R4268 (page 324)
“ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”(எபேசியர் 4:32)
“என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் / ஆரம்பத்திலேயே என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.”(நீதிமொழிகள் 8:17)
[R4269 : page 326]
ஓய்வுநாள் பாடசாலையின் குழு, இந்த நாளின் தியதியினை உலகம் முழுவதிலுமுள்ள ஓய்வுநாள் பள்ளியில் உள்ள ஜனங்களினால் தேவனுக்கு விசேஷித்த ஜெபத்தினை ஏறெடுக்கும்படியாக நியமித்துள்ளது. மேலே நாம் பார்த்துவரும் பாடத்திற்கும், இவ்விஷயத்திற்கும் தொடர்பு இல்லை என்றாலும், “என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்;; அதிகாலையில் / ஆரம்பத்திலேயே என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” என்ற நமது இரண்டாம் ஆதார வசனம் மிகவும் பொருத்தமானதாய்க் காணப்படுகின்றது. இது ஞானம் தொடர்பாகப் பேசப்பட்டுள்ளது, தேவன்தாமே ஞானத்தின் உருவமாய் இருக்கின்றார்; ஆகையால் இது தேவனுக்குப் பொருந்தும். இதுபோலவே தேவனுடைய கிருபையைக்குறித்துக் கேள்விப்படுவதற்கான சிலாக்கியம் பெற்றிருப்பவர்களுக்கு, கிறிஸ்து ஞானமாய் இருப்பார். அப்போஸ்தலர் கூறுகிறதுபோல நீதியுள்ளவர்கள், அவரை முறையாய் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் “கிறிஸ்துவே தேவனால் நமக்கு ஞானமுமானார்.”
சுவிசேஷ அழைப்பானது விசேஷமாய்ப் பிள்ளைகளுக்கென்று விடுக்கப்பட்டது என்றோ, நமது கர்த்தருடைய போதனைகள் விசேஷமாய்க் குழந்தைகளினுடைய மனதிற்கு ஏற்றது என்றோ, அவர் பிள்ளைகளுக்குப் போதித்தார் என்றோ, அவரோ அல்லது [R4270 : page 326] அப்போஸ்தலர்களோ ஞாயிறு பள்ளிகளை நிறுவினார்கள் என்றோ நம்முடைய கருத்துக்கள் காணப்படுகிறது இல்லை. (ஆறாம் தொகுதியில் ஞாயிறு பள்ளி வேலைகள்குறித்த நமது விளக்கங்களைப் பார்க்கவும்). எனினும் முப்பது வயதை அடைவதுவரையிலும் சத்தியத்தின் ஊழியக்காரர்களாகிட முடியாத அளவுக்கு கிறிஸ்துவையும், அப்போஸ்தலர்களையும் யூதருடைய நியாயப்பிரமாணத்திலுள்ள வரையறைகள் தடைப்பண்ணினாலும், அத்தகைய வரையறைகள் இப்பொழுது செயலாக்கத்தில் இல்லை, ஆகையால் எவ்வளவுதான் வயதானவராக இருப்பினும், எவ்வளவுதான் சிறியவராக இருப்பினும் “கேட்க செவியுள்ளவன் கேட்கக்கடவன்” என்று நாம் கூறுவது சரியே.
தங்கள் பிள்ளைகள் மிகச் சிறந்த விதத்தில் மதத்தின் அடிப்படையிலுள்ள போதனைகளையும், அன்றாட ஜீவியத்தில் பெற்றோரின் முன்மாதிரியையும் பெற்றுக்கொள்ளத்தக்கதாகப் பார்த்துக்கொள்ளும்படிக்கு எங்கும் காணப்படும் சத்தியத்திலுள்ள அருமையான சகோதர சகோதரிகளை நாம் ஊக்குவிக்கின்றோம். இல்லத்தில் ஒரே ஒரு குழந்தைதான் இருப்பினும் ஒவ்வொரு இல்லமும் அதன் ஞாயிறு பள்ளி வகுப்பினைப் பெற்றிருக்கவேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளினால் பங்கெடுக்கப்படும் ஐக்கியத்தின், உறவின் மற்றும் துதித்தலின் அமைதியான, புனிதமான மணி நேரங்கள் காணப்பட வேண்டும் சந்தோஷத்திலும், அன்பிலும் மற்றும் சத்தியத்திலும் காணப்படும் சிலரின் குடும்பங்களில் முறையான குடும்ப ஜீவியத்தினுடைய செல்வாக்கினை கவனிப்பதற்கு அருமையாய் உள்ளது. அனைவரும் இப்படியாகத் தீர்மானித்தவர்களாகி, தேவகிருபையினால் நிறைவேற்றினார்களானால் அது என்னமாயிருக்கும்!
குழந்தைப்பருவத்தில் ஓர் அருமையான நிலை உள்ளது – அதன் கள்ளங்கபடற்ற நிலைமை, அதன் விசுவாசம் அருமையானதாகும்; குழந்தையின் மனமானது சத்தியத்திற்கும், அதன் ஆவிக்கும்கூட, அர்ப்பணிப்பின் ஆவிக்கும் ஆச்சரியப்படும் விதத்தில் இணங்குகின்றது. நம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் சிறுவயது முதற்கொண்டு – சகல ஈவுகளையும் அருளுகிறவரென ஆண்டவரை அன்புகூர்ந்திடுவதற்கும், அவர் சித்தத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கும், தங்களுடைய சின்னஞ்சிறியவைகள் அனைத்தையும் அவருக்கு அர்ப்பணித்திடுவதற்கும் கற்றுக்கொடுக்கப்பட்டால், அது எத்துணை ஆசீர்வாதமாய்க் காணப்படும்! இப்படியாகப் போதிக்கப்படும் பிள்ளைகள் பெறும்பாலும் அவர்களது பெற்றோர்களுக்குப் போதிப்பவர்களாகி, அர்ப்பணிப்பின் உண்மையான ஆவியினை வெளிப்படுத்துகிறவர்களாய் இருப்பார்கள். நாங்கள் இங்கும் அங்குமாகப் பல பிரயாணங்களில் கடந்துசெல்கையில், இப்படியாகச் சிறுவயதிலேயே கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மற்றும் அவரது சித்தத்திற்கு இசைவாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ள சிறியவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய பிள்ளைகளில் சிலர் தங்களுக்குக் கிடைக்கும் எந்தக் காசுகளையும் மிட்டாய்கள் வாங்குவதற்குப் பயன்படுத்திடுவதற்குப் பதிலாக, அப்பணமானது கர்த்தருக்காகக் கொடுக்கப்படவேண்டிய பணமாகவும், ஜனங்கள் வேதத்தைப் புரிந்துகொள்வதற்கும், தேவன் அன்புள்ளவராய் இருக்கின்றார் என்று புரிந்துகொள்வதற்கும் உதவப்படும்படிக்கு கைப்பிரதிகளை அச்சிடும்படி அவ்வப்போது சகோதரர் ரசல் அவர்களுக்கு அனுப்பிவைக்கவேண்டிய பணமாகவும் இவர்களால் சேமித்து வைக்குமளவுக்கு, மிகப் பலமாய் வளர்ச்சிப்பெற்றுள்ள அர்ப்பணிப்பின் ஆவியினை உடையவர்களாய் இருக்கின்றனர். இந்த அருமையான குழந்தைகளுடைய காசுகளை நாம் நாடாமல், மாறாக இவர்களுடைய நலன்குறித்தும், இவர்கள் ஜீவியத்தில் கடந்துவரும் மாபெரும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்குறித்தும், இவர்களது ஆறுதலுக்காகவும், இவர்களது சந்தோஷத்திற்காகவும், வரவிருக்கிற நாட்களில் இவர்களோடுகூட நிச்சயமாய்க் கடந்துவரும் அந்த மாபெரும் ஆசீர்வாதங்கள் குறித்தும்தான் நாங்கள் நோக்கமாய் இருக்கின்றோம். இத்தனை சிறுவயதிலேயே தேவனுக்குக் கொடுக்கப்பட்ட சிறிய அன்புள்ள இருதயங்களானது நிச்சயமாக ஓர் ஆசீர்வாதத்தினையும், உலகத்திலுள்ள மிகுதியான தீமைகளிடமிருந்து ஒரு பாதுகாப்பையும் கண்டடையும்.
இப்படியாகச் சூழ்நிலையை முழுமையாகச் சரியாய்க் கிரகித்துப் புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே அர்ப்பணிப்பின் ஜீவியத்தையும், சத்தியத்திற்காய்ச் சுயத்தை வெறுத்த ஜீவியத்தையும் துவங்கியுள்ள சிறுபிள்ளைகளில் அநேகர் இப்பொழுது மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் முதிர்ச்சியடைந்திருக்கின்றனர்; மேலும் பன்னிரண்டு மற்றும் பதிமூன்றாம் வயதுகளை அடைந்தபோது தங்களுடைய அர்ப்பணிப்பை அடையாளப்படுத்திடுவதற்கான வாய்ப்பைக்குறித்து வேண்டிக்கொண்டவர்களாக இருக்கின்றனர்; மேலும் சுவிசேஷத்தினுடைய அடிப்படைகளைக்குறித்த விரிவான அறிவைப் பெற்றிருப்பதற்கான தெளிவான சான்றையும், கர்த்தருக்கு ஒப்படைக்கப்படும் பலியைக்குறித்த இருதயப்பூர்வமான உணர்ந்து கொள்ளுதலுக்கான தெளிவான சான்றையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
“உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று நமது கர்த்தர் கூறியுள்ளார். இது போலவே உலகத்தாரை ஆசீர்வதிப்பதற்கென்று ஆயிரவருட இராஜ்யமும், அதன் வாய்ப்புகளும் ஏற்பாடுபண்ணப்பட்டுள்ளபடியினால் நம்முடைய ஜெபங்கள் உலகத்தாருக்காக ஏறெடுக்கப்படவேண்டாம்; மாறாக அவருக்கு அர்ப்பணம்பண்ணியுள்ளவர்கள், கிறிஸ்துவுக்குள்ளான நமது சகோதர சகோதரிகள் சார்பாக நமது விண்ணப்பங்கள் ஏறெடுக்கப்படுவதாக; மேலும் இது அர்ப்பணம்பண்ணியுள்ளவர்களில் வயதானவர்களையும், இளையவர்களையும் உள்ளடக்கிடும். நம்முடைய பராமரிப்பு மற்றும் அறிவுரையின் கீழ்ப் பிதாவினால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களையும்கூடப் பொதுவான விதத்தில் நாம் ஜெபத்தில் உள்ளடக்கிக்கொள்ளலாம்; அவர்களது மேலான நன்மைக்கென்றுள்ள தேவனுடைய இந்த அனுகூலமான ஏற்பாடுகளுக்காகவும் நாம் ஜெபிக்கலாம், மேலும் இவர்களுக்குக் கர்த்தருடைய செய்தியைச் சிறந்த விதத்தில் முன்வைத்திடுவதற்கும், நம்முடைய அன்றாட நடத்தையிலும் மற்றும் நம்முடைய பிள்ளைகளை நாம் நடத்தும் விஷயத்திலும் இச்செய்தியினுடைய சாரத்திற்கு நாம் உதாரணங்களாகக் காணப்படுவதற்கும் தேவையான ஞானத்தையும், கிருபையையும் நமக்காகக் கேட்டுக்கொள்ளலாம்.