மனுக்குலத்திற்கு எதிராக நீதியின் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்துமே இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய முடிவில் கணக்குத் தீர்க்கப்பட்டு, முடிக்கப்பட வேண்டும் என்பதே தெய்வீக நீதியைப் பொறுத்தமட்டில் உள்ள தெய்வீக ஏற்பாடாகக் காணப்படுகின்றது. இதுபாவங்களை நிவிர்த்தி செய்வதற்குறிய நிவிர்த்தி செய்வற்குரிய நிழலான பாவநிவாரணத்தினால் அடையாளப்படுத்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. நிஜமான பாவநிவாரண நாளில் கிறிஸ்துவின் பலிகளும், அவரது சரீரத்தின் அங்கத்தினர்களாகுவதற்குப் பாத்திரமாயிருப்பவர்களை ஆயத்தமாக்குதலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிவிர்த்தியினை நீதியானது ஏற்றுக்கொள்ளும்போது, இது கணக்குகளைத் தீர்த்து, விலக்கப்பட்ட கனியினைப் புசித்ததன் வாயிலாகத் தேவனுடைய பிரமாணத்தினை மீறினதன் காரணமாய் உண்டான பொறுப்புகள் அனைத்தினின்றும் ஆதாமையும், அவர் சந்ததியார் யாவரையும் விடுவித்துவிடுகின்றது. இயேசுவின் மரணமானது, ஆதி ஆதாமின் பாவத்தினால் உண்டான பாவங்களுக்கான நிவிர்த்தியாக இருக்கின்றது.
ஆனால் வேறு பாவங்களும், தவறுகளும்கூடக் காணப்படுகின்றது – இவைகளுக்கு நீதியானது தண்டனை வழங்கிட எதிர்ப்பார்க்கின்றது – இவை பரிசுத்த ஆவிக்கு எதிரான, வெளிச்சத்திற்கு எதிரான பாவங்களாய்க் காணப்படுகின்றன. இவைகள் அனைத்தும் தேவனுக்கு எதிரான, நீதிக்கு எதிரான பாவங்களாய் இருக்கின்றன. உதாரணத்திற்குக் கர்த்தருடைய அனுபவத்தினைக் கவனியுங்கள்: ஒருவேளை சாதாரண ஜனங்களின் கும்பலானது நமது கர்த்தர் சிலுவையில் அறையப்படுவதற்குப் பொறுப்பாளிகளாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் நன்மையானவைகளைச் செய்வதற்கு ஏதுவாகப் போதுமான அளவுக்கு வெளிச்சத்தை உடையவர்களாகிய தனி நபர்கள் காணப்பட்டனர். ஆகையால் ஆபேலின் நாட்கள் முதற்கொண்டு இக்காலம் வரையிலும், சிலர் மிகுந்த அநியாயத்தினை அனுபவித்திருக்கின்றனர்; மேலும் ஆபேலின் இரத்தமானது அபயமிட்டதுபோன்று, நீதிக்கு எதிரான இந்தக் கொடுமைகள் தேவனை நோக்கி அபயமிட்டுக்கொண்டிருக்கின்றது. இவைகளுக்கான நிவிர்த்தியும்கூட எவ்வாறு ஆசீர்வாதத்தின் மகா நாளானது துவங்குவதற்கு முன்பும், இராஜ்யத்தின் மத்தியஸ்தரிடம் உலகமானது முழுமையாய் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பும் செய்துமுடிக்கப்படும் என்று வேதவாக்கியங்களானது நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.
இந்த மனப்பூர்வமான பாவங்களுக்குரிய நிவிர்த்தியினைக்குறித்துப் போக்காட்டின் நிழலில் காண்பிக்கப்பட்டுள்ளது. நிழலில் “திரள் கூட்டத்தினர்” எப்படி உபத்திரவத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்பதையும், இது இவர்களுக்கும் நல்ல விளைவுகளை உண்டுபண்ணுகின்றது என்பதையும், அதேவேளையில் ஆதாமின் பாவங்களைத் தவிர்த்து, நீதியினைக் கடுமையாய் மீறின கணக்குகளைச் சரிக்கட்டி தீர்த்துவைப்பதற்குரிய (squared) வழிவகையாகுகின்றது என்பதையும் நாம் காண்கின்றோம். பிரதான ஆசாரியன் போக்காட்டின் தலைமீது கைகளை வைத்தல் என்பது, “திரள் கூட்டம்” வகுப்பார்மீது இந்த பாவங்கள் சுமத்தப்பட்டு, அவர்களை உபத்திரவத்திற்குள் அனுப்புவதைச் சுட்டிக்காட்டுகின்றது. யூத ஜனங்கள்மீது வரும் என்று கர்த்தரால் முன்னுடைக்கப்பட்டதும், அப்படியே நிறைவேறித்தீர்ந்ததுமான அனுபவங்களுக்கு ஒத்த அனுபவங்களுக்குள் இவர்கள் கடந்துபோவார்கள். யூத யுகத்தின் முடிவின்போது சம்பவித்த அந்தப் பயங்கரமான பாடுகளானது, முந்தின காலங்களின் பல்வேறு தவறுகளுக்கு – அதாவது திவ்விய நீதிக்கு எதிரான பாவங்களுக்குரிய கணக்குகளைச் சரிக்கட்டித் தீர்த்துவைக்கும் என்று நமது கர்த்தர் தெரிவித்துள்ளார் (லூக்கா 11:49-51). இப்படியாக ஆயிரவருஷ அரசாட்சி துவங்குகையில் உலகமானது நீதியின் புஸ்தகத்தில் தங்களுக்கு எதிராக எந்தக் கணக்கையும் பெற்றிராமல் இருப்பார்கள்.
முந்தின குணலட்சண வளர்ச்சிக்கேற்ப நடவடிக்கைகள்
பின்னர் நீதியானது ஒட்டுமொத்த மனுக்குலத்தின் உலகத்தினை மேசியாவின் கரங்களில் கொடுத்துவிடும் மற்றும் அவர் அவர்களை, அவர்கள் இருக்கிற பிரகாரமாகவே ஏற்றுக்கொள்வார். ஜனங்கள் பல்வேறு நிலைமைகளில் காணப்படுவார்கள். சிலர் மிகவும் சீர்க்கெட்டும், சிலர் குறைவாய்ச் சீர்க்கெட்டும் காணப்படுவார்கள்; குணலட்சணங்களிலுள்ள இந்தக் குறைபாடுகளானது தற்காலத்தில் வெளிச்சம் மற்றும் வாய்ப்பினை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்ட அல்லது நிராகரித்த விதத்தைச் சார்ந்துள்ளது. அவர் சித்தம் என்ன என்று அறியாமல், அச்சித்தத்தைச் செய்யாதவர்கள் கொஞ்சமாய் அடிக்கப்படுவார்கள்; அவர் சித்தம் என்ன என்பதை அறிந்து, அதைச் செய்யாதவர்கள் அநேக அடிகள் அடிக்கப்படுவார்கள், காரணம் அவர்கள் முந்தின காலத்தில் கடினப்பட்டவர்களாய் இருந்துள்ளனர். அனைவருமே இறுதியில் திவ்விய எதிர்ப்பார்ப்பினுடைய தரநிலையின் முழு அளவினை அடைவதற்கு எதிர்ப்பார்க்கப்படுவார்கள். அதிகமாய்ச் சீர்க்கேடு அடைந்தவர்களுக்கு அதிகச் சிரமங்கள் இருக்கும் மற்றும் குறைவான சீர்க்கேடு அடைந்தவர்களுக்குக் கொஞ்சமே சிரமம் இருக்கும் மற்றும் திவ்விய எதிர்ப்பார்ப்பின் தரநிலையை அடைய முயற்சிக்கையில் சில அடிகளே அடிக்கப்படுவார்கள். [R4856 : page 220]
வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் – அனைத்து நற்செய்கைகளும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதுபோன்று, ஒவ்வொரு தவறான செய்கையும், அந்தச் செய்கைக்குப் பின்புள்ள ஒவ்வொரு தவறான கொள்கையும் குணலட்சணத்தின்மீது தீய தாக்கம்கொண்டிருக்கும். ஆகையால் இந்த ஜீவியத்தில் சிலாக்கியங்களின் விஷயத்தில் அல்லது அறிவின் விஷயத்தில் மனுக்குலத்தார் கீழ்ப்படிந்துள்ளதற்கு அல்லது கீழ்ப்படியாமல்போனதற்கு ஏற்ப, அனுபவித்துப் புரிந்துகொண்டதற்கு ஏற்ப – அவர்கள் அடுத்த யுகத்திற்குள் பிரவேசிக்கையில் குணலட்சணங்களின் காரியத்தில் மேம்பட்டு அல்லது சீர்க்கெட்டுக் காணப்படுவார்கள்.