R4273 – போக்காடு எந்தப் பாவங்களைச் சுமந்தது?

No content found

R4273 (page 331)

போக்காடு எந்தப் பாவங்களைச் சுமந்தது?

WHAT SINS THE SCAPE-GOAT BORE

“பாவநிவாரண நாளைப்பற்றின லேவியராகமம் 16-ஆம் அதிகாரத்தினுடைய பதிவில், பிரதான ஆசாரியனுடைய சரீரம் மற்றும் வீட்டாருக்கான பாவங்களுக்காய் முதலாவது காளையினுடைய பலி ஏறெடுக்கப்பட்ட பிற்பாடு, ஜனங்களுடைய பாவங்களுக்காய்க் கர்த்தருடைய ஆடானது பலிசெலுத்தப்பட்ட பிற்பாடு, பிரதான ஆசாரியன் போக்காட்டினை அழைப்பித்து, அதன் தலைமீது தன் கைகளை வைத்து, “அதின்மேல் இஸ்ரயேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்” என்பதாக நாம் பதிவில் வாசிக்கின்றோம் (லேவியராகமம் 16:21). இந்தப் போக்காடானது வெளிப்படுத்தல் 7:9-15-ஆம் வசனங்களில் இடம்பெறும் “திரள் கூட்டத்தாருக்கு” நிழலாக இருக்கின்றது என்று நாம் அர்த்தம் கண்டுபிடித்திருக்கின்றோம். கூடாரத்தின் வாசலில் கட்டப்பட்டிருந்த கர்த்தருடைய ஆடும், போக்காடும், இந்தச் சுவிசேஷ யுகத்தில் கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம்பண்ணி, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படும் இரண்டு வகுப்பாருக்கு நிழலாய்க் காணப்படுகின்றது என்று நாம் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இதில் ஒரு வகுப்பார் தங்கள் அர்ப்பணிப்பிற்கு இசைவாகக் காணப்பட்டு, நிழலில் காளையினால் அடையாளப்படுத்தப்படும் கிறிஸ்துவின் முன்மாதிரியினைப் பின்பற்றி நடக்கின்றனர். இவர்களைப் போன்றே மற்ற வகுப்பாரும் அர்ப்பணிக்கப்பட்டவர்களாகவும், ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகவும் இருந்தபோதிலும், “கிறிஸ்துவுடன் பாடுபடுவதற்குரிய” சிலாக்கியத்தினைப் பயன்படுத்திடுவதற்குத் தவறிவிடுகின்றனர். இந்த வகுப்பார் பலியின் உடன்படிக்கையிலுள்ள பாடுகளினின்று விடப்படுகின்றனர். அப்படியானால், போக்காட்டின்மீது எந்தப் பாவங்கள் சுமத்தப்படுகின்றன என்றும், அவை நிஜமான திரள் கூட்டத்தினரின் விஷயத்தில் எதை அடையாளப்படுத்துகின்றது என்றுமுள்ள கேள்விகள் எழும்புகின்றன. அவை விசுவாச வீட்டாருடைய பாவநிவாரணத்திற்கு என்று காளையின்மீது சுமத்தப்பட்ட அதே பாவங்களை அடையாளப்படுத்துகிறதில்லை என்று நாங்கள் பதிலளிக்கின்றோம்; இன்னுமாக அவை கர்த்தருடைய ஆட்டின் இரத்தத்தைக் கொண்டு நிவிர்த்தி செய்யப்பட்ட பாவங்களையும் அடையாளப்படுத்துகிறதில்லை. இந்தப் (ஆதாமின்) பாவங்களுக்காய் இரத்தம் தெளிக்கப்பட்ட காரியமானது, “அனைத்து ஜனங்களுக்காகவும்” இப்பாவங்களை முழுமையாய் ரத்து பண்ணிற்று.

மகா பரிசுத்த ஸ்தலத்தில் “ஜனங்கள் அனைவருடைய பாவங்களுக்கென்று” முதலாவது பாவநிவிர்த்தி செய்யப்பட்ட சம்பவத்திற்கும், பிற்பாடு “போக்காட்டின் தலைமீது ஜனங்களுடைய அக்கிரமங்களைச் சுமத்திடும்” சம்பவத்திற்கும் இடையில் முரண்பாடு இருப்பதுபோன்று தோற்றமளிக்கும் காரியத்திற்காக விளக்கமானது, இரண்டு வகையான பாவங்கள் இருக்கின்றன என்றும், காளை மற்றும் கர்த்தருடைய ஆட்டினுடைய பலியினால் அடையாளப்படுத்தப்படும் கிறிஸ்து மற்றும் சபையின் பலியானது ஒருவகையான பாவத்திற்கே நிவாரணமானதே ஒழிய, மற்ற வகையான பாவத்திற்கல்ல என்றுமுள்ள உண்மையினால் விவரிக்கப்படுகின்றது. ஆகையாலே நமது கர்த்தரைக்குறித்து, “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று எழுதப்பட்டுள்ளது; இந்த ஆட்டுக்குட்டியானவர் தம்முடன்கூடக் கர்த்தருடைய ஆட்டினால் அடையாளப்படுத்தப்படும் பலியினை ஏறெடுக்கும் சபையையும் சேர்த்துள்ளார். உலகத்தின் பாவம் என்பது ஆதாமின் பாவமாகும்; மேலும் இப்பாவத்தினைக்குறித்து அப்போஸ்தலன்: “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” (உரோமர் 5:12) என்று கூறுகின்றார்; ஒருவருடைய விருப்பத்தினைப் பொருட்படுத்தாமலேயே, இந்தப் பாவமும், இதற்கான தண்டனையும் அனைவர்மீதும் காணப்படுகின்றது. ஏனெனில் அனைவருமே பாவத்தில் பிறந்தவர்களாகவும், துர்க்குணத்தில் உருவானவர்களாகவும் – பழுதடைந்தவர்களாகவும், முற்றும் முடிய நீதிசெய்ய முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்த ஒரு பாவத்திற்காக மட்டுமே கிறிஸ்துவாகிய தலையும், சரீரமும் தண்டனைக் கணக்கினைச் செலுத்தித்தீர்க்கின்றனர்.

இந்தப் பொதுவான பாவத்தைத் தவிர, இன்னுமாக “ஜனங்களுடைய மீறுதல்கள்” என்ற ஒன்று இருக்கின்றது; இதில் சிலர் பங்கினை அதிகமாகவும், சிலர் குறைவாகவும், சிலர் ஒரு பங்குமே இல்லாமலும் காணப்படுகின்றனர். இவை உலகத்தில் காணப்படும் தீய செய்கைகளிலேயே மிகவும் மனப்பூர்வமான தீய செய்கைகளாகும் – அதாவது சுதந்தரிக்கப்பட்ட பெலவீனங்களால், செய்வதற்கு மிஞ்சி நீதி மற்றும் அன்பில் மீறுதலாகும். இவைகள் விஷயத்தில் அறிவு மற்றும் எதிர்த்துப் போராடுவதற்குரிய திறனிற்கு ஏற்ப பொறுப்பு ஒன்று காணப்படுகின்றது. உலகத்தினுடைய இந்தப் பாவங்களே, போக்காடு வகுப்பார் தலைமீது சுமத்தப்படுகின்றது மற்றும் இதற்காகவே இவர்கள் பாடுபட அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஓர் உதாரணமானது, நிழலான இஸ்ரயேலர்குறித்தும், மகாபெரும் சிலாக்கியங்களை அனுபவித்தப்போதிலும், பரம அழைப்பிற்கு அபாத்திரர்களாகிப்போன யூத ஜனங்கள்மீது கடந்துவந்த பயங்கரமான உபத்திரவங்கள் குறித்துமுள்ள நமது கர்த்தருடைய வார்த்தைகளில் காணப்படுகின்றது.

அந்த உபத்திரவ காலத்தினைக்குறித்து நமது கர்த்தர் மத்தேயு 24-ஆம் அதிகாரத்தில் அதிகமாய்ப் பேசியிருக்கின்றார்; மேலும் இதைக்குறித்து “நியாயப்பிரமாணங்களிலும், தீர்க்கத்தரிசனங்களிலும் எழுதப்பட்டுள்ளவைகள் நிறைவேறத்தக்கதாக, தேவன் இந்த ஜனங்கள்மீது கோபாக்கினையைப் பூரணமாய் வரப்பண்ணினார்” என்று அப்போஸ்தலர் பேசியுள்ளார். இவர்களுடைய மூதாதையர்மீது வந்ததைக்காட்டிலும் இவர்கள்மீது இவ்வளவு அதிகக் கடுமையான சூழ்நிலைகள் ஏன் வரவேண்டும்? வேதவாக்கியங்கள் முன்னறிவித்துள்ளதுபோன்று இந்த யுகத்தினுடைய முடிவிலுள்ள திரள் கூட்டத்தார்மீதே, முந்தய காலங்களில் காணப்பட்ட மற்றவர்களைக்காட்டிலும் இந்தளவுக்கு ஒரு மகா உபத்திரவம் ஏன் வரவேண்டும்? இதற்குத் திறவுகோல் போன்றதொரு வார்த்தையினை நமது கர்த்தர் குறிப்பிட்டுள்ளார்: “ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கத்தரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 11:50-51). இதுபோலவே இந்த யுகத்தினுடைய முடிவைப்பற்றி பேசிடும் வேதவாக்கியங்களும், இந்த யுகத்தினை முடித்துவைத்திடும் பயங்கரமான உபத்திரவத்தில், மகா பழிவாங்கும் கணக்கானது முழுமையாகச் சரிக்கட்டி தீர்த்துவைக்கப்படும் (squared) என்று தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இந்த யுகத்தின் ஆரம்ப காலங்களில் பாடுபட்டவர்கள், “பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்” என்று சத்தமிட்டுக்கொண்டிருக்கும் பலிபீடத்தின் கீழுள்ள சிரச்சேதம் பண்ணப்பட்ட ஆத்துமாக்களினால் அடையாளப்படுத்தப்படுகின்றனர் (வெளிப்படுத்தல் 6:10). இவர்களுடைய இரத்தம்குறித்தும், இவர்களுக்குச் செய்யப்பட்ட தீமைகள், அநியாயங்கள்குறித்தும், இன்னுமாக இவர்களுக்குப் பின்னர் வந்த மற்றவர்களுக்குச் செய்யப்பட்ட தீமைகள், அநியாயங்கள்குறித்தும் உள்ள கணக்கானது, [R4273 : page 332] ஒன்றுவிடாமல் கணக்கு வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த யுகத்தினுடைய இறுதியில் இக்கணக்குகளானது சரிக்கட்டப்பட (settle) வேண்டும் என்றும், இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதிலானது சுட்டிக்காட்டுகின்றது.

கர்த்தருக்கும், சத்தியத்திற்கும், சகோதர சகோதரிகளுக்கென்றும் ஊழியம்புரிவதில் தங்கள் ஜீவியங்களைப் பலிசெலுத்துவதாக உடன்படிக்கை பண்ணினவர்களாகவும், ஆவியினால் ஆவிக்குரிய சுபாவத்திற்கு ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகவும் இருந்தும், பிற்பாடு தங்கள் உடன்படிக்கையினை அல்லது வாக்குறுதியினை நிறைவேற்றத் தவறுபவர்கள், இதன் காரணமாய் இரண்டாம் மரணத்திற்கு ஏதுவானவர்களாய் இருப்பார்கள்; ஆனால் கர்த்தரோ மிகுந்த இரக்கத்தில் இவர்களை ஒரு “மகா உபத்திரவத்திற்குள்” அனுப்பிவைப்பதற்கும், அந்த உபத்திரவத்தின் காலங்களிலுள்ள பரீட்சைகளில் உண்மையாய் நிற்பவர்களை “ஜெயங்கொண்டவர்களாக” ஏற்றுக்கொள்வதற்கும் திட்டம்பண்ணியுள்ளார். ஆனாலும், இவர்களுடைய பாடுகளானது இவர்கள் நிமித்தமானதல்ல. இவர்கள் மற்றவர்களுடைய பாவங்களுக்காய்ப் பாடுபடுவார்கள் – அதாவது இந்த யுகத்தில் வெளிச்சம் மற்றும் அறிவிற்கு எதிராய்ச் செயல்பட்டதின் நிமித்தம் குவிந்தப் பாவங்களானது, சத்தியத்தினுடைய வெளிச்சம் மிகவும் பிரகாசித்திடும் இந்த நாளில், அர்ப்பணிப்பின்போது தங்களை எதற்கு அர்ப்பணித்திருந்தார்களோ, அந்த மனப்பூர்வமான பலியினை ஏறெடுக்காமல் போனவர்களால் சுமக்கப்பட வேண்டியிருக்கின்றது.

எனினும் இறுதியில் இந்தத் திரள் கூட்டத்தினர் தங்கள் பரீட்சைகளில் ஜெயங்கொண்டு, தங்களைக் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களென நிரூபித்தப் பிற்பாடு, கடைசியில் ஒரு மகா பெரிய ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வார்கள்; இவ்வாசீர்வாதமானது தேவவசனத்தினுடைய அறிவுரைகள் மற்றும் அது முன்வைத்திடும் சிலாக்கியங்களுக்கு இசைவாகத் தங்கள் ஜீவியங்களை விருப்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஒப்புக்கொடுத்தவர்களாகிய சிறுமந்தைக்குக் கர்த்தரினால் கொடுக்கப்படும் ஆசீர்வாதமாகவே இவ்வகுப்பாருக்குக் காணப்படும். இவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் திருமண விழாவில் பங்கெடுக்க அழைக்கப்படுவார்கள். (வெளிப்படுத்தல் 19:9)

திரள் கூட்டத்தினர் பூமிக்குரிய தளத்தில் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதுபற்றி தங்களுக்குத் தெரியும் என்ற தங்களது நிச்சயத்தைக்குறித்துச் சிலர் நமக்குச் சமீபத்தில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். ஆயிர வருஷ யுகத்தின்போது திரளான ஜனக்கூட்டம் ஒன்று திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்கள் மற்றும் சிலாக்கியங்களின்கீழ் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் “பூமியின் குடிகள் அனைவர்” என்றும் உள்ள காரியம் உண்மையே என்பது எங்களது பதில். ஆனால் வெளிப்படுத்தல் 7:9-15-வரையிலான வசனங்களில் இடம்பெறும் திரள் கூட்டத்தினர் விசேஷமாகச் சபையுடன் சேர்ந்து பேசப்பட்டுள்ளனர் மற்றும் இவர்கள் உலகத்தினின்று பிரித்தெடுக்கப்பட்டவர்களாகப் பேசப்பட்டுள்ளனர். இவர்கள் மகா உபத்திரவத்தின் வாயிலாகத் தங்கள் நிலைமைக்கு வந்தடைபவர்களாவார்கள்; ஆனால், உலகத்தாரோ பரிசுத்தத்தின் பிரம்மாண்டமான பெரும்பாதையின் வழியில் நடந்துவருபவர்களாய் இருப்பார்கள்; இந்த வழியில் சிங்கமும், துஷ்டமிருகமும் இருப்பதில்லை; அந்தப் பரிசுத்த இராஜ்யத்தில் கேடுசெய்வாரும், தீங்குச்செய்வாரும் இருப்பதில்லை.

ஒருவேளை திரள் கூட்டத்தாரைக்குறித்து வேதாகமத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லையெனில், நாமும் தேடக்கூடாது அல்லது அநேகர் இரண்டாம் மரணத்திற்குள்ளாகச் செல்லவேண்டியிருக்கும் என்ற காரியத்தினை நாம் துக்கத்தோடே அறிந்துகொள்ள வேண்டியதாய் இருந்திருக்கும். முழுமையாய் அர்ப்பணம்பண்ணி, பரிசுத்த ஆவியினால் புதிய சுபாவத்திற்கு ஜெநிப்பிக்கப்பட்ட அனைவரும், தங்கள் தெரிந்துகொள்ளுதலை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும். தாங்கள் அழைக்கப்பட்ட மகிமைகளுக்குத் தகுதியற்றுப்போன மற்றவர்களோ ஒன்றில் இரண்டாம் மரணத்தில் மரித்துப்போக வேண்டும், அல்லது “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே ஆவி இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக” வேண்டி மகா உபத்திரவங்களிலும், கடுமையான சோதனைகளிலும் தங்கள் புதிய சுபாவங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.”