Q568:2
“கேள்வி (1916-Z5879)-2- மீட்கும்பொருள் விலையானது எங்கே ஏற்பாடு பண்ணப்பட்டது?
பதில் – தெய்வீக நோக்கத்தில், மீட்கும்பொருள் விலையானது உலகத்தோற்ற முதற்கொண்டே ஏற்பாடு பண்ணப்பட்டது; ஏனெனில் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உலக தோற்றமுதற்கொண்டு அடிக்கப்பட்ட தேவாட்டுக்குட்டியாக திவ்விய சிந்தையில் காணப்படுகின்றார் என்று வேதவாக்கியங்களானது நமக்கு உறுதிபடுத்துகின்றதாய் இருக்கின்றது (வெளிப்படுத்தல் 13:8). இரண்டாம் நிலையில் பார்க்கும்போது, யேகோவா தேவனுக்கும், அவரது கனம் பொருந்திய லோகோசுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டபோது, மீட்கும்பொருள் விலை ஏற்பாடு பண்ணப்பட்டதாய் இருக்கின்றது. இன்னொரு கோணத்தில் பார்க்கையில் லோகோஸ் மாம்சமாக்கப்பட்டு, முழு மனுஷீக பூரணத்தை பூரணதன் முப்பதாம் வயதில் அடையாதது வரையிலும் மீட்கும்பொருள் விலையானது கொடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படலாம்.
அப்போதுதான் நமது கர்த்தரினால் தேவ ஏற்பாட்டிற்கு இசைவாக மீட்கும்பொருள் விலையாகிட முடியும் மற்றும் தம்மையே மீட்கும்பொருள் விலையாகக் கொடுத்திட முடியும். அவர் தேவனுடன் உடன்படிக்கைக்குள் பிரவேசித்து, மரணப்பரியந்தம் தம்முடைய ஜீவனை அர்ப்பணிப்பதை ஞானஸ்நானம் மூலம் அடையாளப்படுத்துவதற்கு முன்புவரையிலும், அவர் தம்மை இந்த மீட்கும்பொருள் விலையெனக் கொடுத்திடவில்லை. அவர் இப்படி உடன்படிக்கைக்குள் பிரவேசித்தப் பிற்பாடும், அது முழுமையாகிடவில்லை; ஏனெனில் அதனோடுகூட நிபந்தனைகள் சம்பந்தப்பட்டிருந்தன. அங்கு அவரது சித்தம் ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்த போதிலும் அது பிதாவினால் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் தமது முழுமையான கீழ்ப்படிதலை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் காண்பிக்க வேண்டியிருந்தது. “”முடிந்தது”” என்று கூறி, அவர் கல்வாரியில் மரித்தபோது அவரது பலி நிறைவடைந்தது. மீட்கும்பொருள் விலையினை laid down/கொடுத்து வைத்திடும் வேலையினை அவர் நிறைவேற்றிவிட்டார்; அதாவது மீட்கும்பொருள் விலையினை முழுமையாய்க் அளித்துவிட்டார் (provided). மீட்கும்பொருள் விலையினை அளிப்பதற்கும் (providing) மற்றும் மீட்கும்பொருள் விலையினைப் பயன்படுத்துவதற்கும் அல்லது பகிர்ந்தளிப்பதற்கும் (giving or appropriating or delivering) இடையே உள்ள வித்தியாசத்தினை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இயேசு மரித்தபோது, மீட்கும்பொருள் விலைக்கொடுத்து வைக்க மாத்திரமே பட்டது; மரணத்தினின்று மனிதனை விடுவிக்கத்தக்கதாக, அதைச் செயல்படுத்தும் விதத்தில், அது இன்னமும் பயன்படுத்தப்படவில்லை.”