Q372:2 இயேசு – ஜீவ-உரிமைகள்

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

Q372:2

இயேசு - ஜீவ-உரிமைகள்

JESUS--Re Life Rights

“கேள்வி – (1911)-2- அர்ப்பணிப்புச் செய்தபோது இயேசு தம்முடைய ஜீவ-உரிமைகளைக் laid down / கொடுத்து வைத்துவிட்டாரெனில், அவரது உயிர்த்தெழுதலில் அவர் இன்னமும் அவற்றை எப்படிப் பெற்றிருக்கிறவராகக் காணப்பட முடியும்?

பதில் – நாம் ஆங்கில மொழியினை இதுவரையிலும் சரிவர கற்றிராததாகத்தான் தோன்றுகின்றது அல்லது நாம் வெவ்வேறு பள்ளிகளில் பயின்றவர்களாகவும், வெவ்வேறு அகராதிகளைப் பெற்றிருந்தவர்களாகவும் தோன்றுகின்றது ஏனெனில் இந்த ஒரு கருத்தினை, மனதில் ஒரேமாதிரியான சிந்தனையுடைய கர்த்தருடைய ஜனங்கள், வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்துபவர்களாகக் காணப்படுகின்றனர். இப்பொழுதும் ஜீவ-உரிமைகளைக் கொடுத்து வைத்தல் (lay down life-rights) என்றால் என்ன?

இயேசு தம்மை அர்ப்பணிக்கையில், “”தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன்” என்று கூறினபோது, அவர் எதை lay down/ஒப்படைத்தார்? அவர் தமது சித்தத்தை ஒப்படைத்தார். அவருடைய சித்தத்தில் எவைகளெல்லாம் உள்ளடங்குகின்றது? அவருக்குச் சம்பவிக்கவிருக்கும் அனைத்தையும் – அவரது ஜீவனையும், எல்லா வகையான அவரது உரிமைகள் அனைத்தையும், அவரது சித்தமானது உள்ளடக்கினது; அவர் தம்முடைய முழுச்சித்தத்தை, தமது முழு இருதயத்தைத் தேவனுக்குக் கொடுத்தபோது, அது அனைத்தையும் உள்ளடக்கினதாக இருந்தது. அப்படியானால் அவரிடத்தில் ஜீவ-உரிமைகள் எஞ்சி காணப்படவில்லையா? இருதயமானது அவருக்கு எஞ்சி காணப்பட்டது மற்றும் சிலுவையில் “”முடிந்தது” என்று சத்தமிடுவது வரையிலும் ஒப்படைப்பதற்கு அவரிடம் அந்த ஜீவன் எஞ்சியிருந்தது; ஆகையால் அவர் ஒருவிதத்தில் அவருடைய ஜீவனை ஒப்படைக்கவில்லை மற்றும் அவர் இன்னொரு விதத்தில் அதை ஒப்படைத்தவராகவே இருந்தார்; பிதாவின் சித்தமாக இருக்கும் எதற்கும் தாம் தடைச் சொல்வதில்லை என்றும், பிதாவின் சித்தம் என்னவாக இருப்பினும், தாம் அதைச் செய்வார் என்றும் ஒப்புக்கொண்ட விதத்தில், அவர் அதைக் கொடுத்து வைத்தவராய் இருந்தார். இந்த விதத்தில் அவர் தம்முடைய அனைத்தையும் அர்ப்பணம் பண்ணினார். ஒரு பொருளை lay it down/கொடுத்து வைப்பது என்பது ஒரு காரியமாகவும், அதனை apply/பயன்படுத்திடுவது என்பது இன்னொரு காரியமாகவும் காணப்படுகின்றது. என்னுடைய தொப்பியை இங்கு ஏதோ ஓரிடத்தில் laid down/கழற்றி வைக்கின்றேன் என்று வைத்துக்கொள்ளலாம், ஆனால் அதற்கென்று அது என்னுடைய தொப்பியல்ல என்றாகாது, அப்படித்தானே? என்னுடைய தொப்பி இப்பொழுது எங்கே காணப்படுகின்றது என்றுகூட எனக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் என்னுடைய தொப்பியை நான் கழற்றி வைத்துள்ளேன்; அதை நான் யாரோ ஒருவர் வசத்தில் கொடுத்து வைத்துள்ளேன். இனிமேல் அந்தத் தொப்பிக்கும், எனக்கும் சம்பந்தமில்லை என்றாகாது. அந்தத் தொப்பியை நான் யார் வசத்தில் கொடுத்து வைத்திருக்கின்றேனோ, அவர் உங்களிடத்திற்கு அதைக் கொடுக்கும்படிக்கு அவரிடம் நான் கூறக்கூடாது என்றும் இல்லை. நான் அதைக் கழற்றிவைத்துவிட்டேன்; இன்னொருவர் வசத்தில் அதைக் கொடுத்து வைத்திருக்கின்றேன்; அவர் உங்களிடத்திற்கு அதைக் கொடுக்கும்படிக்கு என்னால் அவரிடம் சொல்லிட முடியும். இப்படியாகத்தான் நமது கர்த்தராகிய இயேசுவும் தமது முழு ஜீவியத்தையும் பிதாவின் கரத்தில் வைத்தவராக, ஒன்றையும் விட்டுவிடாமல் ஒவ்வொரு விஷயத்திலும் பிதாவின் சித்தத்தைச் செய்யத்தக்கதாக தாம் ஆயத்தமாயும், விருப்பமாயும் இருப்பதாகத் தெரிவித்தார். பிதாவின் சித்தப்படி சோதனைகளும், அனுபவங்களும் அவருக்குக் கடந்துவந்தது; இறுதியானது சிலுவையில் மரணமாகும்; மற்றும் அவர் உண்மையுள்ளவராய் இருந்தார்; அவர் எதற்கும் மறுக்கவில்லை, கடைசிமட்டும் தம்முடைய ஜீவனைக் கொடுத்து வைக்கும்படியாக அனுமதித்து, கொடுத்து வைத்திடும் வேலையினை நிறைவேற்றினார்; ஆனால் அந்த ஜீவனுக்கான உரிமை அவருக்கில்லை என்றாகாது; அவர் தம்முடைய ஜீவனைத் துறந்துவிடவில்லை. ஒரு பொருளைக் கீழே வைப்பது அல்லது அதை ஒருவர் வசத்தில் ஒப்புவிப்பது என்பது துறந்துவிடுவதாகாது. ஆகையால் இயேசு பெற்றிருந்ததும், பிதாவிடம் அவரால் ஒப்புவிக்கப்பட்டதுமான இந்த ஜீவ-உரிமைகளானது, அவரால் துறக்கப்படவில்லை, மாறாக அதைக் கொடுத்து விடுவதற்கென்று (give it away) அவர் இன்னமும் அதை வைத்துவைத்திருக்கின்றார். கொடுத்துவிடுவதற்கென்று அவர் ஒருவேளை இந்த ஜீவ-உரிமைகளைப் பெற்றிருக்கவில்லையெனில், இந்த உரிமைகள் மீது அவருக்கு ஒருவேளை எந்த அதிகாரமும் இல்லையெனில், இவைகளுக்கடுத்த எந்த உரிமைகளும் அவருக்கு ஒருவேளை இல்லையெனில், அவரால் ஒருபோதும் உலகத்தினுடைய இரட்சகராகிட முடியாது; ஏனெனில் இந்த ஜீவ-உரிமைகளைத்தான் அவர் தியாகமாக ஒப்புக்கொடுத்திட்டார் அல்லது பொல்லாத மனிதர்களினால் கல்வாரியில் வைத்துத் தம்மிடமிருந்து எடுக்கத்தக்கதாக அனுமதித்திருந்தார்; இந்த ஜீவனுக்கான உரிமைகள்தான் உலகத்திற்கு அவசியமானவையாகும் மற்றும் தேவனுக்கும், மனுஷனுக்கும் இடையில் மாபெரும் மத்தியஸ்தரென அதைப் புதிய உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளின் கீழ் மனுக்குலத்தின் உலகத்திற்குக் கொடுத்துவிடுவதற்கு அவர் நோக்கம் கொண்டுள்ளார். இந்த ஒரு நோக்கத்திற்காகத்தான், உலகத்திற்கு அவர் இந்தப் பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமைகளைக் கொடுத்துவிடத்தான், தேவன் அவர் ஓர் இராஜ்யத்தைப் பெற்றிருக்க ஏற்பாடு பண்ணினார்; அவர் உலகத்தை ஆளவும், அவர்களுக்குப் போதிக்கவும், அவர்களுக்காக அவர் கொடுத்துவிடவிருக்கின்றதை, அவரது நிபந்தனைகளின் கீழ், அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகத்தக்கதாக, அவர் என்ன கொடுத்துவிடவிருக்கின்றார் என்பதைக் குறித்த உணர்ந்துகொள்ளுதலுக்குள்ளாக அவர்களை அவர் கொண்டுவரவும் தேவன் ஏற்பாடுபண்ணினார். “