R5872 – மீட்கும் பொருளூம், பாவ நிவாரண பலியும்

No content found

R5872 (Page 87)

மீட்கும் பொருளூம், பாவ நிவாரண பலியும்

Ransom and the sin-offering

மீட்கும்பொருளைக் குறித்தும், பாவநிவாரண பலியைக்குறித்தும் நாம் வேதாகம விளக்கவுரைகளிலும், காவற்கோபுரம் மற்றும் ஆசரீப்புக்கூடாரம் நிழல்களீல் எழுதியுள்ள அனைத்து கட்டுரைகளையும் படித்து, அக்கருத்துக்களைப் பற்றிக்கொள்ளாதபடியால், நம் அன்பு வாசகர்களில் சிலர் இந்தக் காரியங்களில் இன்னும் தெளிவடையவில்லை என்று தோன்றுகிறது. சகோதரர் ரஸ்ஸல் தன் கருத்துக்களை மாற்றிக்கொண்டார் என்றும், காவற்கோபுரம் பத்திரிக்கையின் கருத்துக்கள், வேதாகம விளக்கவுரையில் கூறப்பட்ட கருத்துக்கு முரணாக இருப்பதாகவும் மறைமுகமாகக்கூறி, சிலர் தங்களையும் பிறரையும் குழப்புகிறார்கள். இவைகள் தீங்கு விளைவிக்கின்ற தவறுகள், நமது கருததுக்கள் மாற்றப்படவேண்டுமானால், அந்த மாற்றங்களை உறுதியான வழிமுறையின்படி எடுத்துச் சொல்வோம். ஆகவே, நாம் முயற்சிகளை புதுப்பித்து, இந்த பாடங்களைக் குறித்து நமது நம்பிக்கையை முறையான விளக்கங்களோடு தெளிவாக்கியிருக்கிறோம்.

மீட்கும் பொருளின் விலையானது தன்னில்தானே மதிப்பு மிக்கதாக இருப்பதைக் கூறுகிறது. அது கிறிஸ்துவின் மரணம் அல்லது இரத்தமேயாகும். இந்த மீட்கும் தொகையானது மனுக்குல குடும்பத்தில் வந்த ஒரு நபருக்கோ அல்லது அனைவருக்குமோ, அவர்களது அபராதத்துக்கான தொகையாக பொருந்தக் கூடியதாக உள்ளது.

மனிதன் பாவம் மற்றும் மரணத்தினின்று மீட்கப்படுவதற்கு மீட்கும்பொருளைக் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டான். மீட்கப்படும் பொருளைக்குறித்த இக்கருத்துக்கு தெய்வீகப்பிரமாணமே ஆதாரமாக உள்ளது;

“உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம். ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்பட வேண்டுனம்” – உபா 19;21

பாவம் மற்றும் அதன் தண்டனையின் விளைவாக, ஆதாமும் அவன் முழு சந்ததியாரில் பலகோடி ஜனங்கள் பயங்கரமான மனக்கவலையில் அமிழ்ந்து கிடக்கின்றனர். ஈடுபலியின் மூலம் ஏற்படுத்தின வழிமுறையின்படி, விழுந்துபோன நிலைமையிலிருந்து அவர்களை விலைகொடுத்து வாங்கி, மீண்டுவருவதற்கு தேவன் ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆதாமின் சந்ததியார் ஒவ்வொருவரும் ஜீவனுக்கான மனித உரிமைகளைப் பெறும்பொருட்டு மீட்கப்பட அல்லது விலைகொடுத்து மீட்டுக் கொண்டுவர, பரிசுத்தமும் குற்றமற்றவரும் தீங்கு விளைவிக்காதவருமாயிருக்கிற மற்றொருவரது ஜீவனைக்கொண்டு வாங்கப்படுவதே நமது இயல்பானதும் முதன்மையானதுமான கருத்தாக உள்ளது. ஆனால் தேவதிட்டத்தினை ஆழமாகப் பார்க்கும்பொழுது, ஒரே மனுஷனாயிருந்த ஆதி தகப்பனாகிய ஆதாம் மட்டுமே தெய்வீக நீதிமன்றத்திற்கு முன்பாக பரிசோதிக்கப்பட்டு மரணதண்டனை பெற்றார். ஆதாம் மட்டுமே மரணத்தீர்ப்பு பெற்றார். இதனால் அவரது பிள்ளைகள் அனைவரும் மரணத்திற்குள் செல்கின்றனர். ஆதாமின் பிள்ளைகள் மரணத்திற்குச் செல்வது அவர்களது தனிப்பட்ட நியாயத்தீர்ப்பிலும், மரணத்திலுமல்ல. மாறாக ஆதாமின் நிமித்தமாகவே. ஆதாம் தன் பரிபூரண நிலையை பாதுகாக்கத் தவறினதாலேயே ஆகும். தான் பெற்றிருந்தவற்றைக் காட்டிலும், அதிகமான உரிமைகளையோ, அதிக ஜீவனையோ தன் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியாமற்போயிற்று. இவ்வாறாக ஆதி தகப்பானாகிய ஆதாம் நியாயத்தீர்ப்பை அடைந்த காலத்திலிருந்து 6000 வருடங்களாக இந்த நிலைமையே இன்றுவரை நீடித்துவருகிறது.

இங்கு அதிசயமான தெய்வீகத்திட்டத்தின் சிக்கனமான அம்சம் (Economic feature) தொடர்புபடுத்தப்படுவதை நாம் காண்கிறோம். மனுக்குலத்தில் ஒரு நபருக்கும் கூடுதலாக பரீட்சிக்கப்பட்டு, மரணத்தீர்ப்படைய தேவன் அனுமதிக்கவில்லை. ஏனெனில் ஒரு ஜீவனை பலியிடுவதன் மூலம் முழு மனுக்குலத்தையும் மீட்கவேண்டும் என்பதே அவர் ஆதியில் கொண்டிருந்த அவரது தீர்மானமாகும். ஒரு மனிதனாலேயே முழு துன்பமும் வந்தது, மற்றொரு மனிதனால் அந்த முழு துன்பமும் சரிசெய்யப்பட்டது. அப்போஸ்தலர் இதை சுட்டிக்காட்டி கூறுகிறார்.

“மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான்” – 1 கொரிந்தியர் 15:21-23
[R5873 : page 87]

இவ்வாறாக, நாம் கிறிஸ்துவின் மரணத்தின் மதிப்பைக் காண்கிறோம். இது ஆதாமுக்கு மாத்திமல்ல, அவரது முழு சந்ததியாருக்கும் உள்ளடக்கியது. அதோடுகூட, இயேசு பரிசுத்தரும் குற்ற்மற்றவரும் மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமாயிருக்க வேண்டியது எத்தனை அவசியமானது! அவ்வாறு இருந்திராவிடில், அவர் மீந்திக்கிற மனுக்குல சந்ததியாரில் ஒருவராக, தெய்வீக மரணத்தீர்ப்புக்கு உட்பட்டவராக இருந்திருப்பார், ஏனெனில் ஆதாமின் சந்ததியார் அனைவரும் பாவத்திற்கும், அதன் தண்டனைக்கும் உட்பட்டவர்களாதலால், உலக மீட்பராக, வெளியிலிருந்து ஒருவரை கண்டடைவது அவசியமாயிற்று. அவ்வாறு வெளியிலிருந்து தெரிந்தெடுக்கப்படுபவர், ஒரு தூதனாகவோ, கேரூபாகவோ அல்லது மாபெரும் மிகாயேலாகவோ, லோகோஸாகவோ இருந்து, முதல் மனிதனாகிய ஆதாமை மீட்கும் பொருளாக, ஈட்டுக்கிரயம் செலுத்துவதற்கு, ஆவிக்குரிய சுபாவத்திலிருந்து மனுஷ சுபாவத்திற்கு மாறுவது அவசியமாய்க்கண்டது.

பாவம் செய்தது ஒரு தேவனல்ல, ஆதலால் ஒரு தேவன் மரிப்பதன்மூலம் மீட்பளிக்கமுடியாது. பாவம் செய்தது ஒரு கேரூப் அல்ல, ஆதலால் கேரூப் மரிப்பதன்மூலம் மீட்பளிக்கமுடியாது, பாவம் செய்தது ஒரு மனிதன், ஆகவே ஒரு மனிதன் மரிப்பதன்மூலமே மீட்கும்பொருளை கொடுக்கமுடியும். இதற்காகவே மாபெரும் லோகோஸ் மனிதனை மீட்பதற்கான தெய்வீகத் திட்டத்தை நிறைவேற்ற, உலகத் தோற்றத்துக்கு முன், பிதாவிடம் தாம் கொண்டிருந்த மகிமையை விட்டுவிட்டு, தன்னையே தாழ்த்தி மனிதரானார். தேவதூதர்களைக் காட்டிலும் சற்று தாழ்ந்த நிலைமையை எடுத்து (பரிபூரண மனித சுபாவம்) மரணத்தை சகித்து, மகிமை கனத்தை கிரீடமாக பெற்றார். அவர் தேவகிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் மரணத்தை ருசிபார்க்க வேண்டியதாயிற்று – (எபி 2:9).

மீட்கும்பொருளின் விலையும், மீட்கும்பொருளின் வேலையும்:-

மீட்கும்பொருள் என்றால் என்ன என்று நாம் தெளிவாக காண்பித்திருப்போமானால், இயேசுவே ஆதி பிதாவாகிய ஆதாமுக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கூடிய பொருத்தமான ஒரே நபர் என்று இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்குமானால், வேதத்தின்படியான அடுத்த நமது கருத்து, அவர் தம்மையே மீட்கும்பொருளாக்கினார் என்பதேயாகும். இப்பாடத்தைப்பற்றி இயேசுவே கூறியிருப்பதை நாம் காணலாம் (மத் 20:28). மேலும் பவுல் அப்போஸ்தலனின் சாட்சியமும் இதுவே. “எல்லோரையும் மீட்கும்பொருளாகத் தம்மை [R5873 : page 88] ஒப்புக்கொடுத்த குமாரனாகிய கிருஸ்து இயேசு அவரே. இதற்குரிய சாட்சி ஏற்றகாலங்களில் விளங்கிவருகிறது” – (1 தீமோத் 2:6) இதன் மூலம் நிரூபணமாவது என்னவெனில், இயேசுவின் கல்வாரி மரணத்தின் மூலம் ஆதாமுக்கும் அவன் சந்ததியாருக்கும் கொடுக்கப்பட்ட விலையானது போதுமான அளவு மீட்கும்பொருளாக நிறைவேற்றி முடிக்கப்பட்டது என்பதேயாகும்.

ஆனால் ஆதாமுக்கும் அவனது சந்ததியாருக்கும் கொடுக்கபட்ட மீட்கும்பொருளின் விலையோடு ஈடுபலியின் பணி நின்றுவிடாமல், இன்னும் அதிக காரியங்களை உள்ளடக்கியுள்ளது. மீட்கும்பொருள் என்ற வார்த்தையோடு தொடர்புடைய உட்கருத்தானது, ஈடுபலி கொடுத்ததோடு நின்றுவிடாமல், அதை பொருந்தச் செய்வதையும் உள்ளட்க்கியுள்ளது. ஆதாமும் அவன் சந்ததியாரும் பாவம் மற்றும் மரணத்தின் வல்லமையிலிருந்து மீண்டு, சீர்பொருந்துவதை இது உள்ளடக்கியுள்ளது. இந்தப் பணியானது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மெய்யாகவே இப்பணி துவங்கப்பட்டுள்ளது வெளியரங்கமாகிறது. மீட்கும் பொருளின் இயல்பான பண்புகள் மற்றும் புண்ணியம் சபைக்கு விசுவாசத்தின் மூலமாக மட்டுமே அருளப்பட்டு வருகிறது. சபையானது இன்னும் முழுமை பெற்று மகிமையடையவில்லை. இன்னும் பாவம் மற்றும் மரணத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மீட்கும்பொருளை பொருந்தச்செய்து, ஆதாம் மற்றும் அவரது குழந்தைகள் அனைவரையும் பாவம் மற்றும் மரணத்திலிருந்து மீட்கவும், விடுதலைபெறவும் மேசியாவின் ராஜ்யத்தின் ஆயிரமாண்டுகள் தேவைப்படும் என்பது வெளியரங்கமாகிறது. இதன் நிறைவேறுதலாக, மீட்கும்பொருளின் பணியானது 19நூற்றாண்டுகளுக்கு முன்பே துவங்கினது இன்னும் நிறைவேற்றப்படவேண்டியுள்ளது.

செலுத்தப்பட்ட ஈடுபலியின் தொகையில் எந்த சிக்கலும் இல்லை. அந்தத் தொகை 19 நூற்றாண்டுகளாக நீதியின் கரங்களில் இருந்துவருகிறது. ஆனால் அது உலக ஜனத்துக்கு இன்னும் பொருத்தப்படவில்லை. இச்சுவிசேஷயுகத்தில் உலகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட திருச்சபையாருக்கு மட்டுமே இது விசுவாசத்தின் மூலமாக அளிக்கப்பட்டுவருகிறது. ஈடுபலியின் முழுபணியும் முழுமையாக நிறைவேறுவதைக்குறித்து வேதாகமம் கூறுவதாவது;

“அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்”- (ஒசியா 13:14).

படுகுழியின் வல்லமையிலிருந்து மனுக்குலத்தின் கடைசி அங்கம் விடுதலையாக்கப்படும்வரை ஈடுபலியின் பணி முழுமையாக நிறைவடையாது. இன்னும் மாபெரும் உயிர்த்தெழுதலின் பணி நிறைவேற்றப்படவேண்டியுள்ளது. ஆதாமின் கீழ்ப்படியாமையினால் இழந்துபோன அபூரண சிந்தை, ஒழுக்கங்கள், மற்றும் சரீரத்திலான அபூரணம் இவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு, கல்வாரியில் சிந்தப்பட்ட விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்டு, தேவனது முழுமையான சாயலுக்கும் ரூபத்துக்கும் ஒப்பாக எழுப்பப்படும்.

பாவ நிவாரணபலி வேறு வகைப்பட்டது:-

நம் சிந்தையில் ஈடுபலியின் கருத்தை நிறுத்திக்கொண்டு, இரண்டு பாடங்களும் (பாவநிவாரணபலி, மீட்கும்பொருள்) தனித்தன்மையுள்ளது, பிரிக்கப்பட்டுள்ளது என்று நினைவுகூர்ந்து, பாவநிவாரண பலியைக் குறித்த பாடத்தை ஆய்வுசெய்வோம். ஈடுபலியின் விலைக்கிரயம் முழு மனுக்குலத்தின் பாவத்தை நீக்க போதுமானதாகவும், பொருந்தக்கூடியதாகவும் உள்ளதை பாவநிவாரணபலி காண்பிக்கிறது. மீட்கும்பொருளைப்போல, பாவநிவாரணபலி நிறைவேறுவதற்கு நீண்டகாலம் தேவைப்படாது. மீட்கும்பொருளின் பணியானது 19 நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்றுவருவதை நாம் ஏற்கனவே அறிந்தோம். இது இன்னும் 10 நூற்றாண்டுகள் வருங்காலத்தில் தொடர்ந்து நடைபெறும். அல்லது மொத்தமாக 29 நூற்றாண்டுகள் நடைபெறும். ஆனால் பாவநிவாரணபலியானது மகிமைநிறைந்த கிறிஸ்துவின் ஆளுகை துவங்குமுன் முடிவடைந்துவிடும். அவ்வேளையில் அவரது திருச்சபை அவரோடுகூட மகிமைப்பட்டிருக்கும்.

இயேசுவின் பலியானது மீட்கும்பொருளின் விலையை ஏற்ப்டுத்தினதை இஸ்ரயேலரது ஒப்புரவாகும் நாளின் பாவநிவாரண பலி எடுத்துரைக்கிறது. ஆனால் அது ஒரு வேறுபட்ட உருவகக் காட்சியாகும். மனிதரது பாவங்களின் நிமித்தமாக கிறிஸ்துவின் பலியின் தகுதியை தேவன் எவ்வாறு பொருந்தச்செய்தார் என்று இது காண்பிக்கிறது. ஒப்புரவாகுதலின்நாளில் ஏற்பாடுசெய்யப்பட்ட பிரமாணத்தின் பண்பாக, இந்தக் காரியம் அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது. பாவநிவாரண பலிகளே இதன் அடிப்படைப் பண்புகளாயிருந்தன. அங்கே இரண்டு மிருகங்கள் பலியாகின. முதலாவதாக பாவநிவாரணபலியாக காளையை ஆசாரியன் பலியிட்டு, அதன் இரத்தம் ஆசாரியனின் சொந்த குடும்பத்துக்கு பொருந்துவதற்காக கொடுக்கப்பட்டது. இது கர்த்தராகிய இயேசுவின் மரணத்தை குறிக்கிறதாக நாம் காண்கிறோம். மேலும் அவரது ஈடுபலியின் தகுதியானது முதலாவதாக முதற்பேறான சபைக்கு அருளப்படுகிறதையும் நாம் காண்கிறோம்.

இந்த திருச்பை இரண்டு வகுப்பாரை உள்ளடக்கியது. முதலாவதாக, ஆசாரிய வகுப்பாரை உள்ளடக்கியது. இந்த ஆசாரிய வகுப்பார், பிரதான ஆசாரியரைப்போலவே தேவனுக்கும் அவரது ஊழியத்துக்குமென்று தங்களை விசேஷமாக அர்ப்பணித்துக்கொண்டவர்கள். இவர்கள் தங்களது சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலிகளாக ஒப்புக்கொடுப்பதே புத்தியுள்ள ஆராதனையாகும் (ரோமர் 12:1)

இது நிழலில், ஆரோன் தலையாகவும் அவரது குமாரர்கள் சரீரமாகவும் சித்திரமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அப்போஸ்தலர் கிறிஸ்துவின் சரீர அங்கங்களாகிய நாம் அவரது சபையாக இருக்கிறோம் என்று கூறுகிறார் – (1 கொரிந் 12:27).

இரண்டாவதாக, சபையில் இன்னுமொரு வகுப்பார், அதே பலியின் உடன்படிக்கை செய்துகொண்டபோதிலும், கர்த்தருடைய ஊழியத்தில் தங்கள் ஜீவியத்தை கீழ்ப்படிதலோடு அர்ப்பணிக்கத் தவறுகிறார்கள். இவர்கள் பாவத்திற்கோ மரணத்திற்கோ பின்னிட்டுப்போகாமலும், பலி ஒப்புக்கொடுக்கும் நிலைமைக்கு முன்னேறிச்செல்லாமலும் இருக்கின்றனர். இதன் காரணமாக, இவர்கள் இரண்டாம் வகுப்பாராக தங்களை உருவாக்கிக்கொண்டு, முதலாம் வகுப்பாருக்கு ஊழியக்காரராகின்றனர். இவர்கள் ஆசாரியர்களுக்கு ஊழியர்களாக இருந்த நிழலான லேவியர்களுக்கு நிஜமாக உள்ளனர். இவர்கள் ராஜரீக ஆசாரியர்களாக, பலிசெலுத்தும் ஆசாரியர்களோடு சிம்மாசனத்தில் உட்காராமல், தேவனுக்கு ஊழியர்களாக அவரது ஆலயத்தில் பணியாற்றுவர். இவர்கள் மகிமையின் கிரீடத்தை பெறுவதில்லை. மாறாக, குருத்தோலையை ஏந்தி, வெற்றி பெற்றவர்களாக நிற்கின்றனர். மேலும் இந்த வகுப்புக்கும் தகுதியடையாதோர் இரண்டாம் மரணத்தில் மரிப்பார்கள்.

கர்த்தரோடு உடன்படிக்கை செய்தவர்களின் பாவங்களுக்கு மட்டும், ஈடுபலியின் புண்ணியங்களை விசேஷமாக கொடுப்பதாக, இந்தக் காட்சியில் கர்த்தர் காண்பிக்கிறார். இதனால் இவர்கள் இயேசுவின் புண்ணியத்தினால் நியாயதீர்க்கப்பட்டு, மகிமையான ஆசாரியர்க்குரிய கடமைகளை, அவரோடுகூட நிறைவேற்றும் தகுகியடைகிறார்கள்.

இரண்டாந்தரமான பாவநிவாரணபலி:-

நிழலான ஒப்புரவாக்கும் நாளின் இரண்டாந்தரமான பாவநிவாரண பலியானது கர்த்தருடைய ஆடு என்றழைக்கப்பட்டது. அடையாளமான பிரதான ஆசாரியனால் காளை பலிசெலுத்தப்பட்டதுபோல், இது ஏற்பாடு செய்யப்படாமல், ஜனங்களிடமிருந்தே தெரிந்துகொள்ளப்பட்டது. மெய்யாகவே, இரண்டு ஆடுகள் ஒரேசமயத்தில் தெரிவுசெய்யப்பட்டது. இவை சபையின் இரண்டுவகுப்பாரை குறிக்கின்றது. கர்த்தருடைய ஆடு என்பது பலிசெலுத்தும் வகுப்பார் அல்லது ஆசாரிய வகுப்பாரை அடையாளப்படுத்துகிறது. உருவகத்தில் லேவியர்களாக விளங்கும் இவர்கள், சபையில் குறைந்த வைராக்கியமுடையோராக இருந்து, போக்காடாகிய இரண்டாம் வகுப்பாருக்கு அடையாளமாக உள்ளனர். கர்த்தருடைய ஆடுவகுப்பார், உடன் ஆசாரியர்களாக இருந்து, இரண்டாந்தரமான பாவநிவாரணபலியை உண்டாக்குகிறார்கள்.

காளை பலிசெலுத்தப்படும்பொழுது ஒவ்வொரு படியிலும் என்ன நிகழ்ந்ததோ அதே தன்மையில் அதைத் தொடர்ந்து கர்த்தருடைய ஆடும் பலிசெலுத்தப்பட்டது. இவ்வாறு அடையாளமாக நமக்கு கூறப்பட்டபடி, சபை அவளது கர்த்தரது அடிச்சுவடுகளில் பலியின் ஜீவியத்தில் மரணபரியந்தம் நடக்கவேண்டும். சபைக்கு முன்னடையாளமாக உள்ள காளையின் இரத்தம் ஜனங்களின் பாவங்களுக்காக பொருத்தபடவில்லை. மாறாக, பிரதான ஆசாரியரின் குடும்பத்துக்கும் கோத்திரத்துக்கும் மட்டுமே செலுத்தப்பட்டதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். கர்த்தரின் ஆடாகிய இந்த இரண்டாம் பட்சமான பாவநிவாரணபலியானது அதே நபர்களுக்காக பலியிடப்படவில்லை, ஏனெனில் அவர்களுக்கு இன்னும் அதிகமான பலி தேவைப்படவில்லை. என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். கர்த்தரின் ஆடு இரண்டாந்தரமான பலியாக, பிரதான ஆசாரியரது சொந்த் பலியாக பலியிடப்பட்டது. இந்த பலியின் தகுதிகள் அல்லது புண்ணியங்கள் எல்லா ஜனங்களுக்கும் பொருந்தும்படியாக ஏற்படுத்தப்பட்டு, எல்லோரையும் ஒப்புரவாகுதலின் கீழ் கொண்டுவந்தது.

இந்த கர்த்தரின் ஆட்டுக்கு நிஜமாக, பிரதான ஆசாரியராக இயேசு தம் சொந்த பலியை கல்வாரியில் நிறைவேற்றினார். நாற்பது நாட்களுக்குப் பிறகு உன்னதங்களுக்கு ஏறி, கிருபாசனத்துக்கு முன்பாக பிரவேசித்து, தம் பலியின் தகுதிகளை ஒப்புக்கொடுத்தார், உலகத்தாருக்காக அல்ல, சபையாருக்காகவே இவ்வாறு பிரவேசித்தார். அப்போஸ்தலர் எழுதியிருப்பதுபோல்,

“அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்போழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்” – (எபிரேயர் 9:24).

நாம் தற்போது அடையாளமாக கண்டதற்கு முழு இசைவாக இது இருக்கிறது. பெந்தெகோஸ்தே நாள் துவங்கி, கர்த்தர் தம்மோடு உடன்படிக்கை செய்தவர்களை ஏற்றுக்கொண்டுவருகிறார். இது நிழலாக இரண்டு ஆடுகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இவர்களுள் போதுமான அளவு வைராக்கியமுள்ளவர்களை அவர் தம் அங்கங்களாக ஏற்றுக்கொள்கிறார். அவர்களை தம் சொந்த பலியில் ஒருபகுதியாக எண்ணி, அவர்களை பலி செலுத்திவருகிறார். அவரது சரீரத்தின் இறுதி அங்கம் மரணபரியந்தம் உண்மையாய்க் காணப்பட்டவுடன் விரைவில் இந்த பணியை நிறைவேற்றி முடிப்பார். அதன்பிறகு அடுத்த கட்டமாக, பிரதான ஆசாரியன் நிஜமான கர்த்தருடைய ஆட்டின் இரத்தத்தை தம் சொந்த இரத்தமாக கருதி எடுத்துக்கொண்டு, கிருபாசனத்தின் முன்பாக மீண்டுமாக ஒப்புக்கொடுப்பார். வேறுவகையில் சொல்வோமேயானால், அவரது சபையின் பலி, தம் சொந்தபலியின் ஒரு பகுதியாக கருதப்பட்டு ஒப்புகொடுக்கப்படும். இது எல்லா ஜனத்தின் பாவத்துக்காக அதாவது, எலலா ஜனங்களின் பாவத்துக்கான அடிப்படை ஆதாரத்தை நீக்கும் நிவாரணமாக இதை அவர் பொருந்தச்செய்வார்.

அத்தருணத்தில், பிதா தம் குமாரனிடத்திற்கு எல்லா ஜனங்களையும் திருப்புவார் ஆதியில் செய்த அவர்களது மீறுதலைப் பொறுத்தவரையில் பாவங்கள் முழுமையாக மன்னிக்கப்படும். அது கூடியவிரைவில் [R5873 : page 89] நடைபெறும் என்று நாம் நம்புகிறோம். உடனடியாகத் துவங்கும் மேசியாவின் ராஜ்யம், வல்லமையிலும் மாபெரும் மகிமையிலும் ஸ்தாபிக்கப்படும். இது பாவம் மற்றும் மரணத்திலிருந்து உலகை விடுதலையாக்கும் பணியைத் துழங்கும். அவரது ராஜ்யத்தின் சட்டதிட்டங்களுக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிகிற அனைவரும் பரிபூரண மனித சுபாவத்துக்கு உயர்த்தப்படுவர்.

வெளிச்சத்துக்கு எதிராக பாவம்செய்தோருக்கு தண்டனை:-

இதற்கு இடைப்பட்டநேரத்தி, ஆதாமின் மீறுதலுக்குள் சேராத உலகத்தின் வேறு பாவங்களும் உண்டு. பாவநிவாரணபலியானது ஆதி பாவத்திலிருந்து ஊற்றெடுக்கின்ற ஆதாமின் பாவத்துக்கும் அதன் பல்வேறு பலவீனங்களுக்கும், அபூரணங்களுக்கும் மட்டுமே ஆகும். இவை அறிவுக்கும் வெளிச்சத்துக்கும் எதிரான பாவமாக ஏறத்தாழ (more or less) கருதப்படுகிறது. முழு வெளிச்சத்திற்கெதிராக செய்த மனப்பூர்வமான [R5874 : page 89] பாவம் அந்த பாவிக்கு இரண்டாம் மரணத்தை வருவிக்கும். ஆனால் ஒரு சிலரே முழு வெளிச்சத்தையும் முழு அறிவையும் முழு வாய்ப்பையும் பெற்றிருக்கின்றனர். ஆதலால், ஒருசிலரே மரணத்துக்கேதுவான பாவத்தை செய்வர்.

சுவிசேஷ வெளிச்சம் எங்கெல்லாம் சென்றிருக்கிறதோ, அங்கெல்லாம் குறிப்பிட்ட அளவு அறிவு சென்றடைந்திருக்கிறது. அதோடு, குறிப்பிட்ட அளவு பொறுப்புணர்வும் சிறுகச்சிறுக சேர்ந்திருக்கிறது. மேலும் வெளிச்சம் சென்றடைந்த அனைவரிடமும் தேவன் மிகத் துல்லியமாக கணக்கீட்டை வைத்திருக்கிறார். ஒவ்வொரு பாவமும் நியாயந்தீர்க்கப்படும்போது, வெகுமதியை இழக்கநேரிடும். ஆதாம் செய்த பாவத்தின் தண்டனை முழு மனுக்குலத்திற்கும் 6000 ஆண்டுகளாக பொதுவாக சென்றடைந்துள்ளது. ஆனால் மற்ற பாவங்களுக்கான தண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படவேண்டும். அவைகளுள் சில மனம்வருந்தி மன்னிப்பைப்பெறாத முந்தைய மனப்பூர்வமான பாவங்களும், வெளிச்சத்திற்கெதிரான, சத்திய அறிவுக்கெதிரான பாவங்களும் இருக்கலாம். இவைகள் பெந்தெகொஸ்தே நாளுக்குப்பின்பு சிறிதுசிறிதாக சேர்ந்தவைகள்.

புதிய யுகம் அதன் எல்லா ஆசீர்வாதங்களுக்குள் நடத்திச்செல்வதற்கு முன்பாக, உலகத்தாரின் பாவக்கணக்கு பாரபட்சமின்றி சரி செய்யப்படவேண்டும். உலகத்துக்கெதிரான தண்டனையை நிறைவேற்றுவதற்கு, தேசம் தோன்றினதுமுதல், இதுவரை சம்பவித்திராத மாபெரும் உபத்திரவக்காலம் அனுமதிக்கப்படும். தற்போதைய் யுத்தத்தில் உபத்திரவக்காலம் துவங்கிவிட்டது என்று நாம் நம்புகிறோம். இது மாபெரும் குழப்பமாகிய திடீர் அழிவை நோக்கி படிப்படியாக வளர்ந்து, இனிவருகின்ற நாட்களில் முழுமையாக தண்டனையை நிறைவேற்றிமுடிக்கும். இவ்வாறு மகா உபத்திரவக்காலத்தில் நீதிநியாயத்தின்படி உலகம் தீர்க்கப்பட்டபிறகு, மேசியாவின் ராஜ்யம் உடனடியாக துவங்கும்.

போக்காடு துன்பப்படுதலின் மதிப்பு:-

தேவன் மிக கண்டிப்பான கணக்கீட்டாளராக இருக்கிறார். உலகத்தார் மனப்பூர்வமாக கீழ்ப்படியாதுபோன எல்லாக் காரியங்களையும் அவர் நிச்சயமாக எண்ணிவைத்திருக்கிறார். விசேஷமாக, அவரது திருச்சபைக்கு எதிரான உபத்திரவங்களை எண்ணியிருக்கிறார். அவ்வாறே உலகத்தார் செய்த நற்காரியங்களுக்கு உரிய பலனையும் தர அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். இதனை பாவநிவாரணபலியைத் தொடர்ந்து நடைபெறுகிற பணியின் மூலம் அவர் உருவகமாக அறிவுறுத்தியிருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். ஜனங்களின் மீறுதல்களில் சிலவற்றை போக்காட்டின் தலைமேல்சுமத்தி, அந்த அக்கிரமங்களை சுமந்துகொண்டு, வனாந்தரத்தில் அலைந்துதிரிய அனுப்பப்பட்டது.

இந்த போக்காடு என்பது தேவனோடு உடன்படிக்கை செய்துகொண்ட சில பிள்ளைகள் என்றும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட உரிமைகளின்படி ஜீவிக்க தவறினவர்கள் என்றும் நாம் புரிந்துகொள்கிறோம். இவர்கள் மாபெரும் உபத்திரவக்காலத்திற்குள் செல்வார்கள் என்பதை முக்கியப்படுத்துகிறது என (வெளிப்படுத்தல் 7:14இல்) கூறுகிறதை நாம் புரிந்துகொள்கிறோம். இவர்களுக்கு நேரிடும் மாபெரும் உபத்திரவத்தில், தங்கள் நீதியின் ஆடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் மூலம் கழுவி வெண்மையாக்கிக்கொள்வார்கள் என்று மேற்கண்ட வசனத்திலிருந்து தெரிகிறோம். லேவி வகுப்பாராகிய திரள்கூட்டத்து வகுப்பார்மேல் வரும் அந்த உபத்திரவங்கள், மனப்பூர்வமாக பாவம் செய்ததால் வந்த உபத்திரவங்கள் அல்ல. மாறாக, இந்த வகுப்பார் தேவனோடு செய்துகொண்ட பலியின் உடன்படிக்கையை காத்துகொள்ளத்தவறியதால், அவ்வுடன்படிக்கைக்கு இணக்கமாகும்படி, மாம்சத்தை அழிவுக்குள்ளாக்குவதற்காக வரும் உபத்திரவங்கள் ஆகும். ஆகவே இந்த திரளான கூட்டத்து வகுப்பாரது உபத்திரவங்கள் உலகத்துக்கு ஆதாயமளிப்பதாக இருந்து, வெளிச்சத்திற்கு எதிராகவும், முக்கியமாக தேவபிள்ளைகளுக்கெதிராக செய்த பாவங்களை நீக்குவதற்கு உதவிபுரியும் என்று நாம் புரிந்துகொள்கிறோம். விசேஷமாக இந்த உபத்திரவக்காலம், வஞ்சகர்களுக்கு எதிராக இருக்கும். ஆனால் திரள்கூட்டத்து வகுப்பாரும், இந்த வஞ்சகர்களோடு தங்களது தண்டனையின் பங்கை அடைவார்கள். இவ்வாரு உலகத்தாருக்கு கொடுக்கப்படவேண்டிய தண்டனையில் குறிப்பிட்ட அளவு பங்கை இவர்கள் அடைவார்கள்.

உலகத்தார் மேல் சுமத்தப்பட்டிருக்கிற பாவத்தின் இயல்பை நாம் தெளிவாக கவனிக்கவேண்டும். (வெளிப்படுத்தல் 6:9-11) வசனங்களை நாம் நினைவுகூர்வோம் – “அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியத்தினித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்திங்கீழே கண்டேன். அவர்கள்; பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும், பழிவாங்காமலுமிருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது. அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது” அவர்களது உடன்சகோதரர்கள், அவ்வாறே உபத்திரவப்பட்டு, அந்த எண்ணிக்கை நிறைவடையும்வரை நியாயத்தீர்ப்புக்காக கொஞ்சகாலம் காத்திருக்கவேண்டும் என அவர்களுக்கு கூறப்பட்டது.

சுவிசேஷயுக இருதியில் தெய்வீக எதிர்பார்ப்புக்கள் என்னவென்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. யூத யுகத்தின் முடிவில் இயேசு யூதர்களிடத்தில் இதைக்குறித்து வலியுறுத்தினதன் மூலம் நாம் அறியவருகிறோம். ஆபேல் காலத்தில் துவங்கி இன்றுவரை பூமியில் சிந்தப்பட்ட நீதிமாங்கள் அனைவரின் இரத்தப்பழியெல்லாம் அவர்களை சீர்பொருந்தப் பண்ணும்படிக்கு அந்த சந்ததியாரிடம் கேட்கப்படும் (மத் 23:34-36). யூத யுகம் மாபெரும் உபத்திரவக்காலத்தோடு முடிவடைந்தபோது, யூதர்கள் செய்த தவறுக்கு தண்டனைகொடுத்து அவர்களுடைய கணக்கு முழுமையாக சரிசெய்யப்பட்டது. அவ்வாறே, நாம் வாழும் காலத்தில் ஏற்படும் மாபெரும் உபத்திரவக்காலத்தின் இறுதியில், உலகத்தார் அடைவேண்டிய எல்லா தண்டனையும், அவர்களது கணக்கும் முழுவதும் சரிசெய்யப்படும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம்.

ஸ்தாபிக்கப்படவிருக்கும் புதிய உடன்படிக்கை :-

பாவ நிவாரணபலியைக்குறித்த நிழலான காரியங்களுக்கும், அதன் நிஜத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டை அப்போஸ்தலர் கூறுகையில், இயேசுவோ காளை மட்டும் வெள்ளாடு இவைகளின் இரத்தத்தினால் அல்ல, தமது சொந்த இரத்தத்தினால் நித்திய மீட்பாகிய ஆசீர்வாதங்களை ஏற்படுத்தித்தந்தார் (எபி 9:11-15). மேலும் நிஜமான பிரதான ஆசாரியரின் பலிகள், “மேலான பலிகள்” என பன்மையில் கூறப்படுகிறது. இது யூதரது உடன்படிக்கையின் ஏற்பாட்டை ஸ்தாபித்தது பற்றி சுட்டிக்காட்டுகிறது. அவ்விடத்தில் மோசே, காளை மற்றும் வெள்ளாடுகளின் இரத்தத்தை எடுத்து நியாயப்பிரமாண உடன்படிக்கையை ஸ்தாபித்தார். முதலாவதாக 10 கட்டளைகளடங்கிய பலகைகள் மீது இரத்தத்தைத் தெளித்து, அதன்பறகு ஜனங்கள் மேல் தெளித்தார் – (யாத் 24:3-8)

இங்கு ஒரு கேள்வி எழுகிறது, ஏன் மோசே காளைகள் (பன்மை) மற்றும் வெள்ளாடுகளை (பன்மை) உபயோகித்தார்? ஆனால் நிழலாக லேவியர் 16ம் அதிகாரத்தில் கூறப்பட்டதில் ஒரு காளையின் இரத்தமும் ஒரு வெள்ளாட்டின் இரத்தமும் உபயோகிக்கப்பட்டுள்ளதே! நிஜமான காளையாக உள்ள ஒரே மனுஷனாகிய கிறிஸ்துயேசு நமக்காக பலியானார் என்று நாம் இதற்கு பதிலளிக்கிறோம். மேலும் நிஜத்தில் ஒரே ஆடாக விளங்கும் கர்த்தரால் தம் சரீரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே திருச்சபை, அவரோடுகூட இணைந்து, அவரது பலியில் பங்குவகிக்கிறது. ஆனால் நியாயப்பிரமாண உடன்படிக்கை ஏற்படுத்தினபோது. இஸ்ரயேலின் திரளான ஜனங்கள் மேல் தெளிக்கப்பட வேண்டியிருந்ததால் ஒரு மிருகத்தைவிட கூடுதலாக அவசியமாயிருந்தது. ஒரே காளை மற்றும் ஒரே ஆட்டின் இரத்தமும் போதுமாயிருக்கவில்லை. ஆதலால்தான் காளைகள் மற்றும் ஆடுகள் என்று பன்மையில் எழுதப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் எத்தனை எண்ணிக்கை என்று துல்லியமாக சொல்லப்படவில்லை. ஒரே காளை மற்றும் ஒரே ஆடு என்றும் துல்லியமாக சொல்லப்படவில்லை. ஒரே காளை மற்றும் ஒரே ஆட்டின் இரத்தம் ஜனங்கள் எல்லோர்மீதும் தெளிக்கப்பட, போதுமான மிருகங்களைக்கொன்று, அதன் இரத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது, இவையனைத்தும் ஒரே காளை மற்றும் ஒரே ஆட்டிற்கு பிரதிகளாக இருந்தது.

இதற்கு நிஜமாக, புதிய நியாயப்பிரமாண உடன்படிக்கை மேசியாவின் ராஜ்யத்தில் ஏற்படுத்தப்படும் போது, எல்லாவற்றிற்கும் முதலாவதாக, கிறிஸ்துவின் இரத்தம் (அதாவது, இயேசுவின் இரத்தத்தோடுகூட சபையின் பலிகளும் இணைந்தநிலையில்) தெளிக்கப்படும், அல்லது தெய்வீகப்பிரமாணத்தை நிறைவுசெய்யும். இதுவே பிதாவினால் முழு உலகமும் மேசியாவின் ராஜ்யத்துக்கு மாற்றப்படுவதற்கான அடிப்படைத்தன்மையாய் இருக்கும். அதற்குப்பிறகு, எல்லா ஜனங்கள்மேலும் இரத்தத்தைத் தெளிக்கும்பணி படிப்படியாய் செயல்படுத்தப்படும், இதில் மனுக்குலத்தை சுத்திகரிக்கும் பணி நடந்தேறி, மீட்கும் இரத்தத்தால் கிடைக்கப்பெற்ற அனுகூலங்கள் எல்லா மனுஷருக்கும் கொடுக்கப்படும்.

நிஜமான ஒப்புரவாக்கும் நாள் :-

முன்பு பார்த்தவைகளின் மூலம் இயேசு கொடுத்த ஈடுபலிக்கும், அதன் நிறைவேறுதலுக்கும் இடையேயுள்ள தனிச்சிறப்பியல்புகளையும், சுவிசேஷயுகத்தின் பாவநிவாரணபலிகளுக்கும், அவை எதை முக்கியப்படுத்துகிறது என்பதையும் நம் வாசகர்கள் தெளிவாக காண்பீர்கள் என்று நாம் நம்புகிறோம். இப்பொழுது நாம் மேலும் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறோம். அதாவது நிழலிலும் அதன் நிஜத்திலும், [R5874 : page 90] பாவத்துக்கான ஒப்புரவாக்கும் நாளில் பாவ நிவாரணபலிகளும் இணைந்திருந்தன. நிஜமான ஒப்புரவாக்கும் நாளானது நம் கர்த்தராகிய இயேசுவோடும் அவரது பலிகளோடும் துவங்கும். இந்த ஒப்புரவாக்குதலின் நாளின் ஒருபகுதியே முழு சுவிசேஷயுகமாக இருந்திருக்கிறது. இந்த ஒப்புரவாக்குதலின் நாளானது பாவத்துக்கான எல்லா ஒப்புரவாக்குதலின் நிறைவடைதல் பற்றி சாட்சிபகரும். ஆயிரமாண்டு யுகம் முழுவதும் நிஜமான ஒப்புரவாக்குதலின் நாளின் ஒருபகுதியாக இருக்கும்.

ஒப்புரவாக்கும் நாளின் பலிகள் ஒரு முடிவை மட்டுமே காண்பிக்கிறது. ஆனால் அதன் முடிவோ, உலகஜனங்கள் ஆசீர்வாதத்தை அடைதலும், உலகை தேவனோடு ஒப்பு – உறவு நிலைக்கு அல்லது இசைவான நிலைமைக்கு மீண்டும் கொண்டுவருவதேயாகும். இந்தப்பணி நிறைவேற்றப்படுவதற்கு ஆயிரம் ஆண்டு யுகம் முழுவதும் தேவையாயிருக்கிறது. உலக ஜனங்களுக்கு போதித்தலும் இப்பணியில் அடங்கியுள்ளது. ஆதாமுக்குள் மனுக்குல்ம் இழந்துபோனபிறகு, கல்வாரியில் அவை அனைத்தும் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்டவைகள் மனுக்குலத்துக்கு திரும்பகொடுக்கப்படும். ஒப்பரவாக்குதலின் பாவநிவாரணபலிகள் உலகத்தார் தேவனோடு ஒப்புரவாகுமுன்பு செய்யப்படவேண்டும். இது அப்பலி உபயோகிக்கப்படுவதன் தேவநோக்கத்தைக் குறிக்கிறது.

ஆகவே ஒப்புரவாக்கும் நாளின் பாவ நிவாரணபலிகள் மூலமும், அந்த பலிகள் உண்டாக்குகின்ற வழிமுறைகள் மூலமும், தேவன் நிறைவேற்றுகின்ற உலகத்தாரின் ஆசீர்வாதங்களை இந்நேரம் முதற்கொண்டு எல்லோரும் தெளிவாக காணலாம் என்று நாம் நம்புவோமாக. ஆனால் ஈடுபலியானது முற்றிலும் தனித்தன்மையுடையதாய் இருந்து, இயேசுவின் பணிகளை மாத்திரமே காண்பிப்பதாயும், அதன் உச்சகட்ட விளைவுகளை முழு மனுக்குலத்துக்கும் எடுத்துக் காண்பிப்பதுமே ஆகும்.