R5255 – உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால்

No content found

R5255 (page 179)

உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால்

YOUR REDEMPTION DRAWETH NIGH

என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள். இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்’; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.” (ஏசாயா 26:20-21)
[R5255 : page 180]
சுவிசேஷ யுகத்தினுடைய முடிவின்போதுள்ள உபத்திரவத்தினைக்குறித்துப் பேசுகையில், நமது கர்த்தர்: “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தம்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்” (லூக்கா 21:36) என்று கூறியுள்ளார்; இன்னுமாக 28-ஆம் வசனத்திலும், “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்று கூறியுள்ளார். “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொள்.”
இரகசிய “அறைகளுக்குள்” நாம் செல்கையில், கர்த்தருக்குள் கடந்துசென்றுவிடுகையில் எவ்வளவு உபத்திரவம் இருக்கும் என்று நாம் அறியோம். எனினும் இந்த உபத்திரவம் வருகையில், கர்த்தரிடமிருந்து அவ்வளவுக்கு ஓர் ஆசீர்வாதம் கடந்துவருகின்றபடியால், உபத்திரவத்திற்குள் கடந்துசெல்பவர்கள், உபத்திரவத்தில் களிகூரமுடிகிறவர்களாய் இருப்பார்கள். இவர்களுக்கான அனுபவங்கள் என்னவாக இருப்பினும், இவர்கள் கர்த்தரோடுகூட என்றென்றும் காணப்படுவார்கள் என்ற எண்ணத்தினால் சந்தோஷப் படுபவர்களாய் இருப்பார்கள். பரிசுத்தவனாகிய ஸ்தேவான் களிகூர்ந்ததுபோன்று நாமும் களிகூர முடியும்.
மனப்பூர்வமான பாவங்களுக்கு உரிய தண்டனை
ஏசாயா 26:21-ஆம் வசனமானது, உலகத்தின்மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்புகளில் செயல்படும் நீதியின் கொள்கையினைக்குறித்துக் குறிப்பிடுகின்றதாயிருக்கின்றது. பரம பிதா நீதிக்குப் பிரதிநிதியாக நிற்கின்றார் மற்றும் தம் இரக்கம் அனைத்தும் கர்த்தராம் இயேசு கிறிஸ்துவின் மூலமாய்ச் செயல்படுத்தப்படும்படிக்கு நியமித்துள்ளார். நமது கர்த்தர் ஜாதிகள்மீது வரும் உபத்திரவங்களுடன் விசேஷமாய்ச் சம்பந்தப்பட்டவராய் இருப்பார்; எனினும் அவருக்கு அதில் பிதாவுக்கு இருக்கும் பங்கின் அளவிற்குப் பங்கு இருப்பதில்லை. உபத்திரவத்தின் நாளானது யேகோவாவின் நாள் என்று அழைக்கப்படுகின்றது. “அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்” என்றும், மகா பூமி அதிர்ச்சி உண்டாகும் என்றும் நாம் வாசிக்கின்றோம். (சகரியா 14:4)
கடந்த 6000-ஆண்டுகளாகத் தேவன் மனுக்குலத்திற்காக எதையும் செய்யவில்லை என்றாலும், சீர்த்திருத்த வேலை எதுவும் செய்யாமல் ஓய்ந்திருந்தார் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் அவர் தீமை பரப்பப்படுவதைத் தடுக்கும் வண்ணமாகக் குறுக்கிட்டுள்ளார்; உதாரணத்திற்கு அமலேக்கியர் மற்றும் சோதோமியர்களின் சம்பவங்கள் ஆகும். இந்த யுகத்தின் முடிவிலும் அவர் மனுக்குலத்தின் காரியங்களில் தலையிடுவார் என்றும், உபத்திரவத்தின் காலத்தில் நீதியினை நிறைவேற்றிடுவார் என்றும் வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வேதவாக்கியங்களில் நீதியானது பழிவாங்கும்படிக்குக் கேட்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் இரத்தமானது பழிவாங்குதலுக்காகக் கூக்குரலிட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாவமானது சொல்லர்த்தமான கொலைக்கு நேராக வழிநடத்தி இருந்தாலும் அல்லது ஏதேனும் அநீதியானது ஒரு குற்றத்திற்கு நேராக அல்லது தற்கொலைக்கு நேராக வழிநடத்தி இருந்தாலும், இது விஷயத்தில் நீதியானது மனுக்குலத்திற்குத் தண்டனை வழங்கிட எதிர்ப்பார்க்கின்றது. ஆதாமின் பிள்ளைகள் பாடுபட வேண்டும் என்று நீதி வலியுறுத்துகின்றது. கிறிஸ்துவின் சபை என்பவர்கள் தனிப்பட்ட வகுப்பினராய் இருக்கின்றனர் – இவர்கள் உலகத்தினின்று எடுக்கப்பட்டவர்களாகவும், தங்கள் பாவங்களை மன்னிக்கப் பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் சத்தியத்தையும், நீதியினையும் ஆதரிக்கின்றவர்களாய் இருக்கின்றனர்.
உலகத்தின் மீது வரவிருக்கின்ற இந்த உபத்திரவ காலம் என்பது, நீதி அதன் கடன் பாக்கிகளைப் பெற்றுக்கொள்ளும் காலம் என்று சொல்லலாம். நீதியானது மனுக்குலத்தினுடைய மனப்பூர்வமான [R5256 : page 180] பாவங்களுக்காய் விசாரித்திரும். கடந்த காலங்களில் ஏழைகளைச் சூறையாடின பலனை அனுபவித்த வகுப்பார், கணக்குகளைச் சரிக்கட்டி தீர்த்துவைக்கத்தக்கதாக வரியில் கொஞ்சம் நீதிக்குக் கட்டித்தீர்க்க வேண்டும். “ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்பந்தத்தினிமித்தம் அலறி அழுங்கள்” என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகின்றார் (யாக்கோபு 5:1). தற்காலத்தில் தேவன் ஐசுவரியவான்கள்மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றார் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. கிறிஸ்துவின் சபை தவிர மற்றப்படி வேறு எவரும் இப்பொழுது பரீட்சையின்கீழ் இல்லை. மற்றவர்கள் வெறும் மனுக்குலத்தின் உலகத்தாராய் இருக்கின்றனர்; இவர்களில் ஒரு சாரார் மற்ற சாரார்மீது கொஞ்சம் பழிவாங்குதலை நிறைவேற்றிடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் மனுஷனுடைய இயலாமை என்பது தேவன் செயல்புரிவதற்கான வாய்ப்பாய் அமைகின்றது. அவரது இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதற்குரிய நியமிக்கப்பட்ட காலம் வந்துவிடும் மற்றும் மனுஷருடைய இந்தக் கோபம் மனுக்குலத்திற்கு நன்மையினை உண்டுபண்ண ஏதுவாக்கிடுவார்.
இந்த உபத்திரவம் வருவதற்குக் காரணமாய் இருப்பவர்கள், தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அறியாமல் இருக்கின்றனர். ஆனால் நீதிக்கு நிவிர்த்தி செய்யப்படும்போது, மேசியாவின் இராஜ்யமானது தலையிடும். “அந்நாட்கள் குறைக்கப்பட்டாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை” என்று நாம் வாசிக்கின்றோம் (மத்தேயு 24:22). இத்தகைய பாவங்களுக்காய் இப்படித் தண்டனையைக் கட்டாயமாக அளிக்கும் காரியமானது, கிறிஸ்து பாவங்களுக்காய் மரித்தார் என்ற வேதாகமத்தின் போதனைக்கு முரண்படுகிறதில்லை. இயேசு உலகத்தினுடைய பாவ – கடனைக் கட்டித்தீர்த்தார்.
உலகத்தின் பாவ – கடன் என்பது மரண தண்டனையாகக் காணப்பட்டது. இந்தத் தண்டனையைக் கர்த்தர் இயேசு சந்திக்கவில்லையெனில், உலகமானது ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டாது. அந்த மரண தண்டனையானது உலகத்தின்மீதே காணப்பட்டு வந்திருக்கும், அதுவும் எவ்விதத்திலும் அநீதியாகக் காணப்படாமல் உலகத்தின்மீதே காணப்பட்டு வந்திருக்கும். எனினும் கொலைசெய்ய வழிநடத்தின சுயநலத்தின் காரியம் என்பது, நமது கர்த்தரினால் ஆதாமின் பாவ – தண்டனை சந்திக்கப்படும் காரியத்தைவிட அதிகமானதாகும். அநியாயமாய்க் கொலைசெய்த யாரொருவரும், அதற்குப் பொறுப்பாளிகளாகப் பார்க்கப்படுவார்கள்.
யூத யுகத்தினுடைய முடிவின்போது ஆபேலின் காலம் முதற்கொண்டு சிந்தப்பட்ட நீதிமான்கள் அனைவரின் இரத்தத்திற்கான கணக்கினைத் தேவன் இந்தத் தலைமுறையினரிடத்தில் விசாரிப்பார் என்று நமது கர்த்தர் கூறினதாக நாம் வாசிக்கின்றோம் (மத்தேயு 23:35). மேலும் யூத ஜனங்கள்மீது அவர்களது யுகத்தினுடைய முடிவின்போது வந்த உபத்திரவமானது, அந்தக் கணக்கினை முழுமையாய்ச் சரிக்கட்டினது. இவர்கள் வெளிச்சத்தையும், அறிவையும் பெற்றிருந்தனர் மற்றும் இதனால் பொறுப்பாளிகளாகக் கையாளப்பட்டனர். இவர்கள் – சிலரால் செய்யப்பட்டதும், மற்றவர்களால் ஆதரிக்கப்பட்டதும் அல்லது கண்டும் காணாததுபோன்று காணப்பட்டதுமான பாதகங்கள் காரணமாய்க் கஷ்டப்பட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார்கள். [R5256 : page 181]
வெளிச்சம் மற்றும் பொறுப்பு
இந்த யுகத்தினுடைய முடிவில், கர்த்தருடைய நியாயத்தீர்ப்பானது, அநேகம் வெளிச்சத்தினை, சிலசமயம் திசைமாறிய வெளிச்சத்தினைப் பெற்றவர்களாயிருந்த கிறிஸ்தவ மண்டலத்தார்மீது காணப்படும். இவர்களோடுகூடப் பொறுப்பு ஒன்றும்கூடக் காணப்படுகின்றது மற்றும் இவர்கள் தண்டனையினின்று தப்பித்துக்கொள்வதில்லை என்பது கர்த்தருடைய ஆணையாக இருக்கின்றது. யூதர்களிடம் அவர்களது யுகத்தினுடைய முடிவின்போது கர்த்தர் கணக்கு விசாரித்ததுபோலவே, இந்த யுகத்தில் சிந்தப்பட்ட நீதிமான்கள் அனைவரின் இரத்தத்திற்கான கணக்கினை இந்தத் தலைமுறையினரிடத்தில் அவர் விசாரிப்பார். இது முன்புபோன்று இந்த யுகத்திலும் மகா உபத்திரவ காலத்தினை உண்டுபண்ணிடும். உலகத்தாரைப் பொறுத்தமட்டில், அவர்கள் இக்காலத்திற்கும், முற்காலத்திற்கும் இடையிலுள்ள சம்பந்தத்தை உணர்ந்துகொள்வதில்லை. நாம் வேதவாக்கியங்களிலிருந்து மாத்திரமே இவைகளை அறிந்தவர்களானோம். நாம் மனதில் மகா அமைதியும், ஆறுதலும் அடையத்தக்கதாகத் தேவன் நமக்கு இந்தப் புரிந்துகொள்ளுதலைக் கொடுத்திருக்கின்றார்.
இந்த யுகத்தினுடைய முடிவின்போது வரவிருக்கும் உபத்திரவத்தின் தன்மையைக்குறித்து நாம் சிந்திக்கையில், இது உலகத்தார் மற்றும் மாய்மாலக்காரர் மீதுவரும் ஓர் உபத்திரவம் என்பதை முதலாவது நாம் நினைவில்கொள்ள வேண்டும். நாம் ஒருவேளை உண்மையுள்ளவர்களாய்க் காணப்படுவோமானால், உலகத்தின்மீது வரும் ஆக்கினையின்கீழ் நாம் வருவதில்லை என்று கர்த்தர் கூறுகின்றார். சிறுமந்தையின் அங்கத்தினராகுவதற்குப் போதுமான அளவிற்கு உண்மையாய் இராதவர்கள், உலகத்தோடுகூட இந்த ஆக்கினையின்கீழ் வருவார்கள். மாய்மாலக்காரரோடே தங்கள் பங்கினை அனுபவிக்கப்போகும் சிலரைக்குறித்துக் கர்த்தர் நமக்குத் தெரிவித்துள்ளார். (மத்தேயு 24:51)
கோதுமை வகுப்பார் மாத்திரமே கிறிஸ்துவின் சபையில் அடங்குவார்கள். இவர்கள் மாத்திரமே களஞ்சியத்திற்குள் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் (மத்தேயு 13:30). உலகத்தின்மீது வரவிருக்கும் இந்த உபத்திரவ காலத்திற்குள் களை வகுப்பார் கடந்துசெல்வார்கள். மாய்மால வகுப்பாரில் இந்த உலகத்தினுடைய ஐசுவரியவான்களும் அடங்குவார்கள். இவர்கள் பரிசுத்த யாக்கோபு அடிகளால் யாக்கோபு 5:1-6- வரையிலான வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வசனங்களில் அப்போஸ்தலன் சற்று தன் கருத்துகளை நிறுத்துகின்றார். பின்னர் மறுபடியுமாகச் சபையைக்குறித்துக் குறிப்பிடுகின்றார். இந்த உபத்திரவமானது விசேஷமாக ஐசுவரியவான்கள்மீது கடுமையாய்க் காணப்படும்; இவர்கள் நிர்பந்தங்களினிமித்தம் அலறி அழுவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
திரள் கூட்ட வகுப்பார், இஸ்ரயேலுடைய பாவநிவாரண நாள் அனுசரிப்புகளின் நிழலில் போக்காட்டினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். காளை நமது கர்த்தர் இயேசுவுக்கு நிழலாய் இருக்கின்றது மற்றும் கர்த்தருடைய ஆடானது, அவரது உண்மையுள்ள பின்னடியார்களுக்கு நிழலாய் இருக்கின்றது (எபிரெயர் 13:11-13). உண்மையுள்ளவர்கள் தங்கள் ஓட்டத்தினை முடித்த பிற்பாடு, போக்காடாகிய திரள் கூட்டத்தினரால் ஒரு காரியம் செய்துமுடிக்கப்படும். லேவியராகமத்தின் பதிவில், பிரதான ஆசாரியன் பிற்பாடு போக்காட்டினுடைய தலையின்மீது இஸ்ரயேலர்கள் அனைவரின் அக்கிரமங்களைச் சுமத்துவதைக்குறித்துக் குறிப்பாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது (லேவியராகமம் 16:21). சகல ஜனங்களின் (மற்ற) சகல பாவங்களைப் / அக்கிரமங்களைப் போக்காடு சுமக்கத்தக்கதாக – முழுமையான நிவிர்த்தி செய்யத்தக்கதாக, இப்பாவங்களானது போக்காட்டினுடைய தலையின்மீது சுமத்தப்படுகின்றது. ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதுபோன்று, ஆதி பாவங்களானது கிறிஸ்துவின் வாயிலாக ரத்து செய்யப்படத்தக்கதாகத் தேவன் ஏற்பாடு செய்திருக்கின்றார் மற்றும் உலகத்தினுடைய மற்ற எல்லாப் பாவங்களின் விஷயத்தில் திரள் கூட்ட வகுப்பார்மூலம் நீதியினைத் திருப்திப்படுத்தத்தக்கதாக ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்.
யூத யுகத்தினுடைய முடிவிற்கும், இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய முடிவிற்கும் இடையில் ஓர் ஒற்றுமை காணப்படுகின்றது, அதென்னவெனில்: இயேசுவின் ஜீவனை எடுத்ததற்கான பரிகாரமானது யூத ஜனங்களிடத்தில் விசாரிக்கப்பட்டதுபோலவே, சுவிசேஷ யுகத்தினுடைய முடிவிலும் சபையின் பலியாக்கப்பட்ட ஜீவனானது, பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களிடத்தில் விசாரிக்கப்படும். இக்கருத்தினை கர்த்தர் பின்வருமாறு: “ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற் கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கத்தரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறுகையில் அவர் தெரிவித்துள்ளார் (லூக்கா 11:50-51). தீர்க்கத்தரிசனங்களில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பரிசுத்த பவுல் அடிகளார் எழுதியுள்ளார். ஆகையால் இந்த யுகத்தினுடைய முடிவில் கிறிஸ்தவ மண்டலத்தின் பொல்லாத செய்கைகளின் நிமித்தம், அவர்களுக்கு எதிராகச் சில விஷயங்கள் குற்றஞ்சாட்டப்படும். இது இந்தச் சுவிசேஷ யுகத்தின் துன்புறுத்தல்கள் அனைத்தையும், இன்னுமாக (ஒருவேளை) யூதர்களுக்கு எதிராக நிகழ்ந்த துன்புறுத்தல்கள் அனைத்தையும்கூட உள்ளடக்கும். ஆகையால் யூத ஜனங்கள்மீது கடந்து வந்ததுபோலவே இப்பொழுது கிறிஸ்தவ மண்டலம் அனைத்தின்மீதும் ஒரு மகா உபத்திரவ காலம் கடந்துவரும் என்று வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 70 – ஆம் வருஷத்தில் இஸ்ரயேலுக்கு உண்டான அனுபவங்களானது, 1915 – ஆம் வருஷத்தின் அனுபவங்களுக்கு இணையான அனுபவங்களாகக் காணப்படும்.