R3605 – பிராகாரத்தில் திரள் கூட்டத்தினர்

No content found

R3605 (page 232)

பிராகாரத்தில் திரள் கூட்டத்தினர்

THE GREAT COMPANY IN THE COURT

அடுத்ததாக நாம் போக்காட்டினைக்குறித்துப் பார்க்கப்போகின்றோம். இது ஓர் அர்ப்பணிக்கப்பட்ட வகுப்பாரையே குறிக்கின்றது; ஏனெனில் போக்காடும் சரி, கர்த்தருடைய ஆடும் சரி கூடாரத்தின் கதவண்டையில், பலிசெலுத்தப்படுவதற்கென்று கட்டப்படுகின்றன. எனினும் போக்காடானது, பலியாகாத ஒரு வகுப்பாருக்கு, பாளயத்துக்குப் புறம்பே சென்று, காளையோடுகூட நிந்தையைச் சுமக்காத ஒரு வகுப்பாருக்கு, பலிபீடத்தின்மீது கொண்டு செல்லப்படாத கொழுப்பையும், கிருபாசனத்தின்மீது ஒருபோதும் தெளிக்கப்படாத இரத்தத்தையும் உடைய ஒரு வகுப்பாருக்கு அடையாளமாய்க் காணப்படுகின்றது. இது தங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்த தவறுகிற அர்ப்பணிக்கப்பட்டவர்களிலுள்ள திரள் கூட்டத்தினருக்கு அடையாளமாய்க் காணப்படுகின்றது; மேலும் இவர்களைக் கர்த்தருடைய இரக்கமானது, இரண்டாம் மரணத்தினின்று தப்புவிக்கின்றது; காரணம் ஜெயம்கொண்டவர்களாகிய இராஜரிக ஆசாரியக்கூட்டத்தார் மத்தியில் பங்கடையும் அளவுக்கு நீதியின் மீதுள்ள இவர்களது அன்பின் விஷயத்தில் இவர்கள் சரியான அளவு பக்திவைராக்கியத்தினை வெளிப்படுத்தாதிருந்தபோதிலும், இவர்கள் நீதியினை விரும்பி, அக்கிரமத்தினை வெறுத்திருந்தார்கள் மற்றும் அவர்மீது விசுவாசமும் வைத்திருந்தார்கள்.

போக்காட்டினால் சுமக்கப்படும் பாவங்கள்

இந்தப் போக்காட்டின்மீது ஆசாரியன் கைகளை வைப்பதையும், அதன்மேல் ஜனங்களுடைய பாவங்களை அறிக்கையிடுவதையும், பின்னர் அது வனாந்தரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே விடப்படுவதையும் குறித்து வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன. இதன் அர்த்தம், சபையாகிடுவதற்குத் தகுதியற்றுப்போன அங்கத்தினர்கள், அவர்களது மாம்சம் அழிக்கப்பட்டு, அவர்களது ஆவிகள் அல்லது ஜீவன் இறுதியில் இரட்சிக்கப்படத்தக்கதாக, அவர்கள் எதிராளியானவனின் அதிகாரத்திற்கும், வல்லமைக்கும் ஒப்புக்கொடுக்கப்படுகின்றனர் என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், பலிசெலுத்தப்படாத ஜீவனானது அழிக்கப்படுகின்றது மற்றும் அர்ப்பணிப்பிற்கு இசைவாக விரும்பி ஏற்றுக்கொள்ளப்படாத பாடுகளானது சுமத்தப்படுகின்றது; ஒருவேளை அந்தப் பாடுகளானது முறையாய் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒருவேளை கர்த்தருக்கான உண்மை இறுதியில் நிரூபிக்கப்பட்டதானால், மகா உபத்திரவத்தின் வாயிலாய் வரும் அக்கினியினால் இவர்களது ஆவியானது இரட்சிக்கப்படும். “இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் நின்றார்கள். இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” (வெளிப்படுத்தல் 7:9, 14). இந்த லேவியர்கள் ஒரு மகிமையான கூட்டத்தார் ஆவார்கள். ஆனால் இவர்கள் உலகத்தின் இரட்சிப்பிற்குரிய தெய்வீகத் திட்டத்தினுடைய கீழ்த்தளத்தில் இடம்பெறுபவர்கள் ஆவார்கள்; ஆயிரவருஷ யுகத்தின்போது மனுக்குலத்தின் உலகத்தினைச் சீர்த்தூக்கிவிடும் மகிமையான வேலையில் மணவாட்டிக்குக் கீழ்நிலையில் இடம்பெறுபவர்கள் ஆவார்கள்.

இக்காரியத்தினைத் தெளிவாய்க் கிரகித்துக்கொள்ளாத சிலர், நிழல்களையும் நிஜங்களையும் எப்படிப் பொருத்திப்பார்ப்பது என்று கற்றுக்கொள்ளாத சிலர், போக்காடானது ஒருபோதும் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாகப் பிரவேசிக்காத காரணத்தினால், போக்காடானது திரள் கூட்டம் வகுப்பாரினை அடையாளப்படுத்த முடியாது என்று கூறிடலாம். கர்த்தருடைய ஆடும் பரிசுத்த ஸ்தலத்திற்குச் செல்லவில்லை, காளையும் பரிசுத்த ஸ்தலத்திற்குச் செல்லவில்லை என்று நாங்கள் பதிலளிக்கின்றோம். ஒரு மனுஷனாக நமது கர்த்தரைக் காளை அடையாளப்படுத்தினதே ஒழிய, ஆவிக்குரிய ஜீவியாக அல்ல; கர்த்தருடைய ஆடும், கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களை மனுஷஜீவிகள் என்ற விதத்திலேயே அடையாளப்படுத்தினதே ஒழிய, ஆவிக்குரிய ஜீவிகளாய் அல்ல. கவனிக்கப்பட வேண்டிய காரியம், கர்த்தருடைய ஆடானது பலியாகிடுவதற்கென்று காளையினைப் பின்தொடர்ந்துபோனது; ஆனால் போக்காடானது இப்படிச் செய்யவில்லை என்பதே ஆகும். கர்த்தருடைய ஆட்டின் இரத்தமானது பிரதான ஆசாரியனால் கிருபாசனத்தின் மீது தெளிக்கப்பட்டது; ஆனால் போக்காட்டின் இரத்தமானது இப்படியாகத் தெளிக்கப்படவில்லை.

ஓர் உபத்திரவ காலம்

ஜனங்களுடைய பாவங்களானது போக்காட்டின்மீது அறிக்கைப்பண்ணி, சுமத்தப்பட்ட காரியத்தினுடைய அர்த்தத்திற்கு வருகின்றோம்: போக்காட்டினுடைய தலையின்மீது அறிக்கைப்பண்ணி சுமத்தப்பட்ட பாவங்களானது, காளை மற்றும் கர்த்தருடைய ஆட்டின் இரத்தத்தினைக்கொண்டு நிவிர்த்தி செய்யப்பட்ட பாவங்களாய் நிச்சயமாக இருப்பதில்லை. காளை மற்றும் கர்த்தருடைய ஆட்டின் இரத்தத்தினால் உண்டான நிவிர்த்தியானது, ஆதி பாவத்திற்கும், இதனால் ஆதாமின் சந்ததியினருக்கு உண்டான குறைவுகள் மற்றும் அபூரணங்கள் அனைத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பாவங்களைத் தவிர்த்து, வேறு பாவங்களும் இருக்கின்றன; இவைகளுக்குப் பாவநிவாரணம் செய்யப்படவில்லை, இவைகள் மன்னிக்கப்பட முடியாது; மேலும் இவைகளின் காரணமாய்த் திவ்விய கோபாக்கினையானது ஏறக்குறைய கடந்த ஆறாயிரம் ஆண்டுகளாகவே வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது மற்றும் எந்த ஜாதியார் தோன்றினது முதற்கொண்டு இராததும், இனிமேலும் இதுபோன்று வராததும், இப்பொழுது நெருங்கி வந்துகொண்டிருக்கிறதுமான மகா உபத்திரவ காலத்தில் இந்தக் கோபாக்கினையானது விசேஷமாய் வெளிப்படும். மனுஷர்கள் தங்களுக்குக் கிடைத்த அறிவு, வாய்ப்புகள் மற்றும் சிலாக்கியங்களுக்கு ஏற்ப ஜீவிக்கவில்லை என்பதினால், உலகத்தின்மீது கோபாக்கினையை உடைய பொற்கலசங்களானது ஊற்றப்படும் என்ற விதத்தில் இந்த உபத்திரவ காலமானது பேசப்படுகின்றது. இது இயல்பான காரணங்களினால் வரும் இயல்பான விளைவுகளாய்க் கடந்துவரும்; எனினும் அவை உலகத்தின்மீது தவறுக்கான தண்டனையாகக் கடந்துவரும். இதில் திரள் கூட்டத்தினர் விசேஷித்த இடத்தினை, விசேஷித்த பங்கினைப் பெற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் புரிந்திருக்கின்றோம். இந்த ஒரு காலத்தில் ஒவ்வொரு மனுஷனுடைய கிரியையும் அக்கினியினால் பரீட்சிக்கப்படும்; இது சபைக்கு விசேஷமாய்ப் பொருந்துகின்றதாய் இருக்கும்.

உண்மைதான் இந்தத் திரள் கூட்டத்தின் வகுப்பாரிலுள்ள சிலர், இவர்களது மாம்சம் அழிக்கப்படத்தக்கதாகவும், இவர்களது ஆவியானது இரட்சிக்கப்படத்தக்கதாகவும் (அதாவது ஆவிக்குரிய ஜீவிகளென இரட்சிக்கப்படத்தக்கதாகவும்) வேண்டி இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதிலும் சாத்தானிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால் (முற்காலங்களிலுள்ள) இவர்களின் எண்ணிக்கையானது, இந்தக் காலங்களில் நாம் அனுபவிக்கும் மகா வெளிச்சம், வாய்ப்புகள் மற்றும் சிலாக்கியங்களின்கீழ்த் தங்களை அர்ப்பணம்பண்ணி, ஆனாலும் தங்கள் பலியினை முழுமையாய் ஏறெடுக்காமல் பின்வாங்குகிறவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, சிறிய எண்ணிக்கையாகவே காணப்படுகின்றது. இந்தத் திரள் கூட்டத்தினர் சம்பந்தமான பாவநிவாரண நாள் காட்சியின் இந்தப் பாகமானது, மற்ற வகுப்பார்பற்றின காட்சி பாகத்தினின்று வேறுப்படுகிறதில்லை. உதாரணத்திற்குக் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் கடைசி அங்கத்தினன் கர்த்தரோடுகூடப் பாடுபட்டு முடிவதுவரையிலும் – கர்த்தருடைய ஆட்டின் இரத்தமானது கிருபாசனத்தில் தெளிக்கப்படும் இறுதி வேலை நிறைவடைவது வரையிலும் – கடைசி அங்கத்தினன் அர்ப்பணம்பண்ணுவதோடு மாத்திரமல்லாமல், தன் பலியினை நிறைவேற்றிடுவது வரையிலும் – கர்த்தருடைய ஆட்டின் பலியானது நிறைவடைந்ததாகப் பார்க்கப்படுகிறதில்லை.