R4426 (page 201)
““ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் (மகா) பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும்.” (ஏபிரெயர் 13:11-13)
பாவம் உலகில் காணப்படுகின்றது என்றும், தகப்பனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமையினால் பாவம் உலகத்திற்குள் பிரவேசித்தது என்றும், ஈட்டுக்கிரயம் செலுத்தித்தீர்க்கப்படாதது (paid) வரையிலும் தேவன் மற்றும் மனுஷருக்கிடையில் முழுமையான ஒப்புரவாகுதல் உண்டாக முடியாது என்றும் வேதாகமம் போதிப்பதை நாம் அனைவருமே அறிவோம். ஒப்புரவாகுதலுக்கு அஸ்திபாரமாக மீட்கும்பொருள் ஒன்று காணப்பட வேண்டும். ஆகையால் நமது கர்த்தர் இயேசு தம்முடைய ஜீவனைக் கொடுத்துவைத்தபோது (laid down) அவர் மீட்கும்பொருளைக் கொடுத்துவைத்தார் என்று வேதவாக்கியங்கள் போதிப்பதாக நாம் புரிந்திருக்கின்றோம். மீட்கும்பொருள் எனும் வார்த்தையானது, சரிநிகர் சமானவிலையினைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; ஆதாமின் சுபாவத்திற்கு ஒத்த ஒரு சுபாவத்தினை நமது கர்த்தர் இயேசு பெற்றிராத காரணத்தினால், உலகத்தோற்றத்திற்கு முன்பாகப் பிதாவோடு அவருக்கிருந்த மகிமையினைத் துறந்து வருவதும், தம்மையே தாழ்த்திக்கொள்வதும், மனுஷ சுபாவத்தை எடுத்துக்கொள்வதும் அவருக்கு அவசியமாய் இருந்தது; இப்படியாக அவர் தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனுஷனுக்காகவும் மரணத்தினை ருசிக்கமுடிந்தவரானார். ஆகையாலே “நீர் எனக்கு ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தினீர்” என்று வேதவாக்கியங்களில் நாம் வாசிக்கின்றோம்.
மனுக்குலத்தின் பாவங்களுக்கு ஏற்றதொரு பலியாய்க் காணப்படும் சரீரத்தினை எந்த மனுஷஜீவியும் பெற்றிருக்கவில்லை, காரணம் அனைவருமே பாவிகளாய் இருந்தனர். ஒருவேளை பரிபூரண மனுஷன் ஒருவன் இருந்திருப்பானானால், அவன் தன் பரிபூரண ஜீவனை மீட்கும்பொருளெனக் கொடுத்திருந்திருப்பான்; ஆனால் பரிபூரண மனுஷர் எவருமே இல்லை. ஆகையால் சங்கீதங்களின் புஸ்தகத்தில் சொல்லப்பட்டதுபோன்று, “ஓருவனாவது தன் … சகோதரன் நிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே” (சங்கீதம் 49:7,8). ஆகையால் பரிபூரண நிலையினை உடைய ஒருவரை, மனுஷருக்கு அவசியமானதை ஒப்புக்கொடுக்கும் ஒருவரை கண்டுபிடிப்பது தேவனுக்கு அவசியமாய் இருந்தது. கர்த்தர் நியாயப்பிரமாணத்தின் வாயிலாக, அவரது பிரமாணங்கள் “ஜீவனுக்கு ஜீவனையும், கண்ணுக்குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும்” எதிர்ப்பார்க்கின்றது என்றும், நீதியினுடைய இந்த அடிப்படை கொள்கையின்படியே தேவன் இந்தக் காரியத்தில் செயலாற்றுவார் என்றும் நமக்குக் காண்பிக்கின்றார். ஆகையால் பாவம் செய்தது மனுஷனாக இருக்கின்றபடியால், ஒரு தேவதூதனின் மரணம் என்பது மனுஷனுக்கான மீட்பின் கிரயமாக இருக்கமுடியாது; அது சரிநிகர் சமான விலையாகக் காணப்பட வேண்டும். இழந்துபோனது மனுஷஜீவனாக இருக்கின்றபடியால், மீட்பதற்கான விலையாக ஒரு மனுஷ ஜீவனே கொடுக்கப்பட வேண்டும். யூத காலங்களில் செய்யப்பட்டு வந்ததுபோன்று காளைகளும், ஆடுகளும் அடிக்கப்படுவது என்பது போதுமானதல்ல; ஏனெனில் இவைகள் அப்போஸ்தலன் விவரிப்பதுபோன்று தேவன் ஏற்றகாலங்களில் ஏறெடுக்க நோக்கம் கொண்டுள்ள “விசேஷித்த பலிகளுக்கான” நிழல்களாகவும், அடையாளங்களாகவும் மாத்திரம் காணப்பட்டது.
ஆகையால் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு உதவிசெய்யும்படிக்கு வந்தார் என்று அப்போஸ்தலன் நமக்குத் தெரிவிக்கின்றார். அவர் பரலோக சுபாவத்தினுடைய மகிமையைத் துறந்து, மனுஷ சுபாவத்தினை எடுத்துக்கொண்டார்; இப்படி அவர் செய்ததற்கான காரணம் – நம்முடைய மீட்பர் ஆகும்பொருட்டு அதைப் பலிசெலுத்துவதற்கேயாகும்; ஏனெனில் பாவம்செய்த மனுஷனை (ஆதாமை) மீட்க ஒரு மனுஷனுடைய மரணத்தினை நீதி கேட்டது.
“ஆநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்” நமது கர்த்தர் மரித்தபோது, அவர் நம்மைத் தேவனிடத்தில் கொண்டுசேர்த்திடவே இப்படிச் செய்தவரானார்; சபையாகிய நம்மைத் தேவனிடத்தில் கொண்டுசேர்த்திடுவதற்காக மட்டுமல்லாமல், தேவனிடத்தில் சேருவதற்கு விரும்பிடும் மனுக்குலத்தார் அனைவரையும்கூடத் தேவனிடத்தில் கொண்டுசேர்த்திடுவதற்காக இப்படிச் செய்தவரானார். ஆனால் அவரது மரணம், நம்மைத் தேவனிடத்தில் கொண்டுசேர்த்திடவில்லை. அவருடைய மரணம் என்பது விலைக்கிரயத்தைக் கொடுத்துவைத்த (laid down) காரியமாய் மாத்திரமே இருந்தது மற்றும் என்பது விலைக்கிரயத்தை முதலாவது கண்டுபிடிப்பது அவசியமாய் இருந்தது. உதாரணத்திற்கு: உங்களுக்குக் கடன் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள் – 5,000 டாலர்கள் கடன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இன்னுமாக 5,000 டாலர்கள் விலைமதிப்புள்ளதும், உங்களால் விற்கமுடிகிறதுமாகிய சொத்து ஒன்றினைப் பெற்றிருக்கின்றீர்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அச்சொத்திற்கான விலைமதிப்பென்பது, உங்களது கடனிற்குச் சரிநிகர் சமமாக இருக்கின்றது. சொத்தின் விலையினை மீட்கும்பொருளெனப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, அச்சொத்தினை விற்றுவிடுகின்றீர்கள். ஆனால் சொத்தை விற்றவுடன் உங்கள் கடன் ரத்தாகிறதில்லை; நீங்கள் சொத்தை விற்கமாத்திரம் செய்து, தொகையை மட்டும் பெற்றிருக்கின்றீர்கள்; இதைப் பிற்பாடுதான் கொண்டுபோய் கடனுக்குக் கட்டித்தீர்ப்பீர்கள்.
இப்படியாகவே நமது கர்த்தருடைய மரணத்தின் பலனும் காணப்படுகின்றது. அவர் “அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராக மரித்தபோது,” அவர் “சரிநிகர் சமானவிலை” ஒன்றினைக் கொடுத்துவைத்தார் (laid down). ஆகையாலே “ஒரு மனுஷனுடைய கீழ்ப்படியாமையினால் பாவம் உலகத்திற்குள் பிரவேசித்தது என்றும், பாவத்தின் விளைவாக மரணம் வந்தது என்றும்” தெரிவிக்கப்பட்டுள்ளது; இப்படியாக மரணதண்டனையும், இதனைத் தொடர்ந்து வருபவைகளும் ஆதாமின் சந்ததியின்மேல் வந்தது, ஏனெனில் அனைவருமே பாவ நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் மற்றும் அனைவரும் மரணதீர்ப்பின்கீழ்க் காணப்பட்டனர். நம்மை மீட்கும்பொருட்டாக நமது கர்த்தர் நமக்கான ஈட்டுக்கிரயத்தினை, தமது சொந்த ஜீவனைக் கொடுத்துவைத்தார் (laid down). அந்த ஈட்டுக்கிரயமானது ஆதாமிற்கு அல்லது ஆதாமின் சந்ததியிலுள்ள எந்த அங்கத்தினனுக்கு அல்லது அனைவருக்குமே போதுமான ஒரு கிரயமாக இருந்தது – இதை அவர் பிற்பாடு செயல்முறைப்படுத்துவார் (apply). ஒரு நபருக்காக இருப்பினும், இந்தக் கிரய அளவைக்காட்டிலும் குறைவாய்ச் செலுத்த முடியாது. ஒருவேளை கர்த்தர் ஒரே ஒரு நபரை மட்டும் மீட்டெடுக்கவும், மீதமுள்ள நம் அனைவரையும் கைவிட்டுவிடவும் நோக்கம் கொண்டிருந்தாலும், இதற்கும் அவர் ஜீவனே எடுக்கப்படும் மற்றும் இதற்குக் குறைவாக எதுவும் எடுக்கப்பட முடியாது; ஏனெனில் மனுஷனுடைய ஜீவன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மற்றும் மனுஷனுடைய ஜீவனே, தண்டனையைச் சந்திக்க அவசியமாய் இருக்கும்.
இந்த ஆக்கினைத்தீர்ப்பானது ஒரு மனுஷனாகிய ஆதாம் மூலமாய் வந்துள்ளபடியால், ஒருவருக்குரிய தண்டனையைச் சந்திப்பது என்பது முழு மனுஷ குடும்பத்தினையும் உள்ளடக்குவதாக எடுத்துக்கொள்ளலாம். இப்படியாக மீட்பைப்பற்றின இந்த மாபெரும் உபதேசத்தினுடைய கொள்கையினை நாம் காண்கின்றோம் மற்றும் தேவன் தம் குமாரனுடைய ஒரே ஒரு பலியினைக்கொண்டு, தம் சொந்த நீதியினுடைய கணக்கினைக் கட்டித்தீர்க்கின்றவராய் இருக்கத்தக்கதாக எப்படிக் காரியங்களைத் திட்டமிட்டிருந்தார் என்பதையும் நாம் காண்கின்றோம்.
இதுவே மீட்கும்பொருளின் காரியமாகும். ஒருவேளை இயேசு பரமேறினபோது (தம் கரத்தில் பெற்றிருந்த) ஈட்டுக்கிரயத்தினை மனுக்குலம் அனைத்தின் சார்பாகப் பயன்படுத்துவதற்கு முடிவெடுத்திருந்திருப்பாரானால், அதுவே அனைவருக்கும் போதுமான கிரயமாய் இருந்திருக்கும். ஆனால் அவர் அப்படியாகச் செய்யவில்லை. அவர் அதை எப்படிச் செயல்படுத்தப்போகின்றார் (apply) என்பது வேறொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது மற்றும் அது பாவ நிவாரணம் என்று அழைக்கப்படுகின்றது. நமது கர்த்தர் எப்படித் தம் ஈடுபலியின் புண்ணியத்தினைச் செயல்படுத்தப் போகின்றார் என்பது குறித்து இஸ்ரயேலர்களுடைய பாவநிவாரண நாளின் நிழலான பலிகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.
மீட்கும்பொருளும், பாவநிவாரணமும் ஒன்று என்று நாம் எண்ணிக்கொள்ளக்கூடாது. பாவநிவாரண பலிகள் என்பது, ஈடுபலியல்ல என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஈடுபலி என்பது, பாவநிவாரண பலிகளல்ல என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இவைகள் வெவ்வேறான இரண்டு காரியங்களாகும். கிறிஸ்துவினுடைய வேலைபற்றின ஒரு கண்ணோட்டமானது, மீட்கும்பொருள் கிரயம்பற்றின கண்ணோட்டத்திலிருந்து காரியத்தினை முன்வைக்கின்றது; அதென்னவெனில்: கிறிஸ்துவின் மரணம் என்பது, ஈட்டுக்கிரயமாய் இருக்கின்றது மற்றும் இது எந்தவிதத்தில் செயல்படுத்தப்படப் (apply) போகிறதாய் இருப்பினும், இது அவசியமானதாய் இருக்கின்றது; இது சர்வ வல்லமையுள்ளவரின் பிரமாணத்தினால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒரு ஜீவனுக்கு ஈடாகச் செலுத்தப்பட வேண்டும். வேதவாக்கியங்களின்படி நமது கர்த்தர் இயேசு தாம் நிறைவேற்றின பலியின் வேலையில், பல்வேறு தேவைகளைச் சந்தித்து முடித்தவரானார். உதாரணத்திற்கு: அவர் “நியாயப்பிரமாணத்தின்கீழ்ப் பிறந்தவராவார்.” இதனால் ஏதேனும் வித்தியாசம் உண்டா? ஒருவேளை இயேசு “நியாயப்பிரமாணத்தின்கிழ்ப் பிறக்கவில்லையெனில்,” அவரது பலியானது யூதர்களுக்குப் பயன்படுத்தப்படாது, காரணம் தேவன் யூதர்களுடன் பண்ணின நியாயப்பிரமாண உடன்படிக்கை மூலம், யூத ஜனங்களை மற்ற ஜனங்களிடமிருந்து தேவன் முன்பே பிரித்துவிட்டார் என்று அப்போஸ்தலன் விவரிக்கின்றார்.
அந்த யூத ஜனங்கள், அவர்களின் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ்ப் பரீட்சையில் காணப்பட்டு, “இப்பிரமாணங்கள் அனைத்தையும் நாங்கள் கைக்கொள்வோம்” என்று கூறி இவ்வுடன்படிக்கையினுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிற்பாடு, அவ்வுடன்படிக்கையைக் காத்துக்கொள்ள தவறிப்போனார்கள். இவர்களது நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ், ஒருவேளை இவர்கள் தேவனுடைய பிரமாணத்தினைக் கைக்கொள்வார்களானால், இவர்கள் நித்திய ஜீவனை அடைவார்கள் என்றும், ஒருவேளை பிரமாணத்தினை மீறிடுவார்களானால், தண்டனை நித்திய மரணமாக இருக்கும் என்றும் தேவன் வாய்ப்பருளியிருந்தார். இப்படியாக இவர்கள் இரண்டாம் முறை தெய்வீகத் தீர்ப்பின்கீழ் வந்தார்கள்: முதலாம் முறை நம் அனைவரோடு ஆதாமின் ஆக்கினைத்தீர்ப்பின்கீழ் ஆகும் மற்றும் இரண்டாம் முறை தங்கள் நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொள்ள தவறிப்போனதினாலாகும். ஆகையாலே “ஜீவனுக்கேதுவான கற்பனையே மரணத்துக்கேதுவாயிற்று,” காரணம் “எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். ஆகையால் யூதர்கள் அனைவரையும் அந்த நியாயப்பிரமாண உடன்படிக்கையினுடைய ஏற்பாட்டின் கீழிலிருந்து தாம் மீட்கத்தக்கதாக, கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் கீழ்ப் பிறக்க வேண்டியதும், ஒரு யூதனாக இருக்க வேண்டியதும் அவசியமாகக் காணப்பட்டது.
தேவன் தம்முடைய திட்டத்தில் இந்தப் பல்வேறு அம்சங்கள் அனைத்தையும் வைத்திருந்தார்; கிறிஸ்து மையப்புள்ளியாகக் காணப்பட்டார் மற்றும் இந்த மையப்புள்ளியின்றே திவ்விய திட்டத்தினுடைய இந்த ஒவ்வொரு வெவ்வேறு அம்சங்களும் கடந்துவந்து, யூதர்களை விசேஷமாக மீட்கின்றது, இன்னுமாக இவர்களைத் தவிர்த்துள்ள முழு மனுக்குலத்தையும்கூட மீட்கின்றது; இன்னுமாகக் கிறிஸ்துவினுடைய சரீரமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட சபை தொடர்புடைய தேவ நோக்கத்தையும் நிறைவேற்றுகின்றது. நாம் குழப்பமடையாதபடிக்கு, உவமையில் கர்த்தர் சபையைக்குறித்துக் கொடுத்துள்ள அடையாளமான காட்சிகளைப் பார்ப்பதுபோன்றே, நமது கர்த்தருடைய வேலைபற்றிய இந்தக் காட்சிகளையும் நாம் கையாள வேண்டும். உவமையில் சபை பற்றி [R4426 : page 202] பல்வேறு உருவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சபை தேவாலயத்தின் ஜீவனுள்ள கற்களாக ஒப்பிடப்பட்டுள்ளனர்; அவரது சரீரத்தின் அங்கத்தினர்கள் என்று ஒப்பிடப்பட்டுள்ளனர்; ஆட்டுமந்தைக்கு ஒப்பிடப்பட்டுள்ளனர்; நமது இரட்சிப்பின் தளபதியாகிய கிறிஸ்துவின் கீழுள்ள போர்ச்சேவகர்களென ஒப்பிடப்பட்டுள்ளனர்; மணவாளனாகிய இயேசுவின் மணவாட்டிகளுக்கு ஒப்பிடப்பட்டுள்ளனர்.
இப்பொழுது நாம் இவைகளையெல்லாம் குழப்பிக்கொண்டு, எப்படி மணவாளனால் தம் சொந்தச் சரீரத்தின் அங்கத்தினர்களையே திருமணம் செய்துகொள்ள முடியும் அல்லது எப்படித் தளபதி தன் சொந்தப் போர்ச்சேவகர்களையே திருமணம் செய்துகொள்ள முடியும் அல்லது ஆலயத்தின் கற்களைத் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று கேள்விகள் எழுப்புவோமானால், நாம் எவ்வளவு குழப்பமடைவோம் பாருங்கள். வேதவாக்கியங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஒவ்வொரு காட்சியும் ஏறக்குறைய தனித்து, பிரித்துப் பார்க்கப்படவேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பாடம் இருக்கின்றது; ஆனால் அதை நாம் மற்றக் காட்சிகளுடன் குழப்பிடக்கூடாது. ஆகையால் மீட்கும்பொருள் என்றால் என்ன என்பதைக்குறித்து மனதில் தெளிவடைந்துகொள்ளுங்கள், பின்னர் அதை அது இருந்த இடத்திலேயே விட்டுவிடுங்கள்; அதை அங்கிருந்து எடுத்து, பாவநிவாரணம் குறித்த கருத்தினைக் கொடுத்திடும் காட்சியுடன் இணைத்து குழப்பிடாதீர்கள். மீட்கும்பொருள் என்பது நமது கர்த்தரினால் கொடுக்கப்பட்டது; அது வேறு எவராலும் கொடுக்கப்பட முடியாது மற்றும் அது திரும்பத் திரும்ப கொடுக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் அது இயேசுவின் புண்ணியமானது எப்படிச் செயல்படுத்தப்படும் (application) எனும் காரியத்தினைக் காண்பிக்கிறதில்லை. “ஏற்றகாலங்களில் சாட்சியம் விளங்கும்படிக்கு, அவர் தம்மை மீட்கும்பொருளாக” கொடுத்து மாத்திரம் இருந்தார்.
இதன் ஆசீர்வாதங்கள் எப்படித் துவங்கி, கடந்துசெல்லும் என்பது பாவநிவாரண காட்சியினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாவநிவாரணம் என்பது நமது ஆதார வசனத்தின்படியான நமது ஆய்வின் விசேஷித்த அம்சமாய்க் காணப்படுகின்றது.
நமது ஆதார வசனத்தில் அப்போஸ்தலன் பாவநிவாரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றார். தன் பாடத்தைச் சித்தரிக்கும் ஒரு குறிப்பிட்ட நிழலை நமக்கு அவர் சுட்டிக்காட்டுகின்றார். நிழலான ஆராதனையில் யூதர்கள் பல்வேறு காணிக்கைகளையும், பலிகளையும் ஏறெடுத்தார்கள் – ஸ்தோத்திர பலி, சமாதான பலி, பாவநிவாரண பலிகள் முதலியவைகள் ஆகும். பாவநிவாரண பலியின் நிழலை மட்டுமே நாம் இப்பொழுது பார்த்து ஆராய்கின்றோம். ஜனங்களுக்கான பாவநிவாரண பலியானது வருஷந்தோறும், ஏழாம் மாதம், 10-ஆம் தேதி அன்று ஏறெடுக்கப்பட்டது மற்றும் அந்நாளானது பாவநிவாரண நாள் என்று அழைக்கப்பட்டது. பாவநிவாரணத்தினை அல்லது தேவனுடன் ஒப்புரவாகுதலை உண்டாக்கின பாவங்களுக்கான பலிகளானது அந்த ஒரு நாளில் ஏறெடுக்கப்படுகின்றது மற்றும் இது ஒரு வருஷத்திற்குச் செல்லுபடியாகுகின்றது மற்றும் அந்நாளிலிருந்து ஒரு வருஷம் முடிகையில், மீண்டும் முழு ஏற்பாடு தொடரப்படுகின்றது. வருஷந்தோறும் இப்படியாகத் தொடர்ந்து காளைகளும், ஆட்டுக்கடாக்களும் பலி செலுத்தப்படுவதைக்குறித்துக் குறிப்பிட்ட பிற்பாடு, அப்போஸ்தலன் உண்மையிலேயே பாவங்களை ரத்து செய்திடும் காரணத்தினால், திரும்பத் திரும்பச் செலுத்தப்பட அவசியமில்லாத நிலையில் நமது கர்த்தர் இயேசுவினால் செலுத்தப்பட்ட “விசேஷித்த பலிகளைக்குறித்து” நமக்குக் கூறுகின்றார். தேவனிடத்தில் தம்மூலம் வரும் யாவரையும் என்றென்றும் பூரணப்படுத்திடும் வகையில், தம்மையே பலியாக்கிடும் கர்த்தரின் ஒரே ஒரு பலியானது, நமது கர்த்தர் இயேசு தம் சொந்தச் சரீரத்தைப் பலிசெலுத்தினதில் துவங்கி, அவரது சபையாகிய, அவரது பின்னடியார்கள் என்பவர்களில் இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் அவரால் தொடரப்பட்டு வருகின்றது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இவர்கள் தங்கள் சரீரங்களை ஜீவபலிகளாக, பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமானதாக, புத்தியுள்ள ஆராதனையாக ஒப்புக்கொடுக்கும்படிக்கு வரவேற்கப்பட்டுள்ளனர். இந்தப் பலிகளைப் பிரதான ஆசாரியன் ஏற்றுக்கொள்கையில், அர்ப்பணித்துள்ளவர் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுகின்றார் மற்றும் அதுமுதற்கொண்டு கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினனென – பலிசெலுத்திக்கொண்டிருக்கும் பிரதான ஆசாரியனுடைய சரீரத்தின் அங்கத்தினனெனக் கருதப்படுகின்றார். இந்தக் கண்ணோட்டத்தின்படி [R4427 : page 202] 18-நூற்றாண்டுகளுக்கு முன்னதாக தம்முடைய மாம்சத்தினைப் பலிசெலுத்தினபோது துவங்கின பிரதான ஆசாரியனுடைய “விசேசித்த பலிகளானது,” அவரது பின்னடியார்கள் தங்கள் மாம்சத்தினை ஒப்புக்கொடுக்கையில், அவர்களில் தொடரப்பட்டு வருகின்றது; இவர்களுடையது பிரதான ஆசாரியன் நிமித்தமாக – அவருடைய நாமத்தில், அவரது புண்ணியத்தில், அவரது பலியென ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்தக் கண்ணோட்டத்தின்படி பாவநிவாரண நாளினுடைய முழுவேலையும், பலியின் வேலையாக இருக்கின்றது மற்றும் இன்னொரு கண்ணோட்டத்தின்படி நிழலில் காண்பிக்கப்பட்டுள்ள பிரகாரம், அது இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றது – தலையினுடைய பலி மற்றும் அவரது சரீரத்தின் அங்கத்தினர்களாகிய சபையின் பலியாகும்.
பாவநிவாரண நாள் மற்றும் அதன் பலிக்கடுத்த வேலைகள்பற்றின திவ்விய ஏற்பாட்டின் காட்சியினை நாம் லேவியராகமம் 16-ஆம் அதிகாரத்தில் பெற்றிருக்கின்றோம். தனக்காக – தனக்கு அடையாளமான காளை ஒன்றைப் பிரதான ஆசாரியன் கொண்டுவந்து, அதை அடித்தார் (பலிசெலுத்தினார்). காளை மனுஷனாகிய நமது கர்த்தருக்கு அடையாளமாய் இருக்கின்றது; வேதவாக்கியங்களில் கூறப்பட்டுள்ளதுபோன்று “ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்” (எபிரெயர் 10:5). பின்னர் இரண்டு ஆட்டுக்கடாக்கள் கொண்டுவரப்பட்டு, கூடாரத்தின் வாசலில் கட்டப்படுகின்றன. இவைகள் இஸ்ரயேல் ஜனங்களிடமிருந்து கொண்டுவரப்பட்டன அல்லது இவைகள் இஸ்ரயேல் ஜனங்களுக்கு அடையாளமாய்க் காணப்பட்டன மற்றும் இவைகள் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களாகிய விசுவாச வீட்டாருக்கு – இவர்களின் இரு வகுப்பாருக்கு, அதாவது “சிறுமந்தை” மற்றும் “திரள் கூட்டத்தாருக்கு” நிழலாய்க் காணப்படுகின்றன. பலிக்கென விசேஷமாய் ஆயத்தம்பண்ணப்பட்ட சரீரத்தினை இவர்கள் பெற்றிருக்கவில்லை என்பதை எத்தனை அழகாய் நிழல் காண்பித்துத் தருகின்றது! இது குறிப்பாக பாவநிவாரண பலிக்கென இஸ்ரயேல் ஜனங்களிடமிருந்து ஆட்டுக்கடாக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன எனும் அறிக்கையில் விளங்குகின்றது; ஆனால் இப்படியாக பெற்றுக்கொண்டது போன்ற எந்த அறிக்கையும் காளைப்பற்றி சொல்லப்படவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், நமது கர்த்தர் அவரது அற்புதகரமான பிறப்பின் நிமித்தமாக பரிபூரணமானவராகக் காணப்பட்டார்; உண்மையில் அவர் “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமாய்” இருந்தார். அவரது சீஷர்களாகிய நாமோ அபூரணர்களாகவும், உலகத்திலிருந்து வந்தவர்களாகவும், மற்றவர்களைப்போலவே கோபாக்கினையின் பிள்ளைகளாகவும் காணப்படுகின்றோம். உலகத்திலிருந்து எடுக்கப்பட்டவர்களாகிய நாமோ நமது அபூரணங்களைக் கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியத்தினால் மூடப்பெற்றவர்களாகக் கருதப்படுகின்றோம் – அதாவது பலியின் முதல் பங்கினால் மூடப்பெற்றவர்களாகக் கருதப்படுகின்றோம் – நிஜமான காளையின் இரத்தத்தினால், கிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவநிவாரணம் பெறுபவர்களாக இருக்கின்றோம். நமது கர்த்தருடைய பலியானது அவரது ஊழியத்தினுடைய ஆரம்பத்தில் துவங்கி, ஊழியத்தினுடைய இறுதியில் நிறைவடைந்தது என்றும், நியாயப்பிரமாணத்தின்கீழ் 30-ஆம் வயதை அடையாதது வரையிலும் அவரால் பாவநிவாரணத்திற்கான பலியாகிட முடியாது என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காண்பித்துள்ளதை நாங்கள் உங்களுக்கு நினைப்பூட்டுகின்றோம். எழுதியிருக்கிறபடி, அவர் 30-ஆம் வயதை அடைந்த உடனே பலியினை ஏறெடுத்தார்: “இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராயிருந்தபோது, யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்படும்படிக்கு யோர்தானுக்கு வந்தார்.” தேவனிடம் தம்மைப் பலிசெலுத்தத்தகதாகக் கூடுமானமட்டும் சீக்கிரமாய் வந்தார், ஏற்றவேளையில் அவர் வந்தார் என்பதில் நமக்கு உறுதியே. அப்போதுதான் “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது” (எபிரெயர் 10:7) எனும் தீர்க்கத்தரிசனத்தை அவர் நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் நமக்குத் தெரிவிக்கின்றார். அப்போதுதான் “இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார் (எபிரெயர் 10:9). வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், அங்கிருந்து அவர் “விசேசித்த பலிகளுக்கான” நிழலினை நிறைவேற்றி முடிக்கத் துவங்கினார். அவர் தம்மை ஒப்புக்கொடுத்தது உடனடியாக நிகழ்ந்தது, ஆனாலும் அவரது சரீரமானது சோதனைகளுக்கும், ஜீவியத்தின் கஷ்டங்களுக்கும் ஒப்புக்கொடுக்கப்படும் காரியமானது அவரது 3½ வருஷ ஊழியகாலம் முழுவதும் நடைபெற்று வந்து, கல்வாரியில் நிறைவேறி முடிந்தது. அவர் அனைத்தையும், ஜீவனையும்கூட பிதாவிற்கான ஊழியத்திற்கென்று கொடுத்துவிடத்தக்கதாகத் தம்மையே ஒரு கணப்பொழுதில் அர்ப்பணம்பண்ணிவிட்டார். ஆனால் உண்மையிலேயே நேரத்தினை, செல்வாக்கினை, பலத்தினை, ஜீவனைக்கொடுக்கும் காரியமானது 3½ வருஷங்களாக நீடித்தது. ஞானஸ்நானத்தில் அவர் அர்ப்பணித்த தருணம் முதற்கொண்டு அவர் மரித்ததாகக் கருதப்பட்டார், அதேசமயம் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டார். அவர் புதுச்சிருஷ்டியென – கருநிலையிலுள்ள ஆவிக்குரிய ஜீவியென இருப்பவராகக் கருதப்பட்டார்; அந்த 3½ வருஷக்காலங்களில் மாம்சம் பட்சிக்கப்பட்டது மற்றும் புதிய சுபாவமானது கர்த்தருக்குள் பலமடைந்துகொண்டும், திவ்விய சித்தத்திற்கு இசைவாக வளர்ந்துகொண்டும் வந்தது. மாம்சத்தின் பாடுகள், பலி பட்சிக்கப்படுதல் சிலுவையில் நிறைவேறி முடிந்தது; பின்னர் மூன்றாம் நாளில் புதிய சுபாவமானது பிதாவின் வல்லமையினால் பூரணத்திற்கு, ஒரு மகிமையின் ஆவிக்குரிய ஜீவியாக, மரித்த உலகத்திற்குப் புலப்பாடாத ஒரு ஜீவியாக எழும்பிற்று; ஆனால் அவர் இனிமேலும் மரித்தவர் இல்லை என்பதையும், தாம் இனி மனுஷனாகிய இயேசு இல்லை என்பதையும், மகிமையடைந்துள்ள ஆவிக்குரிய இயேசுவாவார் என்பதையும் சீஷர்களுக்கு நிரூபிக்கத்தக்கதாக, பல்வேறு உருவங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் தோன்றி காட்சியளித்தார். ஆகையாலே “அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார்.
நிழலில் கொழுப்பு முதலானவைகள் பிராகாரத்தின் வெண்கல தகனபலிபீடத்தின்மீது வைக்கப்படுகின்றன; இரத்தத்தைத் தவிர்த்து மிதியானவைகள் அனைத்துமே பாளயத்துக்குப் புறம்பே எரிக்கப்படுகின்றன. பிரதான ஆசாரியன் இரத்தத்தை எடுத்து, தன் கைகள் நிறைய தூபவர்க்கத்தினையும் எடுத்து, பலிபீடத்திலிருந்து நெருப்பையும் எடுத்துக்கொண்டு, உடனடியாகப் பரிசுத்த ஸ்தலத்திற்குள், பொன் குத்துவிளக்கினுடைய வெளிச்சத்திற்குள் கடந்துபோகின்றார். குத்துவிளக்கு மற்றும் அப்பம் வைக்கப்படும் மேஜைக்கு இடையிலுள்ள பீடத்தில் ஆசாரியன் நெருப்பினை வைத்துவிட்டு, அதன்மீது தூபவர்க்கத்தினைப் போடுகின்றார். தூபவர்க்கத்தினுடைய புகையானது மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளும் பிரவேசித்தது என்பதாக நாம் வாசிக்கின்றோம். இது அவசியமானதாகக் காணப்பட்டது. பிரதான ஆசாரியனால் செலுத்தப்பட்ட தூபவர்க்கமானது சர்வ வல்லமையுள்ளவரினால் வேறொரு காட்சியாகப் பார்க்கப்படுவதே முக்கியத்துவம் வாய்ந்த காரியமாய் இருக்கின்றது. இது தேவனுக்குச் சுகந்த வாசனையாக இருந்தது. இது நமது கர்த்தருக்கு முன்பாக, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாகச் சென்று, அங்கு கிருபாசனத்தின்மீது அமர்ந்தது. மூன்று தகனபலிகளைக் கவனியுங்கள். பரிசுத்த ஸ்தலத்தில் இடம்பெற்ற பலியானது, கிறிஸ்துவினுடைய 3½ வருஷங்களின் போதுள்ள, அவரது பலியின்மீதிருந்த தெய்வீகப் பார்வையினைச் சுட்டிக்காட்டுகின்றது. பிராகாரத்திலுள்ள வெண்கல பலிபீடத்தில் கொழுப்பு தகனிக்கப்படுதல் என்பது, நமது கர்த்தருடைய பலியானது அவரது சீஷர்களால், உண்மையுள்ள பின்னடியார்களால், அதாவது நீதிமானாக்கப்பட்டவர்களால், [R4427 : page 203] சுமார் 500-சகோதரர்களால் பார்க்கப்படுகிற காரியத்தினை அடையாளப்படுத்துகின்றது. அதுமுதற்கொண்டு இந்த நீதிமானாக்கப்படுகிற நிலைக்கு வருபவர்கள் அனைவரும் விசுவாசத்தின் மூலமாய் அதே பலியினைக் காணமுடிகிறவர்களாய் இருக்கின்றனர். மிருகத்தின் உடலானது பாளயத்திற்குப் புறம்பே சுட்டெரிக்கப்படுவது என்பது, நமது கர்த்தருடைய பலியானது மனுஷ கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்படும் காரியத்தினைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. மனுஷரைப் பொறுத்தமட்டில் இது நேரத்தினையும், உடலாற்றலையும் தகாதவிதமாய்ப் பயன்படுத்தும் காரியமாய் இருக்கின்றது. மனுஷரைப் பொறுத்தமட்டில் அவருடைய ஜீவியம் நாற்றம் எடுத்ததாய் இருந்தது, ஏனெனில் இவர்கள் அவரை ஆயக்காரர்கள் மற்றும் பாவிகளின் நண்பனாய்க் கருதினார்கள். பாளயத்திற்கு வெளியிலும், பிராகாரத்திற்கு உள்ளும், கூடாரத்தின் முதலாம் அறையிலும் ஏறெடுக்கப்பட்ட மூன்று தகன பலிகள் அனைத்தும், இந்தப் பல்வேறு தரப்பட்ட கண்ணோட்டங்களில் நமது கர்த்தருடைய பலியினை அடையாளப்படுத்திக் காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஒன்று முடிவடைந்த போது, அனைத்தும் முடிவடைந்தது – அதாவது நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டபோதாகும். அப்போது அவரது பலி நிறைவேறினது. அவர் திரைக்குப் பின்பு, உயிர்த்தெழுதலுக்குள்ளாகக் கடந்துபோனார். எனினும் இன்னொரு கோணத்தில் பார்க்கையில் நமது கர்த்தருடைய வேலை கல்வாரியில் நிறைவடையவில்லை. அது துவங்க மாத்திரமே செய்திருந்தது. அவர் தம் பலியின் முதலாம் பாகத்தினை மாத்திரம் நிறைவேற்றியிருந்தார், அதாவது ஆயத்தம் பண்ணப்பட்டிருந்த சரீரத்தை, அதாவது தம்மை பலிசெலுத்தினார். ஆனால் இன்னும் செய்யவதற்குரிய பெரிய ஒரு வேலையினை அவர் பெற்றிருந்தார் – அதாவது பிதாவினுடைய திட்டத்தின்படி “பரலோகத்தில் பெயரெழுதப்பட்டவர்களாகிய முதற்பேறான சபையை” – சபை வகுப்பாரை ஏற்றுக்கொள்வதும், பலிசெலுத்துவதுமாகும். இந்தச் சபையின் தலையானவர் தம் பலியினை நிறைவேற்றி, மகிமையின் கர்த்தராகியுள்ளார்; மீதியிருப்பவர்கள் இன்னமும் அவருக்கொத்த அனுபவங்களின் ஊடே கடந்து செல்ல வேண்டும். அவரது அடிச்சுவடுகளில் நடந்துசெல்ல வேண்டும்.
நிழலில் பிரதான ஆசாரியன் தூபவர்க்கத்தினை ஏறெடுத்த பிற்பாடு, அவர் காளையின் இரத்தத்தினை எடுத்துக்கொண்டு, கல்லறையில் நமது கர்த்தர் மூன்று நாட்கள் காணப்பட்டதைச் சித்தரிக்கும் விதமாக இரண்டாம் திரையின்கீழ்க் குனிந்துவந்து, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தார். அவர் திரைக்கு அந்தப் பக்கத்தில் ஆவியின் ஜீவியாக எழுந்திருந்து, “நமக்காய்த் தேவனுக்குமுன் தோன்றத்தக்கதாக” பரமேறினார். நிழலினை நாம் பார்த்து, இதன் நிறைவேறுதலை அடையாளம் காணமுயற்சிக்கையில், இக்காரியமானது கிருபாசனத்திற்கு முன்பும், கிருபாசனத்தின்மீதும் இரத்தம் தெளிக்கப்பட்டதில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று பார்க்கின்றோம். அவர் நமக்காய்ப் பிரத்தியட்சமானார் என்று அப்போஸ்தலன் கூறுகையில், இது பிரதான ஆசாரியன் இரத்தத்தினைத் தனக்காகவும், தன் வீட்டாருக்காகவும் சமர்ப்பித்த காரியத்தினால் – அதாவது தம் சரீரமான சபைக்காகவும், திரள் கூட்டத்தாருக்காகவும் – விசுவாச வீட்டாருக்காய், நிஜமான லேவியர்கள் அல்லது லேவி வீட்டாருக்காய்ச் சமர்ப்பித்த காரியத்தினால் நிழல்படுத்தப்படுகின்றது என்று நாம் காண்கின்றோம்.
அடுத்ததாக நிழலின் மற்றப் பாகத்தினைப் பார்க்கலாம். காளையின் இரத்தத்தினைச் செலுத்தின பிற்பாடு, பிரதான ஆசாரியன் வந்து, ஏற்கெனவே விவரிக்கப்பட்டுள்ளதுபோன்று தன் கைகளை வெள்ளாட்டுக்கடாக்களின்மீது வைக்கின்றார்; அதில் ஒன்று பலிசெலுத்தப்படுவதற்கெனக் கர்த்தருடைய ஆடு என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது, மற்றொன்று அழிக்கப்படுவதற்கெனப் போக்காடாகுகின்றது. சீட்டுகள் போடப்பட்ட காரியமானது, எந்த ஆடு பலியாகுவதற்குரியது எனும் விஷயத்தில் பிரதான ஆசாரியன் எந்தத் தெரிந்துகொள்ளுதலையும் (choice) பெற்றிருக்கிறதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. கர்த்தருக்கு அர்ப்பணம்பண்ணியிருப்பவர்கள் அனைவருமே பலியாகுவதற்குத் தகுதியானவர்கள் என்றபோதிலும், கர்த்தர் நபர்களைப் பார்ப்பதில்லை, மாறாக தங்களது உடன்படிக்கையின் கடமைகளுக்கு உண்மையாய் இருக்கும் அனைவரையும் ஏற்றுக்கொள்வதற்குச் சித்தமாயிருக்கின்றார். இந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களுமே, இந்தச் சுவிசேஷ யுகத்தின் அர்ப்பணிக்கப்பட்ட சபைக்கு நிழலாய்க் காணப்படுகின்றன; உலகத்திலிருந்து வந்துள்ள இவர்கள் தங்களைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்துள்ளனர். கர்த்தருடைய ஆடானது, பிரதான ஆசாரியனுடைய சரீரத்தின் அங்கத்தினர்களுக்கு அடையாளமாயிருக்கின்றது; போக்காடானது உண்மை விஷயத்தில் சபையில் குறைவுப்பட்டவர்களை, அதாவது “திரள் கூட்டத்தாரை,” நிஜமான லேவியர்களை அடையாளப்படுத்துகின்றது. நிழலில் பிரதான ஆசாரியன் தன் கைகளைக் கர்த்தருடைய ஆட்டின்மீது வைத்து, அதனை அடித்தார், அதைக் கொன்றார்; பின்னர் அதன் இரத்தத்தினை எடுத்து, காளையின் இரத்தத்தைக்கொண்டு செய்ததுபோன்றே செய்தார்; அதன் கொழுப்பும் காளைக்குச் செய்யப்பட்டது போன்றே வெண்கல பலிபீடத்தில் வைக்கப்பட்டது மற்றும் அதன் மாம்சம் பாளயத்திற்கு வெளியே சுட்டெரிக்கப்பட்டது. இக்காரியமானது சபை கிறிஸ்துவின் பாடுகளில் பங்கினைப் பெற்றிருப்பதையும் சித்தரிக்கின்றதாய் இருக்கின்றது. இது அப்போஸ்தலர்களின் விஷயத்தில் மாத்திரமல்லாமல், அதுமுதற்கொண்டு தங்களுக்கு நன்மையாய் இருப்பவைகள் அனைத்தையும் கர்த்தருக்காகவும், சத்தியத்திற்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும் பலிசெலுத்தி வருபவர்கள் அனைவரின் விஷயத்திலும்கூட உண்மையாகவே இருக்கின்றது.
நம்முடைய ஆதார வசனத்தில் அப்போஸ்தலன், கர்த்தரைக் காளையுடனும், அவரது உண்மையுள்ள ஜனங்களை வெள்ளாட்டுக்கடாவுடனும் அடையாளப்படுத்திக் கூறுகின்றார். பாவநிவாரண பலிகளைத் தவிர வேறு எந்தப் பலிகளும் ஒருபோதும் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்பட்டதில்லை என்றும், இந்தப் பலிகளைத் தவிர வேறு எந்தப் பலிகளிலும் இரத்தமானது பலிசெலுத்தவும்படவில்லை, பாவநிவாரணம் உண்டாகத்தக்கதாக மகா பரிசுத்த ஸ்தலத்தில் தெளிக்கப்படவுமில்லை என்றும் அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகின்றார். பின்னர் “இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்” (எபிரெயர் 13:12) என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். இவைகள் பாவங்களை எடுத்துப்போடுகிற “விசேஷித்த பலிகளாக” பரிசுத்த பவுல் அடிகளாரால் விவரிக்கப்பட்டுள்ளது. பாவநிவாரண நாளில் பிரதான ஆசாரியனால் ஏறெடுக்கப்படும் இந்த மாபெரும் பலிசெலுத்தும் வேலையின் விளைவானது (effect) ஒருபோதும் திரும்பத்திரும்பச் செய்யப்பட வேண்டியிருக்காது. இது தெய்வீக நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றிவிடும். இது உலகத்தினை முழுமையான ஒப்புரவாகுதலுக்குள் கொண்டுவந்துவிடும். புண்ணியமானது, காளையினுடைய பலியில்தான் காணப்படுகின்றது. காளை நமது கர்த்தர் இயேசுவுக்கு அடையாளமாயிருக்கின்றது; வெள்ளாட்டுக்கடாவானது 1,44,000-பேருக்கு அடையாளமாயிருக்கின்றது. நம்முடைய ஜீவியங்களைக் கர்த்தருடைய ஊழியத்திற்கென்று ஒப்புக்கொடுப்பதில் எந்த உண்மையான மதிப்புமில்லை – பாவத்தை எடுத்துப்போட்டுவிடுவதற்குரிய எவ்வாற்றலும் இல்லை. காளையினுடைய பலியின் புண்ணியத்தின்மூலம் இந்த வெள்ளாட்டுக்கடா வகுப்பாருக்கு முதலாவது செயல்படுத்தப்படும் நீதிமானாக்கப்படுதலின் வாயிலாகவே – நம்முடைய பலிக்கான மதிப்பு எல்லாமே வருகின்றது.
பிரதான ஆசாரியன் வெள்ளாட்டுக்கடாவின் இந்த இரத்தத்தினைத் தம்முடைய ஒரே ஒரு பலியின், அதாவது நித்திய ஜீவனை அடையப்போகும் யாவரையும் ஆசீர்வதித்திடும் அந்த ஒரே ஒரு பலியின் பாகமாகக் கருதினதாக நிழல் நமக்குத் தெரிவிக்கின்றது. காளையினுடைய இரத்தத்தை முதலாவதாகப் பிரதான ஆசாரியன் படைத்திட்ட நோக்கத்திலிருந்து மிகவும் வேறுப்பட்ட நோக்கத்திற்காக, அவர் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்தினைப் படைக்கின்றார். காளையின் இரத்தமானது பிரதான ஆசாரியனுக்காகவும், அவரது வீட்டாரின் அங்கத்தினர்களுக்காகவுமானது; வெள்ளாட்டுக்கடாவின் இரத்தம் மீதமுள்ள இஸ்ரயேல் ஜனங்கள் அனைவருக்குமானதாகும். நிஜத்தில் கிறிஸ்துவின் இரத்தமானது, அவரது அர்ப்பணிக்கப்பட்ட பரிசுத்தவான்களுக்கு, “சிறுமந்தைக்கு,” “இராஜரிக ஆசாரியக் கூட்டத்தாருக்கு” மற்றும் லேவியர்களாகிய “திரள் கூட்டத்தாருக்கு” என்று பயன்படுத்தப்படுகின்றது; ஆனால் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையினுடைய பலியின் புண்ணியமானது, [R4428 : page 203] ஜனங்கள் அனைவரின் சார்பாக – உலகத்தின் சார்பாக – அதாவது ஒப்புரவாகுவதற்குரிய மகிமையான வாய்ப்புகளைத் தங்களுக்கென்று பயன்படுத்திக்கொள்ள விரும்பிடும் உலகத்தார் யாவரின் சார்பாக அவரால் பயன்படுத்தப்படும்.
பிரதான ஆசாரியன் முதலாம் பலியினை நிறைவேற்றி, தம் இரத்தத்தினைச் செலுத்தினபோது, அவர் கடந்துவந்தார், அவர் பெந்தெகொஸ்தே நாளின்போது தம்மை வெளிப்படுத்தி, பெந்தகொஸ்தே நாளில் ஆசீர்வாதங்களை அருளினதன் வாயிலாக, அடையாளமான விதத்தில் தம் கரங்களைச் சபையின்மீது வைத்தார்; இந்தப் பலியின் வாயிலாக, அவரது பின்னடியார்கள், அவரது பலியின் நிபந்தனைகள் மற்றும் நியாதிகளுக்கு இணங்க முடிபவர்களானார்கள். ஆனால் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்தினைப் படைத்த பிற்பாடு, பிரதான ஆசாரியன் அவரது வேலையினை முடித்ததாகக் காண்பிக்கப்படுகின்றார். அவர் பலிசெலுத்தும்போதுள்ள தனது வஸ்திரங்களைக் கழற்றிவிட்டு, கிறிஸ்துவின் குணலட்சணத்தினுடைய, இன்னுமாக உலகத்தின் தீர்க்கத்தரிசியென, ஆசாரியரென, இராஜாவென, நியாயாதிபதியென, மத்தியஸ்தரென அவர் அபிஷேகிக்கப்பட்டுள்ள கனமிக்க ஊழியத்தினுடைய மகிமையான பண்புகளை நிழலில் காண்பித்திடும் மகிமையான மற்றும் அலங்காரமான தனது வஸ்திரங்களை உடுத்திக்கொள்கின்றார். இப்படியாக உடுத்திக்கொண்டு, வெளியே வரும்போது, இது நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையினையும், திவ்விய மகிமை மற்றும் வல்லமையை அவர் எடுத்துக்கொண்டதையும் அடையாளப்படுத்துகின்றது; அப்போது சபை, அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்களென, இஸ்ரயேலுக்கும், பூமியின் குடிகள் அனைவருக்கும் புது உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை வழங்குவதற்குவேண்டி ஒத்துழைக்கத்தக்கதாக அவருடன்கூடக் காணப்படுவார்கள். பாவநிவாரண நாளின்போது இஸ்ரயேல் ஜனங்கள் இரட்டு உடுத்திக்கொண்டு, நல்லப் பதார்த்தங்களை உண்ணாமல், மகிமையும், அலங்காரமுமான வஸ்திரத்தில் பிரதான ஆசாரியன் வெளியே வருவது வரையிலும் உபவாசமிருந்து காத்திருந்ததுபோலவே, இந்தச் சுவிசேஷயுகம் முழுவதிலும் இருந்துவந்துள்ளது. உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது மற்றும் பாவத்தினால், மரணத்தினால், ஒழுக்கக்கேட்டினால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களைக்குறித்துப் பரிசுத்த பவுல் அடிகளார், “நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது” (உரோமர் 8:22, 19) என்று கூறியுள்ளார்; இவர்கள் யூதருடைய பிரதான ஆசாரியனின் மகிமையான வஸ்திரங்களினால் அடையாளப்படுத்தப்படும் தலை மற்றும் சரீரமாகிய பிரதான ஆசாரியனுக்காய்க் காத்திருக்கின்றனர். நிழலைத் தொடர்ந்து இன்னும் நாம் பார்க்கையில், பிரதான ஆசாரியன் தனது மகிமையான வஸ்திரங்களில் பலிபீடத்தினிடத்திற்குச் சென்று, தனது கரங்களை உயர்த்தி, ஜனங்களுக்குத் தனது ஆசீர்வாதங்களைக் கொடுத்தார் – புது உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை, பாவ மன்னிப்பாகிய ஆசீர்வாதங்களை, மாம்சமான யாவர்மீதும் பரிசுத்த ஆவியினைப் பொழிந்தருளும் ஆசீர்வாதத்தினைக் கொடுத்தார் என்று பார்க்கின்றோம். நிழலில் ஒர் ஆசீர்வாதம் இப்படியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்றால், நிஜத்தில் அந்த ஆசீர்வாதம் எவ்வளவு பெரியதாயிருக்கும்! நிழலில் ஜனங்கள் எழுந்திருந்து, தங்கள் இரட்டு வஸ்திரத்தையும், உபவாசத்தையும் களைந்து தாங்கள் மன்னிப்பை அடைந்ததில் களிகூர்ந்ததுபோன்று, உலகத்தினுடைய ஆயிரவருஷ விடியலின்போது, உலகம் மகா பிரதான ஆசாரியன் மற்றும் பாவநிவாரண பலிகளைக்குறித்த புரிந்துகொள்ளுதலுக்குள்ளாய் வருகையில், அவர்கள் பாவம் மற்றும் மரணம் மற்றும் சீர்க்கேட்டினின்று எழும்பி, திவ்விய கிருபையில் களிகூருவார்கள்; உலகம் உண்டானது முதற்கொண்டு பரிசுத்த தீர்க்கத்தரிசிகள் அனைவரின் வாயினின்று புறப்பட்ட காரியங்களின்படியே, இஸ்ரயேலுக்கு முன்னதாக வைக்கப்படும் திரும்பக்கொடுத்தலின் அநேகம் ஆசீர்வாதங்கள்குறித்த உணர்ந்துகொள்ளுதலிலும் களிகூருவார்கள். (அப்போஸ்தலர் 3:21)
ஆதார வசனத்தில் அப்போஸ்தலன் “ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்” என்று கூறுகின்றார் (எபிரெயர் 13:13). எந்த ஜனங்களை இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தினாலே பரிசுத்தஞ்செய்வார் [R4428 : page 204] என்று கேள்வி கேட்கப்படுகின்றதா? “சகல ஜனங்கள் – அதாவது அவர் வாயிலாகப் பரிசுத்தமாக்கப்படுதலையும், சுத்திகரிக்கப்படுதலையும், ஒப்புரவாகுதலையும் ஏற்றுக்கொள்ளும் சகல ஜனங்கள்” ஆவார்கள் என்ற பரந்த வார்த்தைகளில் நாங்கள் பதிலளிக்கின்றோம். அவர் தம்மையே அனைவருக்குமான மீட்கும்பொருளாகக் கொடுத்துள்ளதாக நாம் வாசிக்கின்றோம். அவர் அதை உடனடியாக அனைவருக்கென்றும் செயல்படுத்தாமல் (apply), சபைக்கு, “விசுவாச வீட்டாருக்கு,” நமக்கு மட்டுமே செயல்படுத்தியுள்ளார் எனும் காரியம் எந்த மாற்றத்தையும் கொண்டுவருகிறதில்லை. தம்மை அவர் பலிசெலுத்தினதற்கான நோக்கம், அனைவருக்காகவும்தான். இக்காரியம் இதுவரையிலும் இயேசுவினுடைய பலியின் புண்ணியமானது “விசுவாச வீட்டாருக்கு” அப்பாற்பட்டு யாருக்கும் கடந்து வரவில்லை எனும் உண்மைக்கு எவ்வித மாற்றத்தினையும் கொண்டுவருகிறதில்லை. ஏற்றகாலத்தில் அவரது புண்ணியமானது சபையின் மூலமாக ஒவ்வொரு சிருஷ்டியினிடத்திற்கும் கடந்துவரும். ஆகையாலே “உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது மற்றும் இயேசு திவ்விய கிருபையினாலே ஒவ்வொரு மனுஷருக்காகவும் மரணத்தினை ருசிப்பார்த்ததினால், அவரது மரணத்தின் மூலமாக நமக்கான இரக்கத்தினைப் பெற்றுக்கொள்கிறோன்.
கோக்காடு வகுப்பார் என்பவர்கள் ஆவிக்குரிய வகுப்பாரை அடையாளப்படுத்த முடியாது, காரணம் போக்காடானது ஒருபோதும் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாகவோ அல்லது மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாகவோ சென்றதில்லை என்று முதிர்ச்சியில்லாத சிந்தனையினால் சிலர் குறிப்பிடுகின்றனர். காளையும் சரி, கர்த்தருடைய ஆடும் சரி ஒருபோதும் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாகவோ அல்லது மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாகவோ சென்றதில்லை என்று நாங்கள் பதிலளிக்கின்றோம். இவைகளின் இரத்தம் மாத்திரமே மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டுபோகப்பட்டது மற்றும் தெய்வீகச் சித்தம் அல்லது ஏற்பாட்டின்படி செய்யத்தக்கதாகப் பூமிக்குரிய உரிமைகளையும், சிலாக்கியங்களையும், ஜீவனையும் தானாய் விரும்பி ஒப்படைத்துவிடுவதை இரத்தமானது அடையாளப்படுத்துகின்றது. போக்காடு அல்லது “திரள் கூட்டம் வகுப்பாரில்” உள்ளவர்கள், தங்களைப் பலியாக ஒப்புக்கொடுத்து, ஏற்றுக்கொள்ளப்பட்டும், தங்களது பலிக்கடுத்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிப்போனவர்கள் ஆவார்கள். பிரதான ஆசாரியனுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாகவும், திவ்விய தளத்தில் அவரது மகிமையின் பங்காளிகளாகவும் ஆகுவதற்குத் தவறிப்போன இவர்கள் – இவர்களது மாம்சம் அழிக்கப்பட்டுப்போய், ஆவியானது கர்த்தர் இயேசுவின் நாளில் இரட்சிக்கப்படத்தக்கதாக ஒருவேளை கர்த்தரிடமிருந்து விசேஷமாய் உபத்திரவத்தின் அனுபவத்தை அருளப் பெற்றுக்கொள்ளவில்லையெனில் – இவர்கள் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். இவர்களது விசுவாசத்தின் காரணமாகவும், மரணபரியந்தமான இவர்களது அர்ப்பணத்தின் காரணமாகவும் இவர்கள் கர்த்தரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் அர்ப்பணிப்பினை நிறைவேற்றத் தவறினபடியினாலும், தற்கால பூமிக்குரிய ஜீவியத்தைப் பற்றிக்கொண்டு காணப்படுவதினாலும், இவர்களது மாம்சம் அழிக்கப்படத்தக்கதாக ஒருவேளை இவர்களுக்காக இத்தகைய ஏற்பாடு பண்ணப்படவில்லையெனில், இவர்கள் அனைத்தையுமே இழந்துபோக வேண்டியவர்களாய் இருப்பார்கள். இவர்களைக் கனவீனமான வகுப்பார் என்றோ, உண்மையற்ற வகுப்பார் என்றோ, வளர்ச்சியடையாத வகுப்பார் என்றோ நாம் எண்ணிக்கொள்ளக்கூடாது. யார் ஒருவரும் மறுரூபம் அடைந்து, தேவனுக்கும், அவரது நீதிக்கும் பூரணமான நேர்மை நிலையினை எட்டாதது வரையிலும், திவ்விய ஏற்பாட்டின்கீழ் எந்த ஜீவத்தளத்திலும் நித்திய ஜீவனை அடையமுடியாது. தேவனுக்குக் கீழ்ப்படியும் உயர்வான தரநிலையினை ஒருவன் அடையாத வரையிலும், அவன் “திரள் கூட்டத்திலோ” அல்லது வேறு ஏதேனும் வகுப்பாரிலோ நித்திய ஜீவனை அடைவதற்குப் பாத்திரமாய் எண்ணப்படுவதில்லை. இவர்கள் பரிசுத்த ஆவியினால் ஜெநிபிக்கப்பட்டுள்ளபடியால், இவர்களால் தங்களது பூலோக உரிமைகளையும், திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களையும் திரும்பப்பெற முடியாது. இவர்கள் ஒருமுறை அர்ப்பணம்பண்ணி பலியாகியுள்ளதால், திரும்பிச்செல்லுதல் என்பது கூடாதகாரியம். ஆவிக்குரிய ஜீவனை இவர்கள் அடையவில்லையெனில், இது இரண்டாம் மரணத்தை இவர்கள் விஷயத்தில் குறிக்கின்றதாய் இருக்கும்.
இந்தத் “திரள் கூட்ட” வகுப்பாருக்குப் பாவநிவாரணத்துடன் எந்தச் சம்பந்தமும் இல்லை, ஏனெனில் போக்காடானது பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படுவதுமில்லை, அதன் இரத்தம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டுசெல்லப்படவுமில்லை. அப்படியானால் லேவியராகமம் 16:21-ஆம் வசனத்தின்படி, ஆரோன் தனது கைகளைப் போக்காட்டினுடைய தலையின்மீது வைத்து, அதன்மீது இஸ்ரயேல் ஜனங்களுடைய அக்கிரமங்கள் அனைத்தையும் அறிக்கையிட்டு, அவர்களது மீறுதல்கள் அனைத்தையும் போக்காட்டினுடைய தலையின் மீது சுமத்துவதின் அர்த்தமென்ன?
காளையின் இரத்தத்தினாலும், கர்த்தருடைய ஆட்டின் இரத்தத்தினாலும் உண்டான பாவநிவாரணம் என்பது, ஆதி ஆதாமின் பாவத்திற்கும், அதனால் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள பெலவீனங்கள் மற்றும் அபூரணங்கள் அனைத்திற்குமான பாவநிவாரணத்தை அடையாளப்படுத்துகின்றது. இந்த இரண்டு மிருகங்களின் இரத்தமானது சகல ஜனங்களுடைய இத்தகைய பாவங்கள் அனைத்திற்கும் நிவாரணத்தினை உண்டுபண்ணியுள்ளபடியால், போக்காட்டினுடைய தலையின்மீது அறிக்கைப்பண்ணப்பட்டத்தக்கதாக மீதி எதுவும் இருப்பதில்லை என்பதும் வெளியாகுகின்றது. அப்படியானால் ஆரோன் போக்காட்டினுடைய தலையின்மீது அறிக்கையிட்ட பாவங்கள் என்னவாக இருக்கும்? எங்கள் பதில்: “எங்களுக்கு மீறுதல்கள் செய்பவர்களை நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் மீறுதல்களையும் எங்களுக்கு மன்னியும்” என்று நமது கர்த்தர் கற்றுத்தந்த ஜெபத்தில் ஒருவகை மீறுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு விரோதமாய் மீறுதல் புரிந்துள்ளோரை நாம் மன்னித்தால், தேவனும் நம்முடைய மீறுதல்களை மன்னிப்பார். ஆனால் அவர் ஆதி பாவத்தினை மன்னிக்கவில்லை; மாறாக அதினிமித்தம் அவர் நம்மை மரணத்திற்குள்ளாகத் தீர்த்து, அவருடைய குமாரனை, நம்முடைய மீட்பராகும்படிக்கு அருளினார். மீறுதல்கள் என்பவைகள், கர்த்தருடைய சித்தத்தினை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று நன்கு அறிந்திருக்க, அதில் காண்பிக்கும் அலட்சியத்தில் அல்லது புறக்கணிப்பில் அல்லது குறைபாட்டில் விளங்கும் தவறுகள், குறைவுகள் முதலியவைகளாகக் காணப்படுகின்றன. கர்த்தர் உலகத்தின் காரியங்கள் அனைத்தையும் குறித்து மிகவும் தளர்வற்ற கணக்கினைப் பார்ப்பவராகத் தம்மை வெளிப்படுத்துகின்றார். யூத ஜனங்கள்மீது அவர்களுடைய அறுவடை காலத்தின் நிறைவில் கடந்துவந்த கடுமையான உபத்திரவங்களானது, பழிவாங்கும் விதத்திலுள்ள அனுபவமாகும் என்று கர்த்தர் விவரிக்கின்றார். அவர்களது யுகத்தினை முடிவிற்குக் கொண்டுவந்த அந்தப் பயங்கரமான உபத்திரவத்தின்போது, நமது கர்த்தர் முன்னறிவித்ததுபோன்று, அவர் நீதிமானாகிய ஆபேல் முதற்கொண்டு, அப்போது வரையிலும் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தம் அனைத்திற்குமாகக் கணக்கு விசாரித்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு அநீதியும், பழிவாங்குதலுக்காக, தண்டனைக்காகக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றது. மரணத்தினைத் தண்டனையாகப் பெற்றிருந்த மகா ஆதி பாவமானது, நமது கர்த்தர் அநீதியுள்ளவர்களுக்குப்பதிலாக நீதியுள்ளவராக மரித்ததன் மூலம் கணக்குக் கட்டித்தீர்க்கப்பட்டது. ஆனால் நீதிக்குக் கணக்குச் சரிக்கட்டப்படாத நிலையில் முற்காலங்களிலும், தற்காலத்திலும் அநேகம் பாவங்கள், அநேகம் அநீதிகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு வெளிப்படுத்தின விசேஷ புஸ்தகத்தில் பலிபீடத்தின்கீழ் ஆத்துமாக்கள்: “பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்” என்று கூக்குரலிடுவதாக நாம் வாசிக்கின்றோம் (வெளிப்படுத்தல் 6:10). நீதியின் நிமித்தமாகத் துன்புறுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நிறைவுபெறுவதற்காக நீதியானது காத்துக்கொண்டு மாத்திரம் இருக்கின்றது மற்றும் எண்ணிக்கை நிறைவுபெற்றவுடன் தண்டனைக் கடந்துவரும். யூத யுகத்தினை நிறைவுசெய்த உபத்திரவ காலத்தினைப்போன்றே, இந்த யுகத்தினையும் நிறைவுசெய்திடும் மாக உபத்திரவ காலமானது, நீதியின் கோரிக்கைகளைச் சரிக்கட்டும் காலமாயிருக்கும். அநுக்கிரக காலத்தில் பலிசெலுத்துவதற்குத் தவறிடும் “திரள் கூட்டத்தார்,” ரத்து செய்வதற்கென உலகத்தின்மீது வரவிருக்கின்ற, அதாவது பொதுவான மனுக்குலத்தின்மீது வரவிருக்கின்ற அந்த உபத்திரவத்தில் கொஞ்சம் பங்கடைவதற்கென அனுமதிக்கப்படுவார்கள். காலம் வரும்போது “திரள் கூட்டத்தாரிலுள்ள” இந்த அருமையான நண்பர்கள், கர்த்தர் இயேசுவினுடைய நாளில் ஆவிக்குரிய ஜீவிகளெனத் தாங்கள் இரட்சிக்கப்படத்தக்கதாக மாம்சம் அழிக்கப்படுவதுகுறித்தும், பாடுகளிலுள்ள தங்கள் பங்கினைக்குறித்தும் களிகூருவார்கள். உலகத்தினுடைய அக்கிரமங்களின் நிமித்தமாக இவர்கள் அனுபவிக்கவிருக்கும் உபத்திரவமானது, அந்த உபத்திரவத்தின் நாளில் மற்றவர்களால் அனுபவிக்கப்படும் உபத்திரவங்களைவிட அதிகமாய் இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.