R4461 – எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

R4461 (Page 259)

எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்

OUR WESTERN CONVENTION TOUR

தெய்வீகத் திட்டத்திற்கு இசைவாக நமது கர்த்தராம் இயேசு, நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிதலுள்ள சுதந்திரவாளியெனத் தாம் உரிமைப்பெற்றிருந்த பூமிக்குரிய ஜீவனையும், சாம்ராஜ்யத்தையும் வைத்துக்கொள்வதற்குப் பதிலாக, அதை அவர் பலிசெலுத்திவிட்டார் – மரணத்தில் அதைக் laid it down/கொடுத்து வைத்திட்டார். இதுவே பிதாவின் எண்ணமாக இருந்தது – அதாவது பூமிக்குரிய ஜீவனையும், உரிமைகளையும் முழுமையாய்ப் பலிசெலுத்துமளவுக்கு இயேசு தமது விசுவாசத்தையும், கீழ்ப்படிதலையும் காண்பிப்பாரெனில், பிதா அவரைத் தெய்வீக வல்லமையினால் மரணத்திலிருந்து மறுபடியுமாய் பூமிக்குரிய நிலைமைகளுக்கு இல்லாமல், மாறாக பரலோக நிலைமைகளுக்கு எழுப்பிட – அதாவது “எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவரை உயர்த்திட” எண்ணம் கொண்டிருந்தார் (எபேசியர் 1:20). இப்படி உயர்த்தப்பட்டிருக்கும் இயேசு அவரால் பலிசெலுத்தப்பட்ட பூமிக்குரிய உரிமைகளைத் தொடர்ந்து பெற்றிருக்க வேண்டும் என்பது பிதாவின் எண்ணமாக இருந்தது இவற்றைப் பாவத்தின் விளைவாக தங்கள் ஜீவன்களையும், பூமிக்குரிய உரிமைகளையும் இழந்துபோயிருந்த ஆதாமையும், அவரது சந்ததியாரையும் ஆசீர்வதிக்கத்தக்கதாகக் give away/கொடுத்துவிடத்தக்கதாக, இயேசு இவற்றைச் சொத்தாக அல்லது விலையேறப்பெற்ற உடைமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்பது பிதாவின் எண்ணமாக இருந்தது. உயிர்த்தெழுந்த மற்றும் மகிமையடைந்த நமது கர்த்தர் பரமேறினபோது, ஆதாமையும், அவரது சந்ததியிலுள்ள அங்கத்தினன் ஒவ்வொருவரையும் சீர்ப்பொருந்தபண்ணுவதற்கு அவசியமான ஆசீர்வாதத்தினைப் போதுமானதாகப் பெற்றிருந்தவராய் இருந்தார். கிறிஸ்துவினுடைய அந்த ஒரே பலியானது அனைவருக்கும் போதுமானதாய்க் காணப்படுகின்றது. இயேசு ஒப்புக்கொடுத்துவிட்டவைகளானது, பூமிக்குரிய ஆசீர்வாதங்களாக, பூமிக்குரிய ஜீவனாக, பூமிக்குரிய வல்லமையாக, பூமிக்குரிய பரதீசாக இருந்ததே ஒழிய, பரலோகக் காரியங்களல்ல.