Q574:2
கேள்வி (1916)-2- “”ஜீவ-உரிமைகள்” எனும் வார்த்தைக்கான அர்த்தம் என்ன? மனுக்குலம் எப்போதேனும் “”ஜீவ-உரிமைகளை”” அடையுமா?
பதில் – வெவ்வேறு மனங்களானது “”ஜீவ-உரிமைகள்” எனும் வார்த்தைக்கு வெவ்வேறு அர்த்தங்களைச் சாற்றக்கூடும். நாம் ஓர் அர்த்தத்தினை இதோ தெரிவிக்கின்றோம்:- ஆதாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தபோது அவர் ஜீவ-உரிமைகளை உடையவராயிருந்தார்; காரணம் அவர் ஒருவேளை பூரணமாய்க் காணப்பட்டும், தேவனுடன் இசைவான நிலைமையினைத் தக்கவைத்தும் இருந்தாரானால் அவர் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தேவன் திட்டம் பண்ணியிருந்தார். ஆகையால் அவர் தேவனுடைய ஏற்பாடு மற்றும் வாக்குறுதியின் கீழ் ஜீவனுக்கான உரிமை ஒன்றை உடையவராயிருந்தார். மேலும் இயேசுவும் ஆதாமின் ஜீவ-உரிமைகளை உடையவராயிருந்தார், காரணம் அவர் பரிசுத்தராயும், மாசில்லாதவராயும், குற்றமற்றவராயும், பாவிகளுக்கு விலகினவராயும், பாவம் அறியாதவராயும் இருந்தார். ஆகையால் தகப்பனாகிய ஆதாமுக்கு இருந்ததுபோன்ற ஜீவ-உரிமைகளை இயேசுவும் உடையவராயிருந்தார். என்ன நேர்ந்தாலும் மரணபரியந்தமும் பிதாவின் சித்தத்தைச் செய்யத்தக்கதாக, இயேசு தம்முடைய பூமிக்குரிய ஜீவ-உரிமைகளைத் தாமாய் அர்ப்பணித்தபோது, அவரது ஜீவ-உரிமைகள் விஷயத்தில் அத்துமீறல் பண்ணப்பட அவர் அனுமதித்தவராய் மாத்திரமே காணப்பட்டார், மாறாக அதைக் கைநெகிழவிடவில்லை. அவரது ஜீவ-உரிமைகளின் விஷயத்தில் தலையிடப்படுவதற்கு எந்த அவசியமும் இல்லாதிருந்தது. தம்மைப் பாதுகாக்க அவர் பிதாவிடம் லேகியோன் தூதர்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டிருந்திருக்க முடியும் என்று அவர் கூறியிருக்கின்றார். ஆனால் இப்படிச் செய்ய அவர் விரும்பவில்லை. பழைய ஏற்பாட்டின் நிழல்களினாலும், தீர்க்கத்தரிசனங்களினாலும் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ள தேவசித்தத்தை அவர் அறிந்திருந்தார் மற்றும் தேவனுடைய சித்தத்தைச் செய்வதில் அவர் பிரியங்கொண்டிருந்தார் மற்றும் தாமாய் விட்டுக்கொடுத்து, தம்முடைய ஜீவனை எடுப்பதற்கு மனிதர்களை அனுமதித்தார். மனுஷர்களால் ஜீவனுக்கான அவரது உரிமைகளை எடுத்துப்போட முடியாது; அவர்கள் அவரை மாம்சத்தில் கொலைசெய்தாலும் மற்றும் பிதா அவரை ஆவிக்குரிய தளத்தில் உயிர்த்தெழுப்பினாலும், அந்தத்தளத்திலுள்ள ஜீவ-உரிமைகளை அவர் உடையவராகவே இருந்தார் மற்றும் மாம்ச ஜீவனுக்கான உரிமைகளை அவர் இன்னமும் உடையவராகவே இருக்கின்றார். எப்படி? காரணம் அவற்றை அவர்களிடத்தில் இயேசு கொடுத்துவிடவில்லை. அவற்றைத் தம்மிடமிருந்து தகாதவிதமாய் எடுத்திடுவதற்கு இயேசு மனிதர்களை அனுமதிக்க மாத்திரமே செய்தார். மனுஷர்கள் அவற்றை ஆதாமிற்காகவும், அவரது சந்ததிக்காகவும் பயன்படுத்தத்தக்கதாக அவர் அவற்றை அவர்களிடத்தில் கொடுத்துவிடவில்லை. அவைகள் இன்னமும் அவரது ஜீவ-உரிமைகளாகவே இருக்கின்றது மற்றும் அவர் மரித்தபோது, “”என் ஆவியை – என் ஜீவ உரிமைகளை உம் கரத்தில் ஒப்புவிக்கிறேன்” என்றே கூறினார். அவர் ஒப்புவித்தவைகளானது, பூமிக்குரிய ஜீவ-உரிமைகளாக இருந்தன மற்றும் அவை இன்னமும் பிதாவின் கரங்களில் காணப்படுகின்றது மற்றும் அவை இறுதியில் ஆயிரவருட காலத்தின்போது தகப்பனாகிய ஆதாமிற்கும், அவரது சந்ததியார் யாவருக்கும் கடந்துவரும்.