ஜீவிப்பதற்கான உரிமை” மற்றும் “”ஜீவ-உரிமைகள்” ஆகிய வார்த்தைகள் அர்த்தப்படுத்துவது என்ன? இவ்விரண்டு பதங்களுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?

பதில் – தேவனுடன் இசைவாய்க் காணப்படுவதன் மூலம் ஜீவிப்பதற்கான உரிமையினை ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்; காரணம் தம்முடைய அறிவுடைய சிருஷ்டிகள் யாவும், தம்முடைய திவ்விய பிரமாணங்களுக்கும், அதன் நிபந்தனைகளுக்கும் இசைவாய் ஜீவிக்கும் பட்சத்தில் தொடர்ந்து ஜீவிக்கலாம் என்று தேவன் ஏற்பாடு பண்ணியிருந்தார். ஆகையால் ஜீவிப்பதற்கான உரிமை என்பது ஆரம்பத்தில் தகப்பனாகிய ஆதாமினால் அனுபவிக்கப்பட்ட சிலாக்கியமாய்க் காணப்படுகின்றது. அவர் ஜீவிப்பதற்கான உரிமை ஒன்றினைப் பெற்றவராயிருந்தார் மற்றும் அவர் பாவம் செய்யாதிருந்தாரானால் அந்த உரிமையானது அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்காது. இயேசுவும்கூட ஜீவிப்பதற்கான உரிமை ஒன்றினைப் பெற்றிருந்தார். உலகத்திற்குள் வருவதற்கு முன்பு மாத்திரமல்லாமல், மனிதனாகிய இயேசுவான பிற்பாடும் அவர் அந்த உரிமையினை உடையவராயிருந்தார். அந்த உரிமையின் காரணமாகத்தான் அவரால் தம்முடைய ஜீவனை ஆதாம் மற்றும் அவரது சந்ததிக்காகப் பலியாய்க் கொடுத்து வைக்க முடிந்தது. ஞானஸ்நானத்தின்போது அவர் தம்முடைய அர்ப்பணிப்பைப் பண்ணின பிற்பாடு, அவர் ஒரு மனிதனாக ஜீவிக்கும் உரிமை இல்லாதவராயிருந்தார்; காரணம் ஜீவிப்பதற்கான அந்த உரிமையினை அவர் விட்டுக்கொடுத்துவிட்டவராகக் காணப்பட்டார். ஆனால் ஏதோ சில திவ்விய பிரமாணத்தை மீறுவதன் மூலமோ அல்லது தம்முடைய ஒப்பந்தத்தை அல்லது உடன்படிக்கையை மீறுவதன் மூலமோ தவறாதது வரையிலும், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அவர் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட ஒரு புதுச்சிருஷ்டியென ஜீவிப்பதற்கான உரிமையினை உடையவராயிருந்தார். மனுக்குலத்தின் உலகமானது, ஆயிரவருட யுகத்திற்குப் பிற்பாடு, பூரணத்தை அவர்கள் அடைந்த பிற்பாடு, அவர்கள் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, அவர்களை அவரும் ஏற்றுக்கொண்ட பிற்பாடு, அவர்கள் ஜீவிப்பதற்கான உரிமையினை உடையவர்களாய் இருப்பார்கள். தகப்பனாகிய ஆதாம் பாவம் செய்வதற்கு முன்னதாக ஆரம்பத்தில் பெற்றிருந்த ஜீவனுக்கான அதே உரிமையினை மனுக்குலம் பெற்றுக்கொண்டவர்களாய் இருப்பார்கள்.

“”ஜீவ-உரிமைகள்.”” இந்த வார்த்தையானது பல்வேறு விதங்களில் நாம் பயன்படுத்தக்கூடியவர்களாய் இருப்போம். இவ்வார்த்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பயன்படுத்தி, அவர் ஜீவ-உரிமைகளை உடையவர் என்று சொல்லுகையில், அவர் ஒரு மனிதனாக தம்முடைய ஜீவனை அர்ப்பணம் பண்ணினபோது, அவர் அந்த ஜீவனைப் பறிக்கொடுப்பதற்கு ஏதுவாய் உண்மையில் ஏதும் செய்திடவில்லை என்று நாம் சொல்லலாம். அதைக் lay down/ கொடுத்து வைக்க அவர் சம்மதித்திருந்தார்; அது நியாயமாய் அவருடையதாகும்; இல்லையேல் மறுபடியும் அந்த உரிமைகளை மற்றவர்களுக்குப் பயன்படுத்துவதற்கென்று அவற்றைப் பெற்றிராதவராகக் காணப்பட்டிருந்திருப்பார். அவரது தனிப்பட்ட நீதியினால் அந்த உரிமையினை அவர் தக்கவைத்துக் கொண்டவராய்க் காணப்பட்டார். ஆகையால் மனுஷீக ஜீவனுக்கான உரிமை ஒன்றினை அவர் இன்னமும் உடையவராகவே இருக்கின்றார்; காரணம் தம்மிடமிருந்து எடுக்கப்படும்படிக்கு அவர் அனுமதித்ததான இந்த ஜீவனை அவர் பறிக்கொடுத்து, இழந்துபோகவில்லை. அவருக்கென்று தனிப்பட்ட விதத்தில் இப்பொழுது மனுஷீக ஜீவனோ அல்லது ஜீவ-உரிமைகளோ தேவைப்படாது என்றபோதிலும், மனித ஜீவிக்கான ஜீவ-உரிமைகளை அவர் இன்னமும் உடையவராய் இருக்கின்றார்; அவருக்கென்று இந்த ஜீவ-உரிமைகள் தேவைப்படாததற்கான காரணம் அவர் மேலான ஒன்றைப் பெற்றுக்கொண்டவராக இருக்கின்றார் மற்றும் அவரால் ஒரே நேரத்தில் இரண்டு ஜீவன்களைப் பயன்படுத்த முடியாது. அவர் திவ்விய ஜீவ-உரிமைகளை உடையவராய் இருக்கின்றார்; ஆனால் அவர் இன்னமும் இந்த மனுஷீக ஜீவ-உரிமைகளைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார்; மேலும் இதை அவர் ஆதாமுக்காகவும், அவர் வாயிலாக இழந்துபோகப்பட்டதுமான அனைத்திற்காகவுமான முழுமையான ஈடாக, விலைக்கிரயமாகப் பயன்படுத்திப் பகிர்ந்தளிக்கவிருக்கின்றார்.”