Q459:1 – விவாகம் – கணவனின் பணத்தைச் செலவு செய்தல்

No content found

(Q459:1)

விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்

MARRIAGE--Re Spending Husband's Money.

கேள்வி (1909)-1- மனைவியானவள் தனக்குச் சொந்தமாயிருக்கும் பணத்தை, அவளது கணவனுடைய விருப்பங்களுக்கு மாறாக பயன்படுத்தும் உரிமை பெற்றிருக்கின்றாளா?

பதில் – ஒருவேளை கணவன் கர்த்தருடனான உறவில் நிறைவாயும், முழுமையாயும் காணப்பட்டு, மனைவியும் இப்படியாகவே காணப்படுவாளானால், அப்பொழுது பிரச்சனை இருப்பதில்லை மற்றும் இங்கு எழும்பியுள்ளதான இக்கேள்வியானது எழும்புவதுமில்லை. ஆனால் காரியங்கள் எப்போதும் இப்படியாக இருப்பதில்லை மேலும் எனது எண்ணம் பின்வருமாறு: சட்டங்கள் மற்றும் பொதுவாய் நிலவிவரும் வழக்கத்தின்படி ஒரு கணவன், மனைவியை விவாகம்பண்ணுகையில், அவளைத் தனது பங்காளியாக நடத்த ஒப்பந்தம்பண்ணுகின்றார்; மேலும் கணவனானவன், மனைவியின் உரிமையின் கீழ்க்காணப்படும் சொத்துக்கள் விஷயத்தில் ஏதேனும் விசேஷித்த ஒப்பந்தம் இருந்தால் தவிர மற்றப்படி சொத்துக்களைப் பொருட்படுத்தாமலேயே, அவளை இப்படி நடத்த ஒப்பந்தம்பண்ணுகின்றார். இப்படியான சொத்து ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றாலும், புருஷன் அவளைத் தன் துணைவியாக எடுத்துக்கொண்டுள்ளார்; அதுவும் அவள் வசத்தில் காணப்படும் சொத்துகள் எதையும் பொருட்படுத்தாமல் அவளைப் பராமரிப்பதற்குரிய பொறுப்பாளியாகுகின்றார் என்று புரிந்துகொள்ளலாம். இது கணவன் மற்றும் மனைவிக்கிடையே நியாயமான ஒப்பந்தங்களும் நிலவுவதையும்கூட அர்த்தப்படுத்துகின்றதாய் இருக்கும்; ஒருவேளை கணவன் வியாதிப்பட்டால், குடும்பத்தின் தேவைகளை மனைவி ஒருவேளை சந்திக்க வேண்டுமெனில், மனைவியானவள் தன் வழிவகைகளைப் பயன்படுத்துவது மாத்திரமல்லாமல், ஒருவேளை அவளுக்கென்று குடும்பம் இல்லாமல் இருக்கையில், தன்னைப் பாதுகாக்க வேண்டிய கணவனும் சரீர ரீதியில் பெலவீனப்பட்டு இருக்கையில், கணவனுக்காக எவ்வகையான தேவைகளுக்குமென்று பணிவிடைச் செய்வதற்கும் அவள் தன் ஜீவியத்தையே ஒப்புக்கொடுத்து விடுவதும் அவளுக்குரிய சிலாக்கியமாகும்.

ஆனால் இப்படியான தேவை ஏதுமில்லையெனில், மேலும் கணவன் தனக்கும், மனைவிக்குமெனத் தேவைகளைத் திரளாய்ச் சந்திக்க முடிகிறவராய் இருப்பாரெனில், மனைவியின் உரிமையினுடைய கீழ்க்காணப்படும் எதுவும் அவருக்கு அவசியமில்லையெனில் . . . மனைவிக்குத் தனிப்பட்ட விதத்தில் வந்துள்ளதான அந்தப் பணத்திற்கு, தான் உக்கிராணக்காரியாக இருப்பதாக மனைவி எண்ண வேண்டும் என்றும், கர்த்தரிடத்திலும் அவள் பொறுப்பு ஒன்றினைப் பெற்றிருக்கின்றாள் என அவள் உணர வேண்டும் என்றும், அவள் கணவன் அவளோடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நான் எண்ணுகின்றேன்.